ஊறுகாய்
ஊறுகாய்
வினைத்தொகை
பொருள்:
முக்காலத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஊறுகாயே, அந்த ஆதிபகவன்.
ஊறிய, ஊறும். ஊறப்போகும் காயல்லவா ஊறுகாய். எனவே, முக்காலமும் தன்னுள் ஏற்றிருக்கும் இறைவனே ஊறுகாய்.
மறை நூல்களில், மறைபொருளாய் உள்ள தத்துவத்தை 'தத்தக்கா பித்தக்கா' என பிள்ளை அறிவு கொண்டு, ஊறுகாய் ஆக்கி, அவரவர் ஆன்மீக, நாத்திக நாட்டத்திற்கு ஏற்ப தொட்டுக்கொண்டிருக்கிறோம்.
மறைபொருள்
வினைத்தொகை
இயற்கையில் அல்லது இறைமையில் ,
மறைந்து நிற்கும் உண்மைகளை விளக்கவும் [இறந்த காலம்]
மறைந்து நிற்கும் உண்மைகளை அறியவும் [நிகழ் காலம்]
மறைந்து நிற்கும் உண்மைகளை உணரவும் [எதிர் காலம்]
மறை நூல்கள் உதவுகின்றது.
'செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே'
காதிலே தேன் ஊற்றுவதா? என்று வெகுண்டெழும் நாத்திகம்.
தேன்சுவை போன்றதின்பம் என மகிழ்வது ஆத்திகம்.

மறை என்றால் – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்.
மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் மந்திரங்கள்.