மனம்
இரண்டு மனம் வேண்டும்
உறவில் வாழவொன்று
உயிரில் வாழவொன்று
பொருள்:
ஐம்புலன்கள் தொடர்ந்து வெளிப்புற நடப்புகளை
உயிருணர்விற்கு அனுப்பிக்கொண்டே உள்ளது.
மனம் இந்த செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டு,
மயங்கி, அதற்கேற்ற செயல்களை ஓய்வின்றி
அரங்கேற்றிக்கொண்டே உள்ளது. சமயங்களில்,
கிடைக்கும் செய்திகளை தவறாக அறிந்து, இன்னும்
மீளாத்துயரமாக வாழ்வில் உறவை வடிவமைத்துக்கொள்கிறது.
ஐம்புலன்களின் அனுபவமே வாழ்க்கை என்ற மயக்கத்தில்
வாழ்வதால், நாம் காணும் யாவும் மாயை என்று கூறினர்,
உயிர் வழி அறிந்தோர்.
உயிரில் இருந்து அறியக்கூடிய செய்திகளை மனம்
உணரும் வாய்ப்பே இல்லாமல், இடைவெளி இன்றி, உறக்கத்திலும் நடந்துகொண்டே உள்ளது.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
-திருக்குறள்
பல பிறவிகளில் நாம் பெற்ற அறிவு அறியப்படாமலே
வீணாகிறது. உயிருணர்வின் அனுபவத்தை மனம் பெற்றால், நம் உண்மை அறிவு வெளிப்படும். நுண்ணிய நூல் பல கற்பதின் பொருள் விளங்கும், மானிட வாழ்வும் சிறக்கும்.
ஹேய் விகாரியே
உன் குட்டி பேபி நான்..
ப்ளெஷ் மி.. ப்ளெஷ் மி..
பொருள்:
'ஒய் திஸ் கொலவெறி' தமிழ்ப்பாடலை தண்டி வெற்றி பெற்ற 'ஹேய் கோலி சோடாவே' எழுதிய தமிழ் புலவன் எழுதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து.
இன்றைய நிலையில், தமிழ் மக்களிடம் விரைவாக சென்றடையும் வழி இது. இதுதான் தமிழ் என்று திரைப்படப் பாடல்கள் உலகிற்கு அறியப்படுத்துவதை கண்டித்தே இந்தப்பதிவு.
சரியான புரிதல். அந்த NO MIND-ஐ அறிந்து கொள்ளவே, நம் முன்னோர்கள் அரிய பொக்கிஷமாக அறிவு நூல்களை கொடுத்து சென்றுள்ளார்கள். அதை இந்த பிறவியில் பெற்ற அனுபவ அறிவை மட்டும் கொண்டு புரிந்து நடப்பது கடினம்; பல பிறவிகளில் நாம் பெற்ற அறிவின் துணையும் வேண்டும் என்பதே என் கருத்து.

No comments:
Post a Comment