விதி
விதி
விக்ரமாதித்தன்
சுமக்கும்
வேதாளம்
பொருள்:
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதால், 'தேரா மன்னா! செப்புவது உடையேன்' என்று சூழுரைத்த மங்கை கண்ணகி, கோவலன், நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி என காவு வாங்கியது.
ஊழ்வினை எனப்படும் விதி, உயிர் ஒரே ஒரு சிற்றறையாக, கருவறையில் [Atomic Nucleus] உருவெடுக்கும்போதே, தாய், தந்தை மரபணுக்களோடு இணைந்து குடிகொள்கிறது.
விதியை மதியால் வென்று திரும்பி பார்த்தால், 'இதுதான் உன்விதி' - என்ற விக்கிரமாதித்தனின் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி கெக்கலிக்கும்.
தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
- சிலப்பதிகாரத்தில் கண்ணகி
நாம் வாழும் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது என்னவென்று தெரியாததுதான் வாழ்க்கையின் சுவாரஷ்யமே! எல்லாம் விதி..
நாம் வாழும் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அது என்னவென்று தெரியாததுதான் வாழ்க்கையின் சுவாரஷ்யமே! எல்லாம் விதி..
No comments:
Post a Comment