உனக்குள் ஒரு பேரொளி
மேகங்கள் ஓடி வரும்
மின்னல் உண்டு
தேகங்கள் ஆடி வரும்
தெய்வம் உண்டு
உப்பிருக்கு கடலிலே
இனிப்பிருக்கு தேனிலே
தெளிவிருக்கும் மனதிலே
பிரித்துப் பார்க்கும் எளிதிலே
இல்லையென்று சொல்லலாம்
சுவைத்துப் பார்த்தால் தெளியலாம்
உருவமில்லா பேரொளியை
உனக்குள் தவத்தால் அறியலாம்
உன்னை நான் பார்க்கும்போது
ஒளியைத்தான் பார்க்கிறேன்
ஒளியில்லா உலகமெனில்
ஒன்றுமில்லா அவனி அது
மேகங்கள் ஓடி வரும்
மின்னல் உண்டு
தேகங்கள் ஆடி வரும்
தெய்வம் உண்டு
திருமந்திரம் 1797
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?
மனம் தன்னை உணர்ந்த நாளில் இருந்தே இருப்பவன் இறைவன். அவன் புருவ நெற்றியில் இருக்கிறான் என்று தெரியும். ஆனால், அவனைப் பார்க்க முடியாத மயக்க நிலையில் இருக்கிறார்கள். உடலுக்குள்ளே பேரொளியாய் உறைபவன் இறைவன். உயிராய் இறைவன் உனக்குள் இருக்கிறான் என்பதை நீ அறியாமல் யாரால் அறிய முடியும்?
தவத்தின் வலிமையால் இறைவனை, உனக்குள்ளே பேரொளியாய்க் காணலாம்.
*** *** *** *** ***
வீரா.. 171026