கீழ்மை குணம் TN 2026
திருக்குறள்: 1080
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
கீழ்மை குணம் கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.
தி. மு. க.:
பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.
அ. தி. மு. க.:
பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.
காங்கிரஸ்:
வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக, மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள்.
இ.யூ.மு.லீ.:
கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.
வி.சி.க.:
சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள்.
கம்யூனிஸ்ட்கள்:
காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரு பக்கமும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.
த.வெ.க.:
கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி ஆக்கியவர்கள்.
No comments:
Post a Comment