Monday, May 25, 2026

கீழ்மை குணம் TN 2026

கீழ்மை குணம் TN 2026 

திருக்குறள்: 1080

எற்றிற்கு  உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து.

கீழ்மை குணம்  கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப  சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.

தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று  ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.

அ. தி. மு. க.: 
பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.

காங்கிரஸ்: 
வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக,  மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள். 

இ.யூ.மு.லீ.: 
கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.

வி.சி.க.: 
சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள். 

கம்யூனிஸ்ட்கள்: 
காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என  இரு பக்கமும்  ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.

த.வெ.க.: 
கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி                                 ஆக்கியவர்கள்.











  

கீழ்மை குணம் TN 2026

கீழ்மை குணம்  TN 2026   திருக்குறள்: 1080 எற்றிற்கு  உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்  விற்றற்கு உரியர் விரைந்து. கீழ்மை குணம்  கொண்ட கயவர்கள் த...