Friday, October 9, 2026

ஆதிநாதம்

ஆதிநாதம் 


காலையில் பூக்கும் பூக்களெல்லாம் 
கடவுளின் மலரடி தொழுவதற்கு 
மாலையில் மலரும் மல்லிகையோ 
இரவினில் இன்பம் சேர்ப்பதற்கு

ஆதியில் தோன்றிய இறைவன் 
நாதத்திற்கு  அவனே ஆதாரம் - ஓங்கார 
நாதத்திற்கு  அவனே ஆதாரம்

மூன்றெழுத்தில் பிறந்தது ஓங்காரம் 
முதலெழுத்தே அதிலே அகாரம் - அங்கே 
முதலெழுத்தே அதிலே அகாரம் 

அகிலம் தோன்றிய முதல்நாளே 
அகரமும் பகவனும் ஆதிநிலை - உலகில் 
அகரமும் பகவனும் ஆதிநிலை 

காலையில் பூக்கும் பூக்களெல்லாம் 
கடவுளின் மலரடி தொழுவதற்கு 
மாலையில் மலரும் மல்லிகையோ 
இரவினில் இன்பம் சேர்ப்பதற்கு


திருக்குறள் - 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

பொருள்:

ஓங்கார நாத வடிவான ஆதி பகவனும், ஓங்கார நாதத்தின் முதல் எழுத்தான அகரமும் உலகில் முதலில் தோன்றியவை.


வீரா 091026


No comments:

Post a Comment

ஆதிநாதம்

ஆதிநாதம்  காலையில் பூக்கும் பூக்களெல்லாம்  கடவுளின் மலரடி தொழுவதற்கு  மாலையில் மலரும் மல்லிகையோ  இரவினில் இன்பம் சேர்ப்பதற்கு ஆதியில் தோன்றி...