Friday, August 30, 2019

ஒன்றில் ஒன்றினால்

ஒன்றில் ஒன்றினால்


 

கேள்வி: ஒண்ணும் ஒண்ணும் என்ன?

                   'ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா' - கூட்டல்

                    'ஓரோண் ஒண்ணு' - பெருக்கல், வகுத்தல்

                   'ஒண்ணும் ஒண்ணும் பதினொண்ணு' - பார்த்தல்

                   'நீ பாதி நான் பாதி கண்ணே!' - பங்காளர்கள்

                  'ஒண்ணுமே புரியலே  ஒலகத்திலே' - கழித்தல்

எது சரியான பதில் என்பது கேள்வியல்ல. பதில் சொல்லவே கேள்வி என்றெண்ணாமல், கேள்வி சரியானதா என்று கேட்கும் காலத்தில் நம் தலைமுறை. AI கற்பதில், உபயோகிப்பதில் முக்கியமானது சரியான கேள்வி கேட்பதே.

திருமந்திரம்-249
வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.

                                                                     
ஒண்ணு:  மலையிடை நின்றிருக்கும் வானீர்,  அருவியாக வழிகிறது என்றுரைக்க தேவை இல்லை.

இன்னொண்ணு: நம்முள்ளே [யோகத்தால், தலை உச்சியில்] ஊறுகின்ற
நுண்ணிய தெளிந்த நீரான வானீர், நுரையோ, அழுக்கோ இல்லாமல்,  இறை நமக்களித்த அமிர்த ஊற்றாகும்.

திருக்குறள்-20
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
                                                                            

ஒண்ணு: நீரின்றி அமையாது உலகம்.

இன்னொண்ணு: யாராயிருந்தாலும், தலையாகிய வானத்தில் யோக நிலை இல்லாவிட்டால், வானீரமுதம் உண்டாகாது.

'அதாண்ணே இது' - இனிமேல் யாரும் இன்னொண்ணு எங்கேன்னு கேக்காதீங்க. அப்படித்தான், மேற்சொன்ன குறளுக்கு, பொருள் எழுதி இருக்கிறேன்.

பின் குறிப்பு: யாரும் திருக்குறள் தேர்வில் இந்த பொருள் எழுதி, மதிப்பெண் கிடைக்கவில்லை என்று  குறை கூற வேண்டாம்.






No comments:

Post a Comment

நீண்ட நாள் வாழ ஆசையா?

நீண்ட நாள் வாழ ஆசையா? நீரினில் சோற்றினில்  உடலை வளர்க்கிறோம்  பாரினில் மேனியே மெய்  என்றிருக்கிறோம்  காற்றினில் உயிரினில் கடவுள் இருக்கிறான்...