Sunday, August 25, 2019

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ

இலக்கணம் மாறுதோ
இலக்கியம் ஆனதோ


'அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு, தங்கள் தினசரி மற்றும் பதிப்புகளில்
'கருப்பு' என்பது  'கறுப்பு'  என்று அச்சாகி வருவதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வர விழைகிறேன்.'

இதற்கு பதில் வரலாம், வராமலும் போகலாம்.

தமிழ் எழுத்துக்கள்,  வல்லினம், மெல்லினம் மற்றும் இடையினம் என்னும் மூன்று பிரிவுகளாக உள்ளதின் அவசியம், அவர் அறிவு நிலைக்கு எட்டாமலும் இருக்கலாம்.

ஆனால், தமிழ் எழுத்துக்களின் முக்கியம் பற்றி அறிய முற்படுபவர்            கண்டிப்பாக திருமூலரின், திருமந்திர மாலை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

எண்வகை கன்மங்கள் 45 வகையின் விரிவாக 323 மந்திரங்கள் தமிழ் எழுத்துக்களின் அடிப்படையில், கணிக்கப்பட்டிருப்பது தமிழுக்கு  இருக்கக்கூடிய அறிவியல் ரீதியான சிறப்பாக அமைந்திருக்கிறது.

சொல்லிய எட்டுக்குந் தோன்றிய துருவமும்
நல்லறை எட்டினில் நாடும் இலக்கமும்
நல்ல பதினாறறைமுதல் நாலினிற்
சொல்லும் பகவத தோன்ற விட்டதே.
                                                         - திருமந்திர மாலை


மொத்தம் நான்கு எழுத்துக்கள்: ப க வ த

வெறும் நான்கு வரிப்பாடல்களில், எழுத்துக்களின் நுண்ணிய பங்களிப்பில், ராசிகள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் மந்திரங்கள் பற்றிய தெளிவான
விளக்கங்கள்.

எழுத்துக்களின் வரிசை முறையில் எண்களின் பங்களிப்பும் சேர, ஒரு மாயா ஜாலமே நடத்துகிறது திருமந்திர மாலை.

இந்த சிறப்பு தொடர வேண்டுமானால், எழுத்துப்பிழை வராமல் எழுத கற்றுக்கொள்வதே தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப்பெரிய தொண்டாக அமையும் என்பது திண்ணம்.






2 comments:

  1. தயவு கூர்ந்து முழுமையான விளக்கத்துடன்
    இது எத்தனையாவது தந்திரத்தில் வருகிறது என்பதையும் கூறவும்
    நன்றி

    ReplyDelete
  2. திருமந்திரம் கற்க விழைகிறேன்
    தங்களுடைய Blog தெய்வாதீனமாக என் கண்ணில் பட்டது

    ReplyDelete

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...