மனதின் அக்ஷரம் மந்திரம்
மாணவர் மன்றம் தமிழ் தேர்வு நடந்து கொண்டிருந்தது.
தமிழில் எழுதவும்: AUSTRALIA
1. ஆஸ்திரேலியா
2. அவுஸ்திரேலியா
3. ஆஸ்ட்ரேலியா
'சார்.. தமிழில் இல்லாத எழுத்தில் எப்படி எழுதுவது?. எப்படி எழுதினாலும் 'ஸ்' எழுத்து இல்லாமல் எழுத முடியவில்லை. அவுத்திரேலியா என்று எழுதலாமா?'
பெயர் சொல்லை தமிழ்ப்படுத்தினால் அபாயம். HOMEBUSH என்ற பெயரை எப்படி தமிழில் எழுத முடியும் என்று சிந்தித்து பாருங்கள்.
ஹோம்புஷ் என்பதை எப்படி தமிழாக்கம் செய்வது?
கிரந்த [ஆதி] தமிழ் எழுத்துக்களை எப்படி சிறப்பு தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வது?
ஐம்பத்தொரு அக்ஷரங்களில் ஒன்றாக இருந்த, தமிழில் சிறப்பு எழுத்துக்களாக அறியப்பட்ட எழுத்துக்கள், ஏதோ ஒரு கால கட்டத்தில் தமிழ் இழந்துவிட்ட எழுத்துக்கள், இன்று வடமொழி எழுத்துக்களாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
கிரந்த [ஆதி] தமிழ் எழுத்துக்களை எப்படி சிறப்பு தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வது?
ஐம்பத்தொரு அக்ஷரங்களில் ஒன்றாக இருந்த, தமிழில் சிறப்பு எழுத்துக்களாக அறியப்பட்ட எழுத்துக்கள், ஏதோ ஒரு கால கட்டத்தில் தமிழ் இழந்துவிட்ட எழுத்துக்கள், இன்று வடமொழி எழுத்துக்களாக நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருமந்திரம் 2866
காயம் பலகை கவறுஐந்து கண்மூன்றாய்
ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.
ஐம்பத்தோர் அக்கரம் என்பது ஐம்பத்து ஒன்று அக்ஷரங்கள். இதுவே உடலில் முழுமையாக உறைந்துள்ளது என்பது பாடலில் நமக்கு வேண்டிய பொருள்.
சரியான அக்ஷரங்களை, முறையாக பயன்படுத்தினால், அது தெளிவான மந்திரங்களாக உடலின் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பிகளை தூண்டும் கிரியாவூக்கியாகவும் அமையும்.
இனி, அக்ஷரங்களின் பலனைப்பார்ப்போம்.
நமச்சிவாய, நமட்சிவாய, நமசிவாய, நமசிவய, நமக்ஷிவய - இவற்றில் எது சரியான பஞ்சாக்ஷர மந்திரத்தை குறிக்கிறது?
நமக்ஷிவய என்பதே சரியான பதில்.
திருமூலர் திருமந்திர மாலை என்னும் நூலில், முன்னூறு பாடல்களில் மந்திரங்கள் எழுதுவதற்கான சூத்திரங்களை வழங்கி இருக்கிறார். அந்த மந்திரங்கள் இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்களை மூலமாக கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது.
எதனால் இந்த ஐம்பத்தொரு அக்ஷரங்கள், ஏனைய எழுத்துக்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறது?
எழுத்துக்கள் புறத்தொடர்பிற்காக, வார்த்தைகளாக உச்சரிக்கப்படுகிறது. அக்ஷரங்கள் அகத்தொடர்பிற்காக மனதால் அர்ச்சிக்கப்படுகிறது. இதனாலேயே மனத்தால் உச்சரிக்கப்படும் அக்ஷரங்கள் மந்திரம் எனப்பட்டது.
மனதின் அக்ஷரம் மந்திரம்.
*** *** ***
No comments:
Post a Comment