ஒரே ஒரு ஊரிலே
ஒரே ஒரு ராஜா
பொருள்:
'சம்திங் ராங் வித் தி மெஷின்' - மனதை ஆறுதல் படுத்த, நான்காவது எடை காட்டும் கருவியையும் குற்றம் சாட்டினாள், வினோதினி.
'இதுக்கு மேல் வெயிட் போட்டே, உன்னுடைய ஹார்ட் தாங்காது'- மருத்துவரின் குரல் அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.

*** ***
ஒரே ஒரு ராஜாவிற்கு ஐந்து அழகிய இளம் பொண்டாட்டிகள்.
'வினோ உன்னுடைய டயட் மீல், டேபிள்ள வச்சிருக்கேன்' - அம்மாவின் அழைப்பு, காதுகளில் தேனாய் ஒலித்தது..
சமையலறையிலிருந்து வந்த மீன் வருவலின் மணம், பொண்டாட்டி நறுமுகையின் மூக்கைத்துளைத்தது.
'ஒரே ஒரு குட்டியூண்டு மீன் துண்டு எடுத்துக்கட்டுமா?'
பொண்டாட்டி பொற்சுவைக்கோ, சமயலறையில் பரிமாறப்படும் சப்தமே, நாக்கை நீரில் தத்தளிக்க வைத்தது.
'நான் டயட்ல இருக்கேன். மீன் வெயிட் போடாது. ஜஸ்ட் டூ பீஸ் சேத்துக்கலாம்'
பொண்டாட்டி கயல்விழியின் கண்கள், டைனிங் டேபிள் மேல் இருந்த மீன் வறுவலை விட்டு அகலவேயில்லை.
நாசூக்காக டிஸ்ஸு பேப்பரில் எடுத்து தட்டில் போட்டுக்கொண்டாள்.
'வாரத்துல வர்றது ஒரு ஞாயிற்றுக்கிழமை. இன்னிக்கு மட்டும் புல்லா சாப்ட்டுட்டு ஒரு குட்டி தூக்கம். நாளைக்கு இருந்து ஸ்ட்ரிக்ட் டயட்' - வினோதினியின் கைகள் டயட் மீலை ஒதுக்கியது.
ஐந்து அழகிய இளம் மனைவிகளுக்கும், எண்ணங்களால் கட்டளை இடும், ஒரே அதிகாரி மனம்.
உடலை ஆட்டுவிக்கும் உயிர் நிலையான மன்னன், தன்னுடன் இணைந்திருக்கும் ஐந்து மனைவிகளைப் பற்றிய சிந்தனை அற்றவன். அழகும், இளமையும் போய்விட்டால், அவர்கள் குடி இருக்கும் உடலை உதறி விட்டு, அடுத்த உடல் தேடி போய் விடுவான்.
தானே புலன்ஐந்தும் தன் வசமாயிடும்
தானே புலன்ஐந்தும் தன்வசம் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.
- திருமந்திரம்
மறை பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நம் வசமாக வேண்டும். ஐம்புலன்களும் நம்மை இயக்கும் தன்மையை இழக்க வேண்டும்.
அவைகள் விரும்பிய வண்ணம் நம்மை இயக்கிய குணம் மாற வேண்டும். இவைகள் அனைத்தும் நடக்க வேண்டுமென்றால், நாம் தனி ஒருவனாக, இறை நிலை தியானித்து அமைதியாக இருக்க வேண்டும்.

No comments:
Post a Comment