Thursday, April 25, 2019

கண்கள்

கண்கள் 

என்ன சொன்னாலும்
கண் தேடுதே

பொருள்:

நின்று பற்றும் புலன்களில் மாறுபட்டு, சென்று பற்றும் கண்கள், குழந்தைகளே!

'அங்கிள், இது ஃபோர்டீன்த்..'

'ஆமாம்மா'- என்னிடமிருந்து முனகலாய் பதில், அஞ்சாங்கிளாஸ் முடிச்சு ஆறாங்கிளாஸ் போகும் அனன்யாவுக்கு.

முதல் மலை உச்சியில் உட்கார்ந்திருக்கும் வெள்ளை விநாயகர் மேடையில் அமரும்போது, பதினான்கு முறை ஒருவரை ஒருவர், முதல் மலை ஏறுகையில், ஓய்வெடுத்து கடந்திருக்கிறோம்.

அகசக்தி, புறசக்தி என இரண்டையும்  இழந்து 'இது உனக்கு தேவையா?' என்னும் நிலை முதல் மலை முடிவிலேயே.

'பொண்ணுக்கு என்ன வயசு?'

'பத்து.'- என்ற அப்பாவின் பதிலால் திருப்தி அடையாத காவலர், அடிவாரத்தில் பெண்ணிடம் கேட்கிறார் 'என்னம்மா  படிக்கிறே?'

'அஞ்சாங்கிளாஸ் முடிச்சு.. ஆறாங்கிளாஸ் போறேன்'.

வெள்ளியங்கிரி மலை ஏற பெண்களுக்கு அனுமதி இல்லை.


இவர்களைத்தவிர,
'தம்பி [ஹீ.. ஹீ..] நின்னு, நின்னு போ..' - என்று இரண்டாம் மலையில் அறிவுரைத்த பெண்ணும்,
'இவளுக்கு எல்லாம் விளக்கணும்'- என்று இடித்துரை  வாங்கிய திருநங்கையும்,
'ஒரு வேளை கர்ப்பப்பை இழந்திருக்கலாம்'- என்று நான் எண்ணிய  பெண்கள் மட்டுமே மலைப்பயணம் மேற்கொண்டிருந்ததை பார்த்தேன்.

இவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என் மனதில் மின்னலடித்தது.

கருவறை.

இன்னும் பலன்தரும் நிலை அடையாதவர்களும், முடிந்தவர்களும், முடியாதவர்களும், இழந்தவர்களும் மலைப்பயணம் கொள்ளலாம்.

பலன்தரும் நிலையில் உள்ளவர்கள், சக்தியின் மறுவடிவம்.

இவர்கள் பற்றுதலுக்கும், ஆசைக்கும், காமத்திற்கும் ஆதார ஸ்ருதியும், உயிரையும் உடலையும் இணைக்கும்  ஈர்ப்பு சக்தியானவர்கள். மலை ஏறும்  அனுமதி இல்லை.

ஒரு வேளை, இதுதான் காரணமோ, மிகக்  கடினமான பயணங்களில், தெய்வ சிந்தனை சிதறாமல்  இருக்க, பெண்களை தவிர்ப்பது!














No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...