பூ மலரட்டும்
தொட்டால்
பூ
மலரும்
பொருள்:
நாம் சுவாசிக்கும், சுவாசக்காற்று முதலில் உடலின் வெப்பத்திற்கு சமனப்படுகிறது. மின்னல் வேகத்தில், காற்று வந்த செய்தி மூளைக்கு செய்தியாகிறது. ஒளி ஆற்றல் பெற்ற செய்தி ஆறாதாரங்களின் வழியாக ஜீவசக்திக்கு சென்றடைவதே 'உணர்வு'.
சுவாசம் (காற்று) --> வெப்பம் --> ஒளி --> மூளை --> ஆறாதாரம் --> உணர்வு
அனைத்தும் சமகாலத்தில் அனிச்சையாக நடந்துகொண்டே உள்ளது, உடலில் உயிர் உள்ளவரை.
காற்று தொட்டால்
உணர்வு பூ
ஜீவனில் மலரும்
அறியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
-சிவ வாக்கியர்
உணர்வாகின்ற ஞாபகம் எவ்விடமிருந்து உண்டாகிறதென்றால் பிரகாசத்திலிருந்தேதான். பிரகாசம் அக்கினியிலிருந்துண்டாகிறது. அக்கினி உண்டாகிறது வாயுவிலிருந்து. அப்பொழுது வாயுவாகி, அக்கினியாகி, பிரகாசமாகி, அறிவாயிருக்கின்ற ஜீவசக்தி தன்னிலே அடங்கும்பொழுதுதான் நமக்கு உணர்வு உண்டாகிறது.
-சித்த வேதம்
No comments:
Post a Comment