நாம் கண்களால் பார்க்க முடியாத முதல் பொருள் கடவுள். பின்னர்தான் உயிரும், காற்றும். காலம் என்று ஒன்று இருப்பதாக உணர்வு கூட இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் சூழ்ந்து இன்றைய இன்பங்களை தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நிகழ் காலம் பற்றிய உணர்வே இருப்பதில்லை.
உடலுக்குள் உயிரை வைத்த இறைவன், அதை கட்டி வைக்க காற்றைக் கொடுத்தான். எந்த அளவு காற்று உயிருடன் பிணைந்திருக்கிறதோ அந்த அளவுக்கு உயிர் உடலுடன் ஒட்டி இருக்கும். அதாவது, காலம் தன்னுடைய அளவை நீட்டித்து உலகில் நீண்ட நாட்கள் உடலில் உயிர் வாழ உறுதி செய்யும்.
திருமந்திரம் - 592
கலந்த உயிருடன் காலம் அறியில் கலந்த உயிரது காலின் நெருக்கம் கலந்த உயிரது காலது கட்டில் கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
உடலில் கலந்த உயிர், வாழும் காலத்தை அறிய வேண்டுமானால் காற்றும் உயிரும் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று தெரிய வேண்டும். காற்றைக்கொண்டு உயிரை நெருக்கமாக கட்டி விட்டால், உடலில் உயிர் நீண்ட காலம் இருக்கும்.
காற்றினால் உயிரைக் கட்டுவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தருகிறார் திருமூலர். அஷ்டாங்க யோகம் பற்றி கூறுகையில், இயமம், நியமம், ஆசனம் பற்றி எடுத்துரைத்து, நான்காவதாக பிராணாயாமம் பற்றி விவரிக்கிறார். அதன் செயல் முறைகளைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.
முறையாக பிராணாயாமம் செய்வதே, பிராணவாயுவைக் கொண்டு உயிரைக் கட்டி வைக்கும் வழியாகும்.
இறைவன் கொடுத்த பாத்திரமொன்று கைகளில் இருக்கிறது இரவும் பகலும் நிரந்தரமாக நம்முடன் வருகிறது - அது நம்முடன் வருகிறது..
எவ்வளவு உழைத்தாலும் எப்படித்தான் சேர்த்தாலும் நிறைவதில்லை பாத்திரம் நிறைவதில்லை.. எள்ளளவு மனம் போதும் என்றால் மனம் போதும் என்றால் நிறைந்துவிடும் பாத்திரம் நிறைந்துவிடும்..
கடவுள் நமக்கு கொடுக்கும் பாத்திரம் தற்செயலானது அல்ல. எவர் மீதும் விருப்போ, வெறுப்போ கொள்ளும் நிலையில் இறைவன் இல்லை. ஒருவருடைய மண்ணில் வாழ்வென்பது , ஓர் ஆணும் பெண்ணும் கலந்து இன்புறும் நேரத்திலேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. அங்கே, ஓர் உயிரை விதைத்து வைப்பதோடல்லாமல், அவ்வுயிருடனே இறுதி வரை பயணிப்பவனும் இறைவனே!
உயர்ந்த வானத்தில் உள்ள இறைவன், ஓர் உயிரை படைக்கும்போது அவனுடைய முந்தைய பிறவிகளின் வினைப்பயனாக, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களால் அவன் பெற்ற இன்ப, துன்ப நிலையும் கணக்கில் கொள்கிறான். அவன் இந்த மண்ணின் பண்புகளுக்கேற்ப வாழும் காலமும், அதற்கேற்ற உலக வாழ்வும் அமைத்து விடுகிறான். இதை, ஓர் ஆணும், பெண்ணும் அன்புடன் கலந்து இன்புற்றிருக்கும் நேரத்தில் செய்து முடிக்கிறான்.
'அனுபவம்தான் வாழ்க்கையென்றால் நீ யார் என்று கேட்ட மனிதனுக்கு அந்த அனுபவமே நான் என்றான் இறைவன்' - கவியரசர் கண்ணதாசனின் வார்த்தைகள் இவை.
அனுபவம் என்பது புலன்களின் செயல்களால் கிடைப்பது. ஆனால், அந்த ஐம்புலன்களின் அதிகாரியாக செயல்படுவது மனம். மனத்தின் கட்டளைகளால் பெறுகின்ற இன்பமும், துன்பமும் நான்தானே அனுபவிக்கிறேன் என்றால் அது உண்மையல்ல. என்னுடைய உடல் ஒரு கருவி மட்டுமே. உடலை சார்ந்து இன்னொரு உடல் இருக்கிறது. அதுவே, ஒளி உடல். அந்த ஒளி உடலே அனைத்தையும் அனுபவித்து, கர்ம வினைகளாக தன்னுள் கொண்டிருக்கிறது.
திருமந்திரம் - 2123
அத்தன் அமைத்த உடல்இரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.
இறைவன் நமக்கு கொடுத்த உடல் பரு உடல், ஒளி உடல் என்று இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. அதில், சுத்தமான உடல் என்பது ஒளி உடல் ஆகும். ஒளி உடல் எட்டு வகையான செயல்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.
புலன்கள் வழங்கும் உணர்வுகள்:
சத்த - ஒலி
பரிச - ஊறு
ரூப - பார்வை
ரச - சுவை
கந்தம் - மணம்
மனம் அறியும் அனுபவங்கள்:
புத்தி - அனுபவ அறிவு
மான் (மனம்) - செயல் நிலை
ஆங்காரம் - அறிவின் வெளிப்பாடு
உடலின் இரு கூறுகள்:
பரு - ஸ்தூல உடல்
புரியட்ட காயம் - ஒளி உடல்
[புரியாக திரிக்கப்பட்ட நூல்போல், மேற்சொன்ன எட்டு வகையான தன்மைகளும் ஒருங்கிணைந்து இருப்பது சூக்கும உடல் என்னும் ஒளி உடல்]
இப்பொழுது தெரிகிறதா, ஒருவரைப் பார்த்தவுடன் ஈர்ப்போ, வெறுப்போ ஏன் வருகிறதென்று. கர்ம வினைகளால் செயல்படும் நம் ஒளி உடல், அடுத்தவர் சேர்த்து வைத்திருக்கின்ற கர்ம வினைகளுக்கேற்ப அவரது ஒளி உடலைக்காணும்போது விருப்பும், வெறுப்பும் கொள்கிறது.
நெருங்கி
செல்கிறேனா அல்லது விலகி செல்கிறேனா என்று தெரியாமல் பயணப்பட்டுக்
கொண்டிருக்கிறேன். மனையைத் துறந்து, மனைவி, மக்கள், சுற்றத்தார் அனைவரையும்
துறந்து பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பொறுப்புகளைத் துறந்து, சும்மா
இருக்கும் சோம்பேரிக்கு, முகமூடி 'துறவு' என்கிறார்கள். ஆனால், நான் முழுமையாக நம்பி
செல்லும் இந்தப் பயணம் ஒரு நாள் என் இலக்கை காட்டிக் கொடுக்கும்.
கடலை
நான் நேரில் காண்பேன்.
ஒரு
பக்கம் கடல் என்று ஒன்று இல்லவே இல்லை என்னும் பகுத்தறிவுக்கூட்டம். கடல்தான்
நமக்கு எல்லாமே என்னும் ஆன்மீகக்கூட்டம். இரண்டு கூட்டமும் நாம் அனைவரும் கடலுக்குள்தான் வாழ்கிறோம் என்று அறியாத
கூட்டம்.
கல்வி
நிலையங்களில் யாருமே சொல்லித்தரவில்லை. பாடப் புத்தகமும் இல்லை; பரீட்சையும்
இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விட்டு சென்ற முன்னோர்களின் அறிவுரை மட்டும்
நூல்களில் இருக்கிறது. இன்றைய கல்வி எல்லாமே வேலை வாய்ப்பை நோக்கித்தான்
என்றாகிவிட்டது.
‘நான்
யார்?’ - என்று தெரிந்து கொள்ளும் உரிமை சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு மனிதனுக்கும்
இருக்கிறது. பிறப்பிலிருந்து இறக்கும் வரை, மெய்யியல் கேள்வி மனதில் எழா வண்ணம் நம்
சமுதாயம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவு கொடூரமான சமுதாய சீர்கேடு.
நான்
எப்படியாவது கடலைக் கண்டுபிடித்தாக வேண்டும். வேறு யாருக்காக இல்லாவிட்டாலும்,
எனக்காகநான் கண்டுபிடித்தே தீருவேன்.
யாரும் எனக்கு உதவா விட்டாலும் பரவாயில்லை. அடிக்கடி என்னை விழுங்க முயற்சிக்கும்
சுறாக்களின் பார்வையில் படாமல் மட்டும் இருந்தால் சரி. என்னுடைய லட்சியப் பயணம்,
என் இனத்து மீன்களுக்கே தெரியவில்லை, சுறாவை குறை சொல்லி என்ன பயன்.
நிலத்தைப்
போல நீரும் ஒரு பரிமாணம் என்கிறார்கள். கடல் முழுக்க நீரால் நிரம்பி இருக்கும்
என்று நம்புகிறோம். நீருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நீர் நிறைந்து அலை
அடிக்கும் கடல் எப்படி இருக்கும் என்று தெரிய எத்தனை நாள்கள் ஆகுமோ தெரியவில்லை.
கடலைத்தேடும் என்
பயணம் தொடர்கிறது.
***
*** ***
குறிப்பு:
ஆறறிவு
பெற்று சிந்திக்க தெரிந்த மனிதர்களின் கடவுளைத் தேடும் நிலை, கடலுக்குள் வாழ்ந்து
கொண்டு கடலைத் தேடும் மீனைப் போன்றதுதான். ஆறறிவு கொண்டு ஆராய்வதில், இறை நிலை பரிமாணத்தை
அறிந்து கொள்ள முடியாது. ஒளியும், நாதமும் கொண்ட மின்னலிழைப் பரிமாணமே இறையாக இருக்கலாம்.
'நாத விந்து கலாதி நமோ நமோ'
நாதம் - ஒலி விந்து - ஒளி, ஆதியில் தோன்றியவை.
கண்ணை மூடிக்கொண்டு ஒலியும், ஒளியும் இல்லாத உலகை சிந்தித்துப் பாருங்கள் தெரியும்.
*** *** ***
கடவுள் இருப்பது இங்கே
மாடிக்கு வந்தது ஒரு நிலவு மனதுக்குள் மலர்ந்தது பல கனவு ஒலியாக நானும் ஒளியாக அவளும் ஒன்றி இருப்போம் உயிராக நாளும் பேச்சிலும் மூச்சிலும் புது வெள்ளம் சிவசக்தியை அறிந்தது என் உள்ளம்
*** *** ***
இறைவன்
இருக்கின்றானா? இறைவன் இருக்கின்றானா?
மனிதன்
கேட்கிறான்.. அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
வாழ்கிறான்?
- ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களில் வாழ்பவர் சகலர்
விளக்கம்:
மெய்யியல் பற்றிய உண்மை அறிய முற்படுவோர்க்கு சித்தர்கள் காட்டிய அருள்நெறி:
மனிதனின் சாத்வீக, சத்திரிய மற்றும் தாமச என்னும் முக்குணங்களை ஆள்வது முப்பத்தாறு பிரதம உண்மைகள். அவைகள், இருபத்தி நான்கு உண்மைகள் ஆன்ம உண்மைகள் என்றும், ஏழு உண்மைகள் வித்தியா உண்மைகள் என்றும், ஐந்து உண்மைகள் சிவ உண்மைகள் என்றும் பிரிவினைப்படும்.
இதில் வித்தியா உண்மைகள் என்பது,
1. காலம் 2. நியதி 3. கலை 4. வித்தை 5. அராகம் 6. புருடன் 7. மாயை
கலை என்பது ஆன்மா கொண்டுள்ள மூல மலமான அறியாமையை கலைக்கக்கூடியது. அறியாமை அகலும்போது, அது மாயையின் பண்பு என்றறியாமல் ஆன்மா தானே முன்னின்று செய்கிறேன் என்று, 'நான்' என்ற அறியாமையை மீண்டும் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தான் கலையின் மூலம் பெற்ற அறிவுக்கு புறம்பாக, சிற்றறிவின் எல்லைக்குள் நின்று செயல்படுகிறது. இந்த நிலையே, அவரவர் பிறப்பின் கன்மம் என்றறியப்படுகிறது. கலை கற்றுத்தந்த வித்தையின்மீது ஈர்ப்பு ஏற்பட்டு, விரும்பி வித்தைகளை அறிய முயற்சி செய்கின்றது. இந்த விருப்பமே அராகம் என்பது.
மேற்படி தொடர் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஆன்மா புருடன் என்றறியப்பட்டு, பிறப்பிலிருந்து இறப்பு வரை, மாயையினால் சூழப்பட்டு, மாயா உலக நியதிகளிலிருந்து விடுபடாமல் வாழ்ந்து மறைகிறது.
பள்ளிகளும், கல்லூரிகளும் வித்யாலயா என்றோ கலைக்கல்லூரி என்றழைக்கப்படுவது இதனால்தானோ என்னவோ?
இப்பொழுதென்பது எப்பொழுதும் இல்லை; எப்பொழுதும் இருப்பதுவோ இப்பொழுதே!
பிறவிப்பயனால் காலப்பெருவெளிக்குள் நுழைகிறேன்.
அங்கே நிகழ் காலம் என்னும் மாயா உலகின் அமானுஷ்யப்பெருவெளிக்குள் நிற்கிறேன்.
ஒரு புறம், எக்காரணம் கொண்டும் திரும்பி செல்ல முடியாத, மாயமாக மறைந்துவிட்ட கடந்த காலம். எதிரிலோ, கண்களுக்கோ மற்ற புலன்களுக்கோ, எட்டாத எதிர் காலம்.
இதில் நான் உணரும் உண்மை என்னவென்றால், உடலுடனும், உடலற்றும் கடந்த காலங்களில் நாம் இருந்துகொண்டே இருந்திருக்கிறோம் அல்லதுஇருக்கிறோம்.
திருமந்திரம் - 80
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
திருமூலர் சூக்கும உடலுடன் பல கோடி வருடங்கள், காலப்பெருவெளிக்குள் இருந்ததை 'இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி' என்று குறிப்பிடுகிறார். பின்னர், இறை அருளால் மூலனின் உடலில் புகுந்து, மீண்டும் மனிதப்பிறவி பெறுகிறார்.
சித்தர்கள் முக்காலமும் அறிந்த ஞானிகள். அவர்களுக்கு காலப்பயணம் மிக எளிதாக கை வரப்பட்டிருக்கிறது. போகர் தனது போகர் 7000 என்ற நூலில் காலப்பயணம் செய்ததைப்பற்றிய பாடல்களை எழுதி இருக்கிறார். காலப்பயணத்தில் சந்தித்த முனிவர்களிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மருந்து செய்யும் முறையை கற்று வந்திருக்கிறார். எதிர்காலப்பயணம் பற்றிய குறிப்பு எதையும் விட்டு சென்றதாக தெரியவில்லை.
எதிர்காலப்பயணம் பற்றிய குறையை, சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்கள் தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள ஆகாய விமானம் முதல் கைப்பேசி வரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே செதுக்கிய சிற்பங்களில் விட்டு சென்றிருக்கிறார்கள். அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எதிர்கால பயணம் மேற்கொண்டு, இன்றைய நாகரிகத்தை அன்றே தெரிந்து சிற்பமாக்கி இருக்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய், புதிதாக கட்டிக்கொண்டிருந்த கோயிலின் நுழைவாயில் பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் எப்படி இருக்கும் என்பதை கோயிலின் உட்புற வளாகத்தில் சிற்பமாக செதுக்கி சென்றிருக்கிறார்கள். அந்த அதிசயத்தை பார்க்க விரும்பினால் நீங்கள் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் சிவன் கோயிலுக்கு செல்ல வேண்டி இருக்கும். அங்கே நீங்கள் காணும் வெளிப்புறம் சிதிலமடைந்த முன்புற வாசல், அச்சு அசலாக உட்பிரகாரத்தில் செதுக்கப்பட்டுள்ள சித்திரத்தில் காணலாம்.
காலப்பயணத்தில் கடந்த காலம், எதிர் காலம் சென்று வரும் சாத்தியம் நிகழ் காலத்தில் உண்டு என்னும் உண்மை நமக்கு தெளிவாகிறது.
[சமீபத்தில் OTT-ல் வெளிவந்த BLINK என்னும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட கன்னட திரைப்படம் காலப்பயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.]
இவை அனைத்திலிருந்தும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டென்றால் அது காலப்பிரயாணம் சாத்தியம் என்பதே.
இனி முக்கியமான ஆய்வுக்கு வருவோம்.
இன்றிலிருந்து முறையாக பயிற்சி செய்து ஒரு பத்து வருடங்களில் நாம் காலப்பயணம் செய்யும் திறனைப்பெறுகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.
அன்றைய நாளில், சோதித்து பார்க்கும் ஆவலில் பத்து வருடம் பின்னோக்கி இன்றைய நாளுக்கு வந்தால், நான் இப்பொழுது எழுதிக்கொண்டிருப்பதைப் பார்ப்பேன். பத்து வருடம் முன்னோக்கி இருந்த நான் அந்த உணர்வு நிலையில் இருப்பேன். அதே சமயம், நிகழ் கால வாழ்விலும் எழுதிக்கொண்டிருக்கும் நானும் இன்றைய உணர்வு நிலையில் இருப்பேன்.
இது எப்படி சாத்தியம்?
முறையாக யோகப்பயிற்சி செய்த சித்தர்களுக்கு இது சாத்தியமாகி இருக்கிறது.
காலப்பெருவெளியில் எங்கு வேண்டுமானாலும் என்னால் செல்ல முடியும்; உணர்வு நிலையில் இருக்க முடியும். அதாவது, கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்ற மூன்று நிலையையும் ஒரே காலத்தில் அனுபவிக்க முடியும்.
முக்காலமும் ஒரு புள்ளியில் நிலை கொள்கிறது. பழைய கால இசைத்தட்டை எடுத்துக்கொள்வோம். அதில் எந்த புள்ளியில் முள்ளை வைக்கிறோமோ அங்கிருந்து இசை கேட்க ஆரம்பிக்கும். அப்படித்தான் மாயை நிலையில் உள்ள காலமும்.
நாம் உறக்கத்தில் இருந்து கண்விழிக்கும் வேளையில், காலப்பெருவெளியில் எந்தப்புள்ளியில் இருந்து வேண்டுமானாலும் விழித்தெழலாம். விழித்தெழுவது எந்த யுகமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
யோசிப்பதற்கே சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. யோசிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் என்னைப்போல் நீங்களும் காலப்பரிமாணத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.
மெய்யியல் பற்றிய உண்மை விளக்கம் தரும் சித்தர்கள், வித்யா தத்துவம் என்று மாயா தத்துவத்தை விளக்குகிறார்கள். மாயா தத்துவத்தின் ஏழு கோட்பாடுகளில் முதல் கோட்பாடு காலம்.
கீழ்மை குணம் கொண்ட கயவர்கள் தயங்காமல் என்ன செய்வார்கள் தெரியுமா? ஒரு குழப்பமான சந்தர்ப்ப சூழல் உருவானால், தன்னை விற்றாவது அதன் பலனை அடையத்துடிப்பார்கள்.
தி. மு. க.: பரம எதிரியுடன் கை கோர்த்து, 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்', என்று ஆட்சி அமைக்க துடித்தவர்கள்.
அ. தி. மு. க.: பரம எதிரியுடன் கை கோர்க்க துணிந்ததல்லாமல், 'அவளும் படிதாண்டா பத்தினியல்ல; நானும் முற்றும் துறந்த முனிவனுமல்ல' என்று ஆட்சி தலைமை கேட்டு நாடகம் ஆடியவ ர்கள்.
காங்கிரஸ்: வெற்றிக்கு காரணமான கூட்டணிக்கட்சியாக, மாலையிட்ட மன்னனறை செல்லாமல், பாலொடு பழம் தந்து எதிரியுடன் முதலிரவை பகிர்ந்தவர்கள்.
இ.யூ.மு.லீ.: கண்ணில் நீர் பெருக, மாற்றுக்கட்சியில் மந்திரிப்பதவி பெற்று, சிறுபான்மை என்னும் புர்காவை கழற்றி எறிந்தவர்கள்.
வி.சி.க.: சாறுண்ணிகளுடன் ஒட்டுண்ணிகளாக வாழ்ந்த வாழ்வை மறந்து, பதவிக்காக கூட்டணியில் இருந்து விலகி வக்கணை பேசி நடிப்பவர்கள்.
கம்யூனிஸ்ட்கள்: காசுக்காக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என இரு பக்கமும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெட்டிப்பதர்கள்.
த.வெ.க.: கிடைத்த சந்தர்ப்பத்தை எப்படியாவது அனுபவிக்க, பிறவி குணம் மேலோங்க, எதிரிகளின் கோவணத்தை உருவியதோடல்லாமல், அவர்களின் வெற்றியையே கேள்விக்குறி ஆக்கியவர்கள்.
கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருகின்ற தியானிகளின் கனவு.
சரி, வாங்க நம்ம கனவுலகிற்கு போவோம்.
இன்றைய நாளின் கடமைகள் எல்லாம் முடிந்து விட்டது. இனி தூங்கி கனவு காணலாம்.
கண்ணை மூடினால், மனம் எதை எதையோ கொண்டுவந்து கொடுத்து, பழைய நினைவுகளை அசை போட வைக்கிறது.
தூக்கம் என்றால் என்ன? விழிப்பு நிலையில் இருந்து எப்படி உறக்க நிலைக்கு செல்கிறோம்?
விழிப்பும் உறக்கமும் சந்திக்கும் நேரத்தில் என்ன நடக்கிறது?
இமைகளில் அன்றைய நாளின் அனுபவத்தின் பாரம். மன வெளியிலோ வாழ்வில் கடந்து வந்த தூரம். உடலளவில் உலகின் ஆரவாரம் அடங்கிவிடும். ஐம்புலன்களும் இயல்பான குணத்தை இழந்து விடும். உள்ளம் எங்கே செல்கிறது என்று யாருக்கும் தெரியாது. பிறக்கும் முன்னர் உள்ளம் இல்லை. இறந்த பின்னர் உள்ளம் இருக்கப்போவது இல்லை. வாழும் நாட்களிலும் தூக்கத்தில் உள்ளம் இல்லை.
விழிப்பிலிருந்து உறக்கம், இது எப்படி நிகழ்கிறது? உறக்கத்திலிருந்து விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது?
சிந்தனை நீண்டு கொண்டே இருந்தது.
இன்றைக்கு எப்படியாவது விழிப்பிலிருந்து உறக்கத்திற்கு செல்லும் பாதையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த இறப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.
உறக்கத்திலிருந்து விழிப்பு நிலை என்பது புதுப்பிறப்பு எடுப்பது போன்றது. விழிப்பும், பிறப்பும் நம் கையில் இல்லை.
தூக்கத்தின் ஆரம்பத்தில் மூச்சுக்காற்று சீராக இயங்க ஆரம்பிக்கிறது. மூச்சு காற்றின் பாதையில் உள்ள தசை நார்கள் தளர்வு நிலைக்கு செல்கிறது. சீராக இயங்கும் காற்று தளர்வு நிலையில் உள்ள தசைநார்களை கடக்கும்போது மெல்லிய ஓசை. இந்த ஓசை காதுக்கு கேட்கிறது. இது நான்கைந்து சுவாசத்திற்கொருமுறை நிகழ ஆரம்பித்தது. விழிப்பு நிலையில் இருப்பதால் காதுக்கு கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக சுவாச இடைவெளி குறைய குறைய தொடர் ஓசையாக மாறுகிறது. மனம் விழிப்பு நிலையிலிருந்து நழுவி வேறு ஒரு பரிமாணத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.
முழுவதும் தூக்கத்தில் ஆழ்வதற்குள், மனதில் தீர்மானித்தபடி, மீண்டும் விழிப்புணர்வு நிலைக்கு வருகிறேன்.
தூக்கமும் விழிப்புமான இந்த கண நேர கால இடைவெளியில் எனக்குள் என்ன நடந்தது?
எண்ணங்கள் திசை மாறாமல் இருக்க சுவாசத்தையே கவனித்துக்கொண்டிருந்தேன். சுவாசத்தை கவனித்துக்கொண்டிருந்த நான், சுவாச சத்தத்தின் ஊடே, இன்னொரு உலகிற்குள் நுழைகிறேன்.
அங்கே, 'நான் ஒரு பள்ளி மாணவன். நண்பனுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கிறேன். பள்ளி மணி அடித்தாகி விட்டது. எல்லோரும் வகுப்பறைக்குள் சென்று விட்டார்கள். நானும் போக முயற்சிக்கிறேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வருகிறது. வீட்டுப்பாடம் செய்யவில்லை. கணக்கு வாத்தியார் ரொம்ப கண்டிப்பானவர். ஒரு கணம் அவரைப்பற்றிய பின்னூட்டம் முழுவதுமாக உணர்வுக்கு வருகிறது. [காலமான] அம்மா கூப்பிடுகிறார்கள். இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை. புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு ஓட வேண்டும். ஓடுகிறேன். மூச்சு வாங்குகிறது.'
மீண்டும் விழிப்புணர்வு நிலையில் படுக்கைக்கு திரும்புகிறேன். சுவாசத்தின் சப்தம் நின்று விட்டது. மூச்சு இன்னும் அடங்கவில்லை. உடலில், ஓடியதனால் உண்டான லேசான வியர்வை பூத்திருந்தது. படபடக்கும் இதயம் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.
நான் என்னும் இந்த உடல் ஓடவில்லை. மனம் ஓடி இருக்கிறது.
எனக்கு பதிலாக என்னுடைய சூக்கும உடல் ஓடி இருக்கிறது. கனவையே நனவாக உடல் அனுபவித்திருக்கிறது.
இங்கே, விழிப்பு நிலை பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
விழிப்பு நிலை என்பது இரண்டு வகையானது. புறவெளி மட்டுமே உணரும் விழிப்பு நிலை; மற்றொன்று அகவெளி மட்டுமே காணுகின்ற விழிப்பு நிலை. சாதாரண நேரங்களில் நாம் இருப்பது புறவெளி விழிப்பு. தியானத்தின் இடையில் நடப்பது அகவெளி விழிப்பு.
பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள் செயல் நிலையில் இருக்கிறது. இது புறவெளி விழிப்பு நிலை. உறங்கும் நேரத்தில் இங்கிருந்து கனவு நிலைக்கு செல்லும்பொழுது, சூக்கும உடலாக மாறி புது உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்.
ஒருவர் தியானம் செய்யும்போது மனம் உள்நோக்கி திரும்புகிறது. அப்பொழுது, பஞ்சபூதங்களால் மனதில் உருவாகும் எண்ணங்களும், ஞானேந்திரியங்கள் என்னும் ஐம்புலன்கள், கர்மேந்திரியங்கள் என்னும் உடல் கருவிகள், விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்கிறது.
தியான நிலையிலும், விழிப்பு நிலை பரு உடலில் இருந்து நுண்ணுடலுக்குள் செல்கிறது.
விழிப்பு நிலையில் இருந்து கனவு நிலைக்கு செல்ல மனம், புத்தி, அகங்காரம் வழிகாட்டியாக இருக்கிறது. மனமும் புத்தியும் மட்டும் செயல்படும் நிலையில் கனவு நிலை மாறி உறக்கம் உண்டாகிறது. மனமும் புத்தியும் மறைகின்ற பொழுதில் சித்தம் தலை தூக்கி துரியம் எனப்படும் பேருறக்க நிலைக்கு செல்கிறது.
தியானத்தில் வெறும் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. இதுவே சமாதி நிலை.
திருமந்திரம் - 2201
புரியட் டகமே பொருந்தல் கனவு புரியட் டகம் தன்னில் மூன்று கனவு புரியட் டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட் டகத்து ஒன்று புக்கல் துரியமே.
புரியட்டகம் என்றால் சூக்கும உடல் அல்லது நுண்ணுடலில் வருவது கனவு. அதாவது பஞ்சபூதங்களின் தன்மைகள், ஞானேந்திரியங்கள் மற்றும் கர்மேந்திரியங்களின் தன்மைகள் அடங்கி, அந்தக்கரணங்களில் மனம், புத்தி மற்றும் அகங்காரத்தை ஆன்மா ஏற்கும் நிலை கனவு.
தியானத்திலும் இவ்வாறே விழிப்பு நிலையில் கனவு நிகழ்கிறது.
தியானத்தின் தொடர்ச்சியில் நுண்ணுடலில் மனம், புத்தி செயல்படும் நிலை உறக்க நிலையாகும். மனம் புத்தி செயலற்று நுண்ணுடலில் சித்தம் மட்டும் செயல்படும் நிலையே துரியம் எனப்படும் பேருறக்க நிலை. அதுவே சமாதி நிலை.
இன்றைக்கு படுக்கைக்கு சென்றதும் முயற்சி செய்து பாருங்களேன்!
உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும் ஒன்று.
அறிவியலின் துணை கொண்டு எவ்வளவு அலசினாலும், அடியும், முடியும் காண முடியாத அதிசயம் உயிர்.
தில்லை அம்பலத்தில் நடனமாடும் அந்த பரம்பொருள், ஒவ்வொரு உயிரியின் உடலிலும் உள்ள உயிருக்கு பற்று கோலாக இருக்கிறான். அண்ட சராசரங்களை ஆட்டுவித்து தானும் ஆடிக்கொண்டிருக்கிறான் இறைவன்.
உடலும் அதற்கு விதிவிலக்கல்ல. கண்ணால் காணும் பரு உடலும், சூக்கும உடலான ஒளி உடலும் இறையோடு இணைந்து ஆடிக்கொண்டிருக்கிறது என்கிறார் திருமூலர்.
பரு உடலும், ஒளி உடலுமாக உள்ள உடல் ஆடிக்கொண்டிருக்கிறது .
இதுவே, ஒன்றிரண்டு ஆட
அதனுடன் உயிர் சேர்ந்து மூன்றாக மாறி ஆடுகிறது..
ஓரொன்றும் உடனாடஒன்றினின் மூன்றாட
இந்த மூன்று பரிமாணங்களும் உடலின் ஏழு ஆதார நிலைகளான, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை மற்றும் துரியத்துடன் இணைந்து ஏழும் ஒத்து ஆடுகிறது.
ஓரேழும் ஒத்தாட
இவை அனைத்தும் ஒன்றி நிற்கும்போது, இதனுடன் ஐம்பொறிகளின் குணமும், நான்கு அகக்கருவிகளான மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என ஒன்பது குணங்களும் பொருந்தி இருக்கும். இந்த ஒன்பது குணங்களும் பாசம் என்னும் இச்சா சக்தியுடன் சேர்ந்தாடும்.
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
இவ்வாறு பொருந்தி நிற்கும் உடலையே மன்றமாக கொண்டு இறைவன் மாணிக்க ஒளிக்கீற்றுகளாக ஒளிவீசி உடலின் உள்ளே நடனம் புரிவான்.
மன்றினின் றாடுவான் மாணிக்கக் கூத்தே
சிதம்பர நடராஜரின் திருக்கூத்து நம் ஒவ்வொருவர் உடலிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இறைவன் கோயிலில் உள்ள சிலையில் மட்டும் இருந்தால், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற பொருட்களில் இறைவன் இல்லை என்றாகிவிடும். எங்கும் எதிலும் இருப்பவன் இறைவன்.
இறைவனே இயற்கை என்பதால் இறைவனை கோயிலில் இருந்து எடுத்து விடுவோம்.
இனி கடவுளுக்கு வருவோம்.
ஒவ்வொரு உயிர்வாழ் உடலிலும் இறைவனின் இணைப்பு இருக்கிறது. அதை உயிர்வாழிகள் உணர்வதில்லை. தனக்குள்ளே பரம்பொருள் உறைகிறான் என்று உணர்ந்து, கடும் முயற்சி செய்து, அறிய முற்படும் பொழுது இறைவன் கடவுளாக வெளிப்படுகிறான்.
அடுத்து தெய்வத்தைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
பூவுலகில் தானும் வாழ்வாங்கு வாழ்ந்து, தன்னை சார்ந்தோர்க்கும் பயனளிப்பவனாக இருந்து, தன்னை ஒரு முன்னோடியாக கொண்டு மக்கள் வாழ வழிகாட்டியாக வாழ்ந்தவர்கள் தெய்வம் ஆகிறார்கள்.
எனவே, நாம் இன்று தெய்வம் என்று வணங்குபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து சென்றவர்கள் என்று கொள்ளலாம். குறிப்பாக, ஆதி யோகியாகிய சிவன், தமிழ்க்கடவுளான முருகன் மற்றும் திருமூலர் போன்ற சித்தர்களை இந்த வரிசையில் கொண்டு வரலாம். இவர்கள் அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு வகை ஆற்றலை கைவரப்பெற்றவர்கள்.
அஷ்டமா சித்திகள் என்பது எட்டு வகை ஆற்றல்கள்:
1. அணுவை விட சிறிய நிலை எடுப்பது
2. அண்டத்தை விட பேரண்டமாக விரிந்து நிற்பது
3. காற்றினும் மென்மையாக இருப்பது
4. மலையினும் பாரமாய் இருப்பது
5. எண்ணம் போல் நினைத்தவற்றை அடைவது
6. உலகப்பொருட்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பது
7. தன்னுயிரை பிறிதோர் உடலில் மாற்றுவது
8. தெய்வ நிலையில் நிற்பது
அதாவது, தெய்வ நிலையில் இருக்கும் இவர்கள் கோயிலில் இருந்து மக்களுக்கு அருள் பாலிப்பவர்களாக இருக்கிறார்கள். கருவறையில் உள்ள கல்லிலும் இவர்களால் உறைந்திருக்க முடியும்.
இந்தக் கோட்பாட்டில்தான் நம் முன்னோர்கள் கல்லிலும், பொன்னிலும் தெய்வ சிலைகளை வடித்து அதனை கருவறைக்குள் வைத்திருக்கிறார்கள். மனிதன் வடித்த சிலைகளில் எல்லாம் தெய்வங்கள் வாழ்கின்றனர்.
சிவன் கோயில் கருவறை சிலையில் சிவன் இருப்பதும், முருகன் கோயில் கருவறை சிலையில் முருகன் இருப்பதும், சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்த பின்னர் கோயில்களில் சித்தர்கள் இருப்பதும் இவ்வாரென்று கொள்ளலாம்.
கல்லென்று பார்ப்பவர்களுக்கு கல்லாகவும், தெய்வம் என்று பார்ப்பவர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார்கள்.
திருமூலர் இந்த கருத்தை மிகத் தெளிவாக திருமந்திரத்தில் விளக்குகிறார்.
திருமந்திரம் - 2290
மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே.
மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது, நம் கண்களுக்கு யானை மட்டுமே தெரிகிறது. இந்த யானை, மரத்தால் செய்யப்பட்டது என்று உணர்ந்து யானையைப் பார்க்கும்போது யானை மரமாக தெரிகிறது. அதுபோலவே, இந்த உலகம், இறைவனை மறைத்து, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பெரும் பூதங்களால் நிறைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுது, இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்று உணர்கிறோமோ அப்பொழுதே பஞ்ச பூதங்கள் மறைந்து இறைவனுக்குள் ஐக்கியமாகி விடும்.
இனிமேல், கோயிலில் தெய்வத்தை வணங்கும்போது, முழு விழிப்புணர்வு நிலையில் வணங்கினால் நம் முன் இருப்பது கற்சிலையல்ல, சிலை வடிவில் உள்ள நாம் வணங்கும் தெய்வம்.
அங்கே மனமுருக பிரார்த்திக்கும்போது, ஒலியற்ற நம் குரல் தெய்வத்திற்கு கேட்டிடும், தெய்வத்தின் கருணை அளவின்றி பொழிந்திடும்.
வானத்திலிருந்து இறங்கி வரும் இறைவன், ஒருவன் முற்பிறவியில் செய்த நன்மை, தீமைக்கேற்ப உடல் கொடுக்கிறான்.
அந்த உடல் மனித உடலாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தனது குளிர்ந்த காலை, உடலுக்கு காவலாக தலையில் வைக்கிறான். முற்பிறவியின் நினைவுகளையும், மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்னும் களிம்பை அகற்றும் இறைவன், ஒப்பற்ற ஆனந்தப் பேரொளியாக கண்களின் இடையே திகழ்கிறான்.
இந்தப்பாடலில் மிகவும் கடினமான மெய்யியல் கேள்விக்கு பதில் இருக்கிறது.
கேள்வி:
முதன் முதலில் மனிதன் பிறக்கும்போது, வினைப்பயன் அற்ற நிலையில் தானே இருந்திருப்பான். நல்வினை, தீவினை என இருவினைகளுக்குள் செல்ல வேண்டிய அவசியம் எப்படி அமைந்தது?
பதில்:
முதல் பிறப்பில் தூய உடலில் இருந்தாலும், மண்ணில் பிறந்தவுடன் மும்மலங்கள் என்னும் ஆணவம், கன்மம், மாயைக்குள் வாழ்க்கையை துவங்குகிறான். வாழ்வில் இன்பம் ஒன்றையே நாட்டமாக கொள்வதால், நல்லவை, கெட்டவை என்று பகுத்தறியாமல் இருவினைகளின் மாய வலையில் சிக்கிக்கொள்கிறான்.
ஒவ்வொரு முறை மனிதனாக பிறப்பெடுக்கும்போதும், உடல் மற்றும் பின்புலம் அவன் முற்பிறப்பின் முழு வினைப்பயனாலே அமைகிறது. அதாவது முந்தைய பிறவியின் மும்மலங்கள் அழிக்கப்பட்டு புதிதாகவே பிறக்கிறான்.
இதைத்தான் திருமந்திரம்,
வினைக்கீடாய் மெய்கொண்டு.. களிம்பு அறுத்தானே.. என்று விளக்குகிறது.
இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?
இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில் இருக்கும்.
உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?
முழுமுதற் பொருளான இறைவனுடன் இணைந்து இருக்கும்.
இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.
திருமந்திரம் - 1822
கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு இறந்தமை வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் பாரணியும் உடல் வீழவிட்டு ஆருயிர் தேரணியும் இது செப்ப வல்லீரே.
ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு. அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும். ஆனால், அவர் இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில் பிறப்பெடுக்காது.
இதைப் புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.
இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம் பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள், தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.
மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய தேனடையால் அதன் பலனை இழந்தது.
இது நேரான புரிதலில்..
மனிதன் சுவையான உணவினை தேடி தேடி உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும் அவனுக்கு இருப்பதில்லை.
இது மெய்யியல் பார்வையில்..
ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின் கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை.
Accenture lays off more than 11,000 employees: CEO Julie Sweet says we are "exiting" employees on a compressed timeline, people where reskilling, based on our experience, is not a viable path for the skill we need.
மற்றவர்கள் உங்களை மாற்றுவது சாத்தியமல்ல. நீங்களாக, மாறுவதை தெரிந்து, மாறிக்கொள்ளுங்கள்.
காலையில் கிழக்கே உதிக்கும் கதிரவன் மாலையில் மேற்கே மறைவதை தினமும் காண்கிறீர்கள். மாற்றத்தை கண்கூடாக பார்த்தும் பாராமல் இருக்கிறீர்கள். எருதின் கன்று வளர்ந்து பருவமடைந்து, வாழ்நாள் முடிந்து நம் கண் முன்னரே மறைவதை பார்த்தும் மாற்றத்தின் தன்மையை உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.
எந்தவொரு பயணமும் மாறி மாறி ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வாழும் நாட்களை விழிப்புணர்வோடு வாழுங்கள்.
தமிழகம் ஏன் ஏனைய மாநிலங்களில் இருந்தோ, மற்ற நாடுகளில் இருந்தோ தனித்து தெரிகிறது? இறைத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இறை உணர்வாளர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.
இங்குதானே, இறை மறுப்பாளர்களும், அவர்களின் போதனைகளும் நிறைந்து வழிகிறது. இவர்களின் போக்கும், செயல்களும் தாங்கள் மிக்க அறிவுடையவர்கள் மற்றவர்கள் இழி பிறவிகள் என்னும் அளவிற்கு தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.
'கடவுள் இல்லை ' - என்றால் பகுத்தறிவாளன். உண்டு என்றால் சுயமாக சிந்திக்கும் திறனற்ற பழமைவாதி.
இந்த பகுத்தறிவாளர்கள்தான் தான் கற்ற பசுக்கள். கதறிக்கொண்டிருக்கிறார்கள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசும் தங்கள் பங்கிற்கு இறை மறுப்பை சிரமேற்கொண்டிருப்பதும் தமிழகத்தில்தான். மக்களின் தேர்தல் வாக்குகளுக்காகவும், கோயில்களின் சொத்துகளுக்காகவும், தினம் தினம் உண்டியலில் சேரும் செல்வத்திற்காகவும், இவர்கள் செய்யும் குட முழுக்குகளும், விழாக்களும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் கொற்ற பசுக்கள். நெற்றியில் அதிகாரம் என்னும் குறியை கட்டி மேய்பவர்கள்.
ஆனால், தன்னுள் நிரம்பி நிறைகுடமாக உள்ள ஒருவர் போதும். உலகையே தன் பக்கம் இழுத்து, சமுதாயத்திற்கு தேவையானதை செய்ய.
இந்த முற்ற பசுவின் ஒரு குடம் பால் போதும். ஏனைய பசுக்கள், பால் வற்றிய வறள் பசுக்களே.
அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர். சமுதாய ஊடகத்தின் இன்ப்ளூயன்சர்.
அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே.
புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக வாழ்வை அடைய முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான் இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு; நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர வாழ்வாகி விடும்.
எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.
புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.
ஆக மதத்தன ஐந்து களிறுஉள ஆக மதத் தறியோடு அணைகின்றில பாகனும் எய்த்து அவைதாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.
ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.
ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது.
நம் உடலில் ஆற்றல் உள்ள போது, புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு பயிற்சி செய்ய வேண்டும்.