பெருந்துயரம்
திருமந்திரம் - 171
ஈட்டியதேன் பூமணம் கண்டு ரதமும்
கூட்டியே கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும்
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே.
இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம் பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல் உள்ளவர்கள், தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.
மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய தேனடையால் அதன் பலனை இழந்தது.
இது நேரான புரிதலில்..
மனிதன் சுவையான உணவினை தேடி தேடி உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும் அவனுக்கு இருப்பதில்லை.
இது மெய்யியல் பார்வையில்..
ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின் கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை.
இது அரசியல் நிகழ்வில்..
*** *** ***
மக்களை காப்பது மன்னனின் கடமை
மக்களை காப்பதுதான் மன்னனின் கடமை
மக்களை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை
மக்களின் உயிரை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை
மற்றவர் மீது குற்றம் சுமத்துவது சுத்த மடமை
*** *** ***
No comments:
Post a Comment