காலதேவனின் கணக்கு
உடலைப் பிரிந்த உயிரின் நிலை என்ன?
மறுபடியும் பிறந்திருக்கும்.
இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?
இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில் இருக்கும்.
உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?
முழுமுதற் பொருளான இறைவனுடன் இணைந்து இருக்கும்.
இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.
திருமந்திரம் - 1822
கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும்
பாரணியும் உடல் வீழவிட்டு ஆருயிர்
தேரணியும் இது செப்ப வல்லீரே.
ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு. அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும். ஆனால், அவர் இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில் பிறப்பெடுக்காது.
இதைப் புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.
*** *** *** *** ***
No comments:
Post a Comment