உதிரப்பிறந்த பிஞ்சுகள்
எது நடக்கக்கூடாது என்று உலகம் எதிர்பார்த்ததோ, அது நடந்து விட்டது.
ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமெரிக்கர்களால் தகர்ப்பு. கொக்கரிக்கும் டிரம்ப்.
இதனால் ஈரான் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகள் அனைத்தும் நேரடி பாதிப்பில். அவர்களால் எண்ணெய் மட்டும் எடுக்க முடியும். குடி நீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர்தான் ஆதாரம். கடல் நீர் அணுக்கதிர்களால் மாசுபடும் நிலை இப்போது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் குடி நீருக்கு சமமாகிவிடும்.
போர் ஒழிக!
போர் வேண்டாம். பேரழிவைத்தரும் போர் வேண்டாம்.
இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். மண்ணில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.
இறைவன் சந்நிதியில் சிறப்பு அனுமதி யாருக்கும் இல்லை. யாருக்கும் யாரையும் கொல்லும் உரிமை இல்லை, குறிப்பாக பொது மக்களை.
'காமெனியை கொன்றிடுவோம். அவன் இருப்பிடம் தெரியும்.' - கொக்கரிக்கிறான் டிரம்ப். இவன் போருக்கு சம்மந்தமில்லாத அமெரிக்கன். சீனாவோ உளவுக்கப்பல்களை போரின் எல்லைக்குள் நிறுத்தி வைக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக. ஈரான் - இஸ்ரேல் போரினால் உலகமே இரண்டுபட்டு நிற்கிறது.
ஏவுகணைகள் ஏற்படுத்தும் அழிவுத்திறனை எதிர் அணிகள் பெருமையாக பேசி, வேடிக்கை பார்க்கிறார்கள். போரினால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களில், குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடில்லை.
பசித்து அழும் குழந்தைக்கு பால் தர முடியவில்லை என்றால், தன் பசியை பொறுத்துக்கொள்ளும் அன்னையால் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமா? எண்ணற்ற பிஞ்சுக்குழந்தைகளின் பசிக்குரல் யாருக்கும் கவலையை தராதா?
இது மிகவும் கொடுமையானது. அனைத்து தர்மங்களையும் மீறியது. இவர்களுக்கு அறமே எமனாக அமையும்.
திருமந்திரம் - 198
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
கொல்லு. குத்து என்று சொல்பவர்கள் மனிதர்களல்ல மிருகங்கள். இவர்களை எம தூதர்கள் தங்களது பாசக்கயிற்றால் கட்டி ஓட்டி சென்று நெருப்பின் வாயிலில் நிற்கவைத்து, நரகத்தை காட்டுவார்கள்.
*** *** ***
No comments:
Post a Comment