மின்னலில் மையெடுத்து
தமிழில் எழுத்தெடுத்து
வந்ததிந்த மந்திரம்
பொருள்:
இறையருள் தந்த மாபெரும் வெகுமதி, நாம் இம்மண்ணில் மனிதப்பிறவி பெற்றது. நம்மோடு பல்லுயிர்களையம் படைத்து அவைகளுக்கும் வாழ்விடமாக இறைவன் பூமியை அளித்தார்.
ஆறறிவு படைத்த மனிதனின் தலையாய கடமை, இறைவன் அளித்ததை அனைத்து உயிர்களுக்கும் பொதுவில் வைத்து, இயற்கையோடு இணைந்து வாழ்வது.
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை - திருக்குறள் அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடிணைந்த தற்சார்ந்த, இனம் சார்ந்த வாழ்வாதாரத்தை மனிதன் உறுதி செய்ய வேண்டும். அவைகளின் வாழ்விடத்தை கவர்வது, ஊறு செய்வது போன்றவற்றை நிறுத்துவதோடல்லாமல், அவைகளுக்கு இடர் நேரும்போதெல்லாம் முன்னின்று உதவ வேண்டும்.
[இதை நான் சொல்லவில்லை. நம்ம தெய்வப்புலவர் சொன்னதின் பொருளாக நான் விளங்கிக்கொண்டது]
--------------*-------------
உட்பொருள்: கோபம்
பொருள்: சமுதாய நல்லிணக்கம்
நிகழ்வு: மதம் சார்ந்த தீவிரவாதம்
ஆய்வு: அமைதி, நல்லிணக்கம்
உணர்வு: ஐம்புலன்கள்
'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்; தெய்வம் உண்டென்று தானுணர்தல் வேணடும்' - பாரதியார்.
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
பொருள்:
அகரம் முதலான தமிழ் எழுத்துக்களெல்லாம் உலகில் ஆதி பகவானுடனே தோன்றி உள்ளது. ஆதி பகவான் தான் படைத்த தமிழின் அருமையை உலகிற்கு தெரிவிக்குமாறு தன்னை பணித்தான் என்று திருமூலர் கூறுகின்றார்.
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே
-திருமூலர்
காலையில் உதயமாகும் சூரியன் மாலையில் மறைவது இயற்கை. உண்மையில், சூரியன் தன் நிலைத்த நிலையில் எந்த மாற்றமும் அடையாமல், பூமி வாழ் உயிரினங்களுக்கு இந்த தோற்றத்தை வழங்கிக்கொண்டிருக்கிறது. பூமியின் சுழற்சியே இந்த மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றது,
இதுவே உயிரினங்களுக்கும் பொருந்தும். பிறப்பின் முன்னும், இறப்பின் பின்னும், உயிரின் அமைப்பில் எந்த மாற்றமும் பெறாமல், உயிர் நிலைத்த இறைநிலையில் உறைந்திருக்கும். இடைப்பட்ட வாழ்க்கை என்பது, மாயையால் நம்மை அலைக்கழிக்கும் காலம்.
'விந்தையே தான்' - திருமந்திரம் விளக்கம் பற்றிய வீடியோ ஒன்று பார்க்க நேர்ந்தது. எண்ணும், எழுத்தும் செய்த விந்தையை, தமிழைக்கொண்டு அளந்திருப்பதை கண்டு, நம் ரத்தத்தில் அது ஊறி இருப்பதை அறிந்து வியந்து போனேன். ஆரம்பம் - 'அம்மா'. உச்சரித்துப்பாருங்கள். பிரணவ மந்திரத்தின் ஆரம்பமும் அதுதான், நாம் எல்லோரும் அதுதான். அதிசயம் தமிழ்!
சுவாசிக்கும் காற்றில் உள்ள தனிமங்களை வகைப்படுத்தினால் அதில் உன்னத வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள் [Noble Gases or Inert Gases] என்றழைக்கப்படும் ஏழு தனிமங்களை கொண்ட ஒரு குழு உண்டு. இந்த வாயுக்கள் முழுமை பெற்ற அணு அமைப்பை உடையதால் எந்த இரசாயன மாற்றங்களுக்கு உட்படாது, தன்னிலை மாறாமல் இருக்கும். நாம் சுவாசிக்கும்போது, நம் உடலில் பல நன்மைகளை செய்யும் தன்மை இந்த உன்னத வாயுக்களுக்கு உண்டு.
நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்று ஐந்து வாயுக்களுடன் நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்கள் உள்ளன. இவைகளே ஞானேந்திரியங்கள் எனப்படும் கண், காது, மூக்கு, வாய், மெய் இயங்குவதற்கும், கர்மேந்திரியங்கள் எனப்படும் கால், கை, வாய், கருவாய், எருவாய் இயங்குவதற்கும் தேவையான வாயுக்களாக அமைகின்றன.
உள்ளே, வெளியேவென சென்று பரவி நிற்கும் மூச்சுக்காற்றானது உடலின் அனைத்து அங்கங்களின் இயக்கத்திற்கும் காரணியாக அமைகிறது. சீருடன் பிராணாயாமப் பயிற்சி செய்து தேவையான வாயுக்களை உள்ளே நிறுத்தப்பழகினால், உடல் உறுப்புகள் நல்ல தேஜஸ் பெறும். தலை முடி கருத்திருக்கும். உடலின் உள்ளே ஜீவனாய் அமர்ந்திருக்கும் இறைவன் உடலை விட்டு நீங்கமாட்டான்.
தொலைக்காட்சி அல்லது வானொலி அலைவரிசையை சரியாக அமைப்பதன் மூலம் காற்றில் வரும் அலைகளை காட்சிகளாகவும், ஒலிகளாகவும் அறியலாம்.
ஆகாறு [பொறாமை], அவா [பேராசை], வெகுளி [வெகுண்டெழுதல்], இன்னாச்சொல் [பிறரை வேதனைப்படுத்தும் சொற்கள்] போன்றவற்றை நீக்கி மனவலைகளை சரியான நிலையில் வைத்தால், உன் உயிரினில் வாழ்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
பொருள்:
பன்னிரண்டு மணி நேரத்தில் மாறி மாறி வரும் இரவு-பகலில், நிமிடத்திற்கு குறைந்தது பன்னிரண்டு முறை சுவாசிக்கும் காற்றின் உயிர் நிலை அறிந்து கொண்டால் இரவும் பகலும் ஒன்றுதான். விழிப்பும் உறக்கமும் ஒன்றுதான்.
பொருள்:
அறிவு நிலை மிஞ்சிய நடப்புகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. நல்ல உறுதுணை இருந்தால் மட்டுமே 'அவன்' உறையும் பாதை அறிந்து கொண்டு பேரின்ப நிலை அடையலாம். குரு ஒருவரே நம்மை வழி நடத்த வல்லவர்.
நம் அறிவு நிலையில் தெளிவு பிறக்க வேண்டுமானால் முதலில் நமக்கு வீடு பேரடைய நல் வழி காட்டக்கூடிய குரு தேவை.
நல்லதொரு குரு கிடைத்த பின்னர், அவருடைய திருமேனியை தினம் தோறும் தரிசிக்க வேண்டும். அவருடைய பெயரை மந்திரமாய் உச்சரிக்க வேண்டும். அவருடைய அருளுரைகளை கேட்க வேண்டும். எப்பொழுதும் அவருடைய திரு உருவத்தை சிந்தித்திருத்தல் வேண்டும்.
இரசவாதம் செய்யும் ஆற்றல் இருந்தால் செம்பை பொன்னாக்கலாம்; இறவா நிலை பெறலாம் என்ற ஆராய்ச்சி நீண்ட காலம் இருந்திருக்கிறது. சித்தர்களுக்கு இரசவாதம் சாத்தியமே என்று படித்திருக்கிறோம்.
திருமந்திரம்-2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம் வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல் குரு பரிசித்த குவலயம் எல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
இரசவாதம் தொட்டதெல்லாம் போன். குரு தொட்டவரெல்லாம், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நீங்கி சிவனடி சேர்வார்கள்.
அணுப்பிளவு, அணுத்தரிப்பு நிகழ்வுகளில் ஒரு தனிமம் வேறு வேறு தனிமங்களாக மாறுவதை அறிந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, யுரேனியம்-235 தனிமம் அணுப்பிளவின் போது பேரியம்-141 மற்றும் க்ரிப்டன்-92 தனிமங்களாக மாறுகிறது. ஆயினும் செம்பை பொன்னாக்கும் கலை அறிவியலில் இன்னும் அறியப்படவில்லை.
தனிமத்தின் உட்பொருளாம், பேராற்றலின் கருவே இறை நிலை. இந்த பரம அணுவும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
யுகங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் என்ற கருத்தை தொடர்ந்து செல்வதுதான் என்னுடைய நோக்கம். [நட்புக்கரம் நீட்டுபவர்களுக்கு என் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.]
4 யுகங்கள்
1. சத்ய அல்லது கிருதா
2. திரேதா
3. துவாபர
4. கலி
ஒவ்வொரு யுகமும் வாழ்நாள் கொண்டவை. இவை தேவ ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது.
360 மனித ஆண்டுகள் = 1 தேவ ஆண்டு
புரிதலுக்காக: ராமாயணம், திரேதா யுகத்தில் கடந்து சென்றது. மகா பாரதம் துவாபர யுகத்தின் இறுதியில் முடிந்து விட்டது. கண்ணனின் மறைவில், 18 02 3102 [BC], நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், கலி யுகம் பிறக்கிறது.
துவாபர யுகம் - 2400 தேவ ஆண்டுகள். அதாவது, 864,000 மனித ஆண்டுகள்.
அதாவது, ராமாயணத்துக்கும் மகா பாரதத்துக்கும் இடையில் தோராயமாக 864,000 மனித ஆண்டுகள் உள்ளது.
ராமாயணம் 7323 [BC] காலகட்டமெனவும், குருக்ஷேத்திர போர் 3137 [BC] நடந்ததெனவும் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம், மனித ஆண்டு கணக்கீடுகளில்.