சூரியன்
இரவுமில்லை
சூரியனுக்கு
உறக்கமுமில்லை
பொருள்:
பன்னிரண்டு மணி நேரத்தில் மாறி மாறி வரும் இரவு-பகலில், நிமிடத்திற்கு குறைந்தது பன்னிரண்டு முறை சுவாசிக்கும் காற்றின் உயிர் நிலை அறிந்து கொண்டால் இரவும் பகலும் ஒன்றுதான். விழிப்பும் உறக்கமும் ஒன்றுதான்.

திருமந்திரம்-577
பன்னிரண் டானைக்குப் பகல்இர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே
நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குலம் உள்ளே சென்று திரும்புகிறது.
பகல் என்பது வலது நாசி வழியாக, அதாவது சூரிய நாடி வழியாக சுவாசிப்பது. இரவு என்பது
இடது நாசி வழியாக , அதாவது சந்திர நாடி வழியாக சுவாசிப்பது. இதை காற்றை சுவாசிக்கும்
நாம் அறிந்திருக்கவில்லை. சுவாசிக்கும் காற்றின் செயலை அறிந்து, காற்றை அக்னி நாடியான
சுழுமுனை நாடி வழியாக செலுத்த வல்லவர்களுக்கு, சுவாசத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் புருவ நெற்றியில்
இருக்கும் சுழுமுனையில் இறைநிலையில் கலந்துவிடும்.
No comments:
Post a Comment