Monday, March 25, 2019

அம்மா

அம்மா 

மண்ணுலகை வெறுப்பாரும்
விண்ணுலகை மறுப்பாரும்
மறப்பாரோ அம்மாவை

பொருள்: 
பிறக்குமுன்னர், உயிரமுதம் பருகுமுன்னர், இறையருள் கற்றுத்தந்த  மந்திரச்சொல் அம்மா.

ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் தன்  மழலை 'அம்மா' என்றழைக்க கேட்கும் அம்மா.

அம்மாவை, 'அம்மா' என்றழைப்போம்; 'அம்மா' என்றழைக்க கேட்போம்.

வீற்றிருந்தாளன்னைவீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாளின்றுவெந்துநீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும்வாருங்களேதென்றிரங்காமல்
எல்லாஞ் சிவமயமே யாம்.
                                                                        -பட்டினத்தார் 

என் அம்மாவின் முதலாமாண்டு நினைவு தினம்: 17 04 2019

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...