Saturday, October 11, 2025

காலதேவனின் கணக்கு

காலதேவனின் கணக்கு 

உடலைப்  பிரிந்த  உயிரின் நிலை என்ன?

மறுபடியும் பிறந்திருக்கும்.

இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் உயிரின் நிலை என்ன?

இராப்பகல் அற்ற சுத்தப் பெருவெளியில்  இருக்கும்.

உயிரின் இறுதி ஆதார நிலை என்ன?

முழுமுதற் பொருளான இறைவனுடன்  இணைந்து  இருக்கும்.

இதைத்தான் திருமூலர் இவ்வாறு விளக்குகிறார்.

திருமந்திரம் - 1822

கூறுமின் நீர்முன் பிறந்துஇங்கு  இறந்தமை 
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீங்கிடும் 
பாரணியும்  உடல் வீழவிட்டு  ஆருயிர் 
தேரணியும் இது  செப்ப  வல்லீரே. 

ஏற்கனவே நீங்கள் இந்த பூமியில் பிறந்து, இறந்திருக்கிறீர்கள், மீண்டும் பிறந்திருக்கிறீர்கள் இது வேறு.  அதைப்போலவே, பூமியில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வ நிலை அடைந்து இறந்தவரின் உடலை விட்டு அதன் மெய்ப்பொருளான உயிர் நீங்கியிருக்கும்.  ஆனால், அவர்  இந்த மண்ணில் பிறக்கும்போது கூட வந்த உடலை, மண்ணிலேயே விட்டுவிட்டு சென்ற உயிர், இறைவனின் தேரில் ஏறி இறையுடன் இணைந்திருக்கும். அந்த உயிர் மீண்டும் மண்ணில்  பிறப்பெடுக்காது.

இதைப்  புரிந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள்.

*** *** *** *** ***





Monday, October 6, 2025

பெருந்துயரம்

பெருந்துயரம் 

 



திருமந்திரம் - 171

ஈட்டியதேன் பூமணம் கண்டு ரதமும் 
கூட்டியே கொணர்ந்து ஒருகொம்பிடை வைத்திடும் 
ஓட்டியே துரத்திட்டு அதுவலியார் கொளக் 
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 

இந்தப் பாடலுக்கான சரியான பொருள் நீண்ட காலம்   பிடிபடாமலே இருந்தது. இந்தப் பாடலின், நேரான விளக்கம், மெய்யியல் விளக்கம் மற்றும் அரசியல் விளக்கம் என  மூன்று கோணங்களில் புரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேனீக்கள் மலர்களின் நறுமணத்தைக் கொண்டு, மலர்களிடம் இருந்து  தேனை சேகரிக்கிறது. மரத்தின் கொம்புகளில் உள்ள தனது தேனடையில் சேமித்து வைக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தேனடை தெளிவாக தெரிவதால், தேனெடுக்கும் ஆற்றல்  உள்ளவர்கள்,  தேனீக்களை துரத்திவிட்டு தேனை எடுத்துக்கொள்வார்கள்.

மலர் தன் நறுமணத்தால் காட்டிக்கொடுத்து  தேனை இழந்தது. தேனீ, கண்ணில் படும்படி கட்டிய  தேனடையால் அதன்  பலனை இழந்தது.

இது நேரான புரிதலில்..

மனிதன் சுவையான  உணவினை தேடி தேடி  உண்டு பல வகைகளில் தன் உடலை வளர்த்து  வைத்திருக்கிறான். ஒரு நாள், கால தூதன் உயிரை எடுத்தபின், பொத்தி பொத்தி வளர்த்த உடலால் எந்த நன்மையும்  அவனுக்கு இருப்பதில்லை.

இது மெய்யியல் பார்வையில்..  

ஒருவன் தன் பல வருட உழைப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொள்கிறான். அவர்களின் மூலம் தனக்கான ஒரு அரசியல் பாதையை அமைத்து வெற்றிக்காக பாடுபடுகிறான். அவனுக்கு சேரும் கூட்டம் ஆட்சி செய்பவர்களின்  கோபத்தை தூண்டி விடுகிறது. இதுவே, கரூரில் நடந்த பெருந்துயர நிகழ்விற்கு  காரணமாகிறது. கூடிய கூட்டத்தால் அவனுக்கு எந்த பலனும் இல்லை. 

இது அரசியல் நிகழ்வில்..

*** *** ***

மக்களை காப்பது மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் கடமை 

மக்களை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மக்களின் உயிரை காப்பதுதான் மன்னனின் தலையாய கடமை 

மற்றவர் மீது  குற்றம் சுமத்துவது  சுத்த மடமை 


*** *** ***







 

Tuesday, September 30, 2025

பயணம் முடிந்துவிடும்

பயணம் முடிந்துவிடும் 

NEWS: 

Accenture lays off more than 11,000 employees: CEO Julie Sweet says we are "exiting" employees on a compressed timeline, people where reskilling, based on our experience, is not a viable path for the skill we need.

மற்றவர்கள் உங்களை மாற்றுவது சாத்தியமல்ல. நீங்களாக, மாறுவதை தெரிந்து, மாறிக்கொள்ளுங்கள்.

புதிய பயணத்தை தொடங்குங்கள்.

திருமந்திரம் - 177

கிழக்குஎழுந் தோடிய ஞாயிறு மேற்கே 
விழக்கண்டும் தேறார் விழிஇலா மாந்தர் 
குழக்கன்று மூத்து எருதாய்ச் சிலநாளில் 
விழக்கண்டும் தேறார் வியன்உல கோரே.

காலையில் கிழக்கே உதிக்கும் கதிரவன் மாலையில் மேற்கே மறைவதை தினமும் காண்கிறீர்கள். மாற்றத்தை கண்கூடாக பார்த்தும் பாராமல் இருக்கிறீர்கள். எருதின் கன்று வளர்ந்து பருவமடைந்து, வாழ்நாள் முடிந்து நம் கண் முன்னரே மறைவதை பார்த்தும் மாற்றத்தின் தன்மையை உணராமல் இருப்பது வியப்பாக இருக்கிறது.

எந்தவொரு பயணமும் மாறி மாறி ஒரு நாள் முடிந்துவிடும் என்பதை  உணர்ந்து கொள்ளுங்கள். வாழும் நாட்களை விழிப்புணர்வோடு வாழுங்கள்.






Saturday, September 27, 2025

காமதேனு

காமதேனு 


திருமந்திரம் - 2015

கற்ற பசுக்கள் கதறித் திரியினும் 
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும் 
முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போது 
மற்றைப் பசுக்கள் வறள்  பசுதானே.

தமிழகம் ஏன் ஏனைய மாநிலங்களில் இருந்தோ, மற்ற நாடுகளில் இருந்தோ தனித்து  தெரிகிறது? இறைத்தலங்கள் நிறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் இறை உணர்வாளர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். 

இங்குதானே, இறை  மறுப்பாளர்களும், அவர்களின் போதனைகளும் நிறைந்து வழிகிறது. இவர்களின் போக்கும், செயல்களும் தாங்கள் மிக்க அறிவுடையவர்கள் மற்றவர்கள் இழி பிறவிகள் என்னும் அளவிற்கு தங்களை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

'கடவுள் இல்லை ' - என்றால் பகுத்தறிவாளன். உண்டு என்றால் சுயமாக சிந்திக்கும் திறனற்ற பழமைவாதி. 

இந்த பகுத்தறிவாளர்கள்தான் தான்  கற்ற பசுக்கள். கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசும் தங்கள் பங்கிற்கு இறை மறுப்பை சிரமேற்கொண்டிருப்பதும் தமிழகத்தில்தான். மக்களின் தேர்தல் வாக்குகளுக்காகவும், கோயில்களின் சொத்துகளுக்காகவும், தினம் தினம் உண்டியலில் சேரும் செல்வத்திற்காகவும், இவர்கள் செய்யும் குட முழுக்குகளும், விழாக்களும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் கொற்ற பசுக்கள். நெற்றியில் அதிகாரம் என்னும் குறியை கட்டி  மேய்பவர்கள். 

ஆனால், தன்னுள் நிரம்பி நிறைகுடமாக உள்ள ஒருவர் போதும். உலகையே தன் பக்கம் இழுத்து, சமுதாயத்திற்கு தேவையானதை செய்ய.

இந்த முற்ற பசுவின் ஒரு குடம் பால் போதும். ஏனைய பசுக்கள், பால் வற்றிய வறள் பசுக்களே.

அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர். சமுதாய ஊடகத்தின் இன்ப்ளூயன்சர்.









                                                                                      

Tuesday, September 16, 2025

ஆசை நூறுவகை

 ஆசை நூறுவகை 



திருமந்திரம் - 2033

அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே.


புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக  வாழ்வை  அடைய  முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான்  இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு;   நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர  வாழ்வாகி விடும்.

எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.

புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.


 

Sunday, September 14, 2025

புலனறிவே யோகம்

புலனறிவே  யோகம் 


திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.

ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது  உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான  யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது. 

நம் உடலில் ஆற்றல்  உள்ள போது,  புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு  பயிற்சி செய்ய வேண்டும்.



Monday, August 11, 2025

உனக்காக எல்லாம் உனக்காக

 /உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக/


நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கொஞ்சம் கட்சிக்குள்ளே வந்து வேலைய செய்வேன் அதுக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

ஊருக்குள்ளே வந்து காரு  பந்தயம் நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

ஊருக்குள்ளே வந்து காரு பந்தயம்  நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

இல்ல ஆத்து  மணல  அள்ள  அள்ள லைசென்ஸ்   எடுக்கணுமா?

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

இந்திர லோகத்திலே இந்திரனே நின்னாலும்     
தேர்தலில்  பணத்த  அள்ளி வீசி ஜெயிச்சிடுவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

நீட்டு  ரகசியத்தை ரகசியமா வச்சிக்குவேன். மதுபாட்டில்  ஆனாலும் கூட்டு சேந்து நிதி              தேத்திடுவேன்.

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..


ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...