Friday, December 31, 2021
போனால் போகட்டும் போடா
Wednesday, September 29, 2021
அற்றதொன்றழிவற்றது
Monday, August 9, 2021
காற்றின் காதல்
யாரும் வாழப்பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்று தானே
புயலாக நானிருந்தேன். கடலாக அவளிருந்தாள். காதலை சொன்னேன், சுனாமியாக மறுதலித்தாள்.
நினைவுக்கனல் ஏற்றி,
தென்றலாக மாறிநின்றேன்.
எனக்குள் சங்கமித்தாள்,
சாரலாக குளிர்வித்தாள்.
காற்றினை நீர் ஏற்காது. காற்றினுள் நீர் கரைந்து நிற்கும்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றை தண்ணீருக்குள் செலுத்தி நிறுத்திவிட முடியாது. ஆனால், தண்ணீரைவிட மிக மெலிதாக வெப்பம் கூடுதலாக தென்றல் இருக்கையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து தன்னுள் வைத்துக்கொள்ளும்.
நீர்.. நெருப்பு.. காற்று.
மனித உடலிலும் இந்த முக்கிய மூன்று அம்சங்கள் பொதிந்திருக்கிறது.
காற்றடைத்த பை நம் உடல். உடல் முழுதும் சென்றுவர அதற்கு எழுபத்திரண்டாயிரம் பாதைகள்.
இந்த பாதைகளில் ஏற்படும் அடைப்புகள், தடைகளே உடலின் ஆரோக்கிய கேட்டிற்கு முதல் காரணி ஆகிறது.
வாயுப்பிடிப்பு என்று சாதாரணமாக சொல்லி கடந்து செல்கிறோம்.
காற்று புக முடியாத பாதைகளிலும் நீர் புகுந்து விடுகிறது.
Thursday, July 29, 2021
ஆலயமணி
ஆலயமணியின்
ஓசையை
நான் கேட்டேன்
Monday, July 26, 2021
நெஞ்சம் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
தாமரை மலரில்
மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில்
மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
பாடலில் வரும் இந்த வரிகளில் என்ன சொல்ல வருகிறார் கவியரசர்.
நெஞ்சம் எங்கிருக்கிறது? எப்படி இருக்கிறது?
இதயம் இருக்கும் இடத்தை நெஞ்சம் என்று கூறுகிறோம். இதனையே ஆறாதார சக்கரங்களில், அநாகத சக்கரம் உள்ள இடமாக சித்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
அறிவுக்கு மேலேறி யெட்டாமங் குலத்துக்
கப்பாலே யநாகத்தின் வீட்டைக் கேளு
முறிவுக்கு முக்கோண மாக நிற்கும்
முதிர்வளையம் பன்னிரண் டிதழு மாகும்
- போகர் 7000 - 46
இந்த நெஞ்சம் பன்னிரண்டிதழ்கள் கொண்ட தாமரை மலர் என்றும் வர்ணிக்கிறார்கள்.
இதனையே திருமூலர்,
ஆயும் மலரின் அணிமலர் மேலது
ஆய இதழும் பதினாறும் அங்குள
தூய அறிவு சிவானந்தம் ஆகிப்போய்
மேய அறிவாய் விளைந்தது தானே.
- திருமந்திரம் 1711
எதையும் ஆராய்ந்தறியும் இயல்புடையது மனம் - இதயத்தாமரை.
நெஞ்சத்தின் தன்மைகளை அகத்தியர் கூறுவதை கேளுங்கள்.
- அகத்தியரின் சௌமிய சாகரம் 32
உயிரோடு கலந்த சக்தி, மாயை நிலையில் இயங்கும் உடல், உணர்வுதனை மனதுக்கு வழங்குகிறது. மனதிற்கு என்று தனிப்பட்ட எந்த கோளும் அதாவது புலனுறுப்பும் இல்லை.
ஆயினும், 1. மனம் 2. புத்தி/அறிவு 3. ஆங்காரம் 4. சித்தி என்ற நான்கு படிகளில் மனித உணர்வுகளை வழி நடத்துகிறது.
Thursday, July 15, 2021
மந்திரம்
மந்திரம்
என்ன சத்தம்
இந்த நேரம்
உயிரின் ஒளியா?
உயிரின் ஒளிக்கு சப்தமுண்டோ?
வாருங்கள் ஆராய்ந்து பார்ப்போம்.
அளவின் வரி வடிவம் எண்.
ஒலியின் வரி வடிவம் எழுத்து.
எண்கள் அளவினை துல்லியமாக தெரிவிக்கும். எழுத்துக்களோ ஒலியின் ஓசையை தோராயமாக வெளிக்கொண்டு வரும். சில நேரங்களில் ஒலியை வரிவடிவில் கொண்டு வர இயலாத பலவீனமும் எழுத்துக்களுக்கு உண்டு.
மத்தள ஓசையை 'டும்.. டும்..' என்று எழுதினாலும், காதில் விழும் மத்தள ஓசையும், எழுத்தும் ஒன்றுவதில்லை. பறவைகள், விலங்குகளின் குரல் ஓசைக்கு புதிய வார்த்தைகளை எழுதி புரிந்து கொள்கிறோம். குயிலின் கூவலை, சிங்கத்தின் கர்ஜனையை எழுத்தில் எழுதி விட முடியாதுதானே.
எழுத்துக்களுக்கு உள்ள இயலாமை இது.
க, ச, ட, த, ப போன்ற உயிர்மெய் எழுத்துக்களுக்கு வார்த்தைகளின் தன்மைக்கேற்ப உச்சரிப்பு வேறுபடுகிறது.
இந்த சமயங்களில், நாம் எழுத்துக்களின் உச்சரிப்பை அனுபவ ரீதியாக படித்தறிந்து கொள்கிறோம். புதியதாக தமிழ் கற்பவர்களுக்கு இந்த படிப்பறிவு சிம்ம சொப்பனமே.
ஆங்கில வார்த்தைகளில், உச்சரிப்புக்கு ஏற்றவாறு துணை எழுத்துக்களை சேர்த்துக்கொள்ள முடியும்.
க என்பதை ka kha ga gha என்றெழுதி உச்சரிப்பை மாற்றலாம்.
தமிழில் இது சாத்தியமில்லை.
ஆனால், அவ்வாறான உச்சரிப்பிற்கான தேவையை உணர்ந்து, தமிழில் ஆதி [கிரந்த] எழுத்துக்களில் இதனை சாத்தியப்படுத்தி இருந்தார்கள். அந்த எழுத்துக்களை, புதிய ஒலியின் வரி வடிவத்தை 'அக்ஷரம்' என்றழைத்தார்கள்.
அதன் அளவு 51. அதாவது ஐம்பத்தொரு அக்ஷரங்கள். இதனை பல பாட்டுக்களில் திருமூலர் அளவிட்டிருக்கிறார். மேலும், என்னை நன்றாக இறைவன் படைத்தான், அவனை நன்றாக தமிழில் மக்களுக்கு எடுத்துரைக்க என்னும் திருமூலர், வேற்று மொழியில், திருமந்திர மாலையை [300] 51 அக்ஷரங்களால் அலங்கரித்திருக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.
மூலன்உரை செய்த மூவாயிரம் தமிழ்
மூலன்உரை செய்த முன்னூறு மந்திரம்
மூலன்உரை செய்த முப்பது உபதேசம்
மூலன்உரை செய்த மூன்றும் ஒன்றாமே.
- திருமந்திரம் 3046
உடல் ஒலி:
இப்பொழுது தமிழ் எழுத்துக்களில் இருந்து சற்று விலகி, ஆதி எழுத்துக்களான அக்ஷரங்கள் பற்றி அறிய வேண்டிய அவசியத்தை பார்ப்போம்.
மனித உடல் 51 ஒலி அலை நிலைகளை கொண்டிருப்பதாக அளவிட்டிருக்கிறார்கள். இவ்வொலி அலைகளை முறையாக வெளிப்படுத்துவது, மனதுக்குள் உச்சரிப்பது, ஜெபிப்பது போன்றவை உடலின் வலிமையை, உள்ளத்தின் ஆற்றலை, நடைமுறை வாழ்வின் செயல்திறனை ஊக்கப்படுத்தும் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். உடலின் அனைத்து பகுதிகளிலும் 51 அக்ஷரங்கள் விரவி உள்ளது.
இந்த அக்ஷரங்கள் ஆறு ஆதார நிலைகளில் மையம் கொண்டுள்ளது என சித்தர்கள் வகைப்படுத்தி உள்ளார்கள்.
ஆறு ஆதாரங்களும், ஐம்பத்தியொரு அக்ஷரங்களும்:
1 மூலாதாரம் - [வ, ச, ஷ, ஸ] - 4
2 சுவாதிட்டானம் - [ப3, ப4, ம, ய, ர, ல] - 6
3 மணிபூரகம் - [ட3, ட4, ண, த, த2, த3. த4, ந, ப, ப2, ம] - 11
4 அனாகதம் - [க, க2, க3, க4, ங, ச, ச2, ஜ, ஜ2, ஞ, ட, ட2] - 12
5 விசுத்தி - [அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள, அம், அஹ] - 16
6 ஆக்கினை - [ஹ, ள] - 2 (51)
- போகர் 7000
இது எப்படி என்றால், எல்லா மலர்களிலும் தேன் இருந்தாலும், தேனடையில் சேமிப்பு நடப்பதைப்போன்றது. தேனடையில் உள்ள தேனை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படிதான் ஆறு ஆதாரங்களில் சித்தர்கள் ஞான அறிவில் சேகரித்து தெரிவிக்கும் 51 அக்ஷரங்கள்.
அக்ஷரங்களின் மூலம் முறையான ஒலி அலைகளை உருவாக்கும் தொகுப்பே, நாம் பயன்படுத்திக்கொள்ளும் தேனைப்போன்ற, மந்திரம்.
உயிர் ஒலி:
காணவே மூலமஃ தண்டம் போலக்
காரணமாய்த் திரிகோண மாக நிற்கும்
பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்
புறம்பாக விதழதுவும் நாலு மாகும்
நாணவே நாற்கமலத் தட்ச ரங்கள்
நலமான வ-ச-ஷ- ஸவ்வு மாகும்
மூணவே முக்கோணத் துள்ளொளியோங் கார
முயற்சியா யதற்குள்ளே அகார மாமே. - போகர் 7000
ஓரெழுத்து மந்திரம் எனும் 'ஓம்' மூலாதாரத்தில் உதிக்கும் உயிரணு மந்திரம். இதனையே பிரணவ மந்திரம் என்றும் சொல்கிறோம். இந்த ஓம்காரம் மூலாதாரத்தில் ஒளியுடன், ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
உயிரின் ஒளிக்கு சப்தமுண்டு.
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப்பற்றத் தலைப்படும் தானே.
- திருமந்திரம் 85
அண்டத்தை பற்றி நிற்கும் மந்திரத்தை சொல்ல வேண்டும் என்றால் அது உடலைப்பற்றி நிற்கும் உணர்வு நிலை மந்திரம் ஓம். இதனைப்பற்றி நிற்க அதனுடைய உண்மை நிலை நமக்கு விளங்கும்.
பிரணவ மந்திரத்தின் ஒலி அலைகளை தொடர்ந்து தூண்டுவதன் மூலம், மூலாதாரமும், பிரபஞ்சமும் ஒரே அலை வரிசையில் பயணிக்கும்.
இது மனிதன் வாழும் நாட்களை மகிழ்வுடனும், ஆனந்தத்துடனும் கழிக்க மிகச்சிறந்த ஆன்மீக வழி முறை ஆகும். பேரின்ப நிலையில் மூழ்கி, ஜீவன் முக்தியடையும் மார்கமும் இதுவே!
.
Monday, June 28, 2021
பேரண்டம் அகண்டம்
உன்னை அறிந்தால் நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
ஒரு பொருளை பகுத்து அறிந்து கொள்ளும் அறிவு மனிதர்கள் பெற்ற கொடை. ஆனால், அதற்கு மேற்பட்ட அறிவு நிலை உள்ளதை உணரும் மனிதனால், அதனை என்னவென்று அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை.
உதாரணமாக, இரு பரிமாண நிலையில் வாழும் இனம், முப்பரிமாணம் என்றால் என்ன என்பதை அறியும் ஆற்றல் அற்று இருக்கும். முப்பரிமாண நிலையில், மேலிருந்து விழும் பொருளினைப்பார்த்து, அது எவ்வாறு சாத்தியம் என்று ஆராய்ந்த வண்ணம் இருக்கும். அதனுடைய அறிவு நிலைக்கு முப்பரிமாணம் என்ற ஒன்று இருப்பதே எட்டாது.
மனிதனின் பகுத்தறிவும் இந்த விதிக்கு உட்பட்டதே.
ஆய்வகங்கள் இன்றி, இறை சக்தி ஒன்றையே விதியாக ஏற்று, நமக்கு அருமையாக தமிழில் எளிமையான பாடல்களாக சொல்லி சென்றுள்ள சித்தர்களை போற்றி, அவர்கள் வழியில் நின்று, மனித அறிவின் எல்லைகளைத்தாண்டிய உண்மைகளை அறிந்து கொள்வோம்.
ஆதியில் தோன்றிய பரம அணு, பாழ் நிலையை அழித்து ஒளியும், ஒலியுமாக விளங்கியது. பரமணுவில் தோன்றிய நாதம், 'ஓம்' என்றறியப்பட்டது. பேரண்டத்தில் இந்த ஓங்காரம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது.
இதே நாதம், நம் உயிரணுவில், மூலாதாரமாம் அகண்டத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மூலமாம் நாதத்துண்மை உணர விப்போதே முத்திஆலமுண்டானும் மாலும் அயனுமிப் படியுணர்ந்தே
சாமா இறைவராகிச் சமைந்தது சகத்துக்கென்றால்
ஏலு மந்திர வாதத்தே இருமையும் பெறலாம் அன்றே.
மனிதனால் அணுவைப் பிளக்க முடிந்தது. அணுவினுட்பொருள் [Neutron, Proton, Electron] என காண முடிந்தது. உட்பொருளின் ஆக்கம் குவார்க், எதிர்-குவார்க் [Quark, Anti-quark] எனப்படும் நேர் மின்சுமை , எதிர் மின்சுமை என்றறிய முடிந்தது. அதாவது ஆணும், பெண்ணும் ஒன்றிணைந்து, ஹர்தநாரியாக இருப்பதைப்போன்று. குவார்க்குகளே அணுவின் கட்டமைப்பில் அடிப்படை பொருளாக அமைகிறது.
புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்'. அணுக்களின் இண்டராக்ஷன், உராய்வின் போது போட்டான் [Photon] என்னும் ஒளி அணு உண்டாகிறது; கூடவே ஒலி என்னும் நாதமும். இந்த ஒலி 'ஓம்' என்ற சப்த வடிவை கொண்டது.
ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறி அழிந்து விடும். இது அறிவியல் விதி.
இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது.
பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை.
சமநிலை திரிபு என்பது பரமணுக்களில் உண்டான இறை நிலை என்பது ஆன்மீகத்தின் தீர்ப்பு.
அகண்டம்:
ஓரணு உயிரியாகத் தோன்றி, பல பல பிறவிகள் பெற்று பல படிநிலைகள் கடந்து மனிதனாக பிறக்கின்றோம். மனிதப் பிறவி பெற்றவர்களுக்கே சிந்திக்கும் ஆற்றல் உண்டு. யார் ஒருவன் அணுவிலிருந்து மனித பிண்டமாக வெளிப்பட்டு இந்த அண்டத்தை அறிகின்றானோ அவனே அண்டமும் பிண்டமும் அற்ற அகண்டம் நான் என்பதை அறிகின்றான்.
கல்லிலே கலைவண்ணம்
கல்லிலே கலைவண்ணம் எனக்கு தீப ஆராதனை. இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...
-
உயிரின் பயணம் முடிவதில்லை மனிதனுக்குள் இறைவன் ஒளித்து வைத்த ரகசியம்.. உயிரின் பயணப்பாதை உனக்குத் தெரியும் என்று உனக்குத் தெரியாது மனித...
-
கண்ணா லட்டு தின்ன ஆசையா? ஜருகண்டி.. ஜருகண்டி.. திருப்பதிக்கே மொட்டை அடித்து விட்டார்கள். ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஒருவருக்கும் உடல் நலனில்...
-
உணவே உயிர் சமீப கால இளவயதினரின் மரணங்கள் சமுதாயத்திற்கு பெரிய சவாலை விட்டு செல்கிறது. மரணங்களுக்கான காரணம் என்னவென்று தெளிவாக யாராலும் சொ...