உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம் உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
விழித்திருக்கும் நேரம் எல்லாம் நினைத்திருக்கும் பெண்ணினம் தவிர ஆன்மீகத்திற்கு பெரிய தடை ஒன்றும் இல்லை, ஆண்களுக்கு.
பெண்ணாசையை விட்டொழி! அதுவே உனது ஆன்மீக தேடலின் முதல் வெற்றி.
திருமந்திரம்-1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
உன்மீது இச்சை கொண்டு அல்லது நீ பார்க்கின்ற பெண்ணைப் பார்க்காமல் விலகிப்போய்விடு. மூலாதாரத்தில் தியானித்து, ஆர்ப்பரித்து உள்ளத்தில் எழும் எண்ணங்களை எரித்து, கண்களால் உண்டான ஆசையை அழித்து விடு. இவ்வாறு செயல் படுத்தும் சிவயோகிகளைப்போல் செய்தால் நீயும் சிவயோகி ஆவாய்.
பட்டினத்தாரைப்பாருங்க.. போட்டுத் தாக்குகிறார் கச்சித் திரு அகவலில்..
திருமால் பயந்த திசைமுகன் அமைத்து வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக் குலவிய சிவபதங் குறுகாது அவமே மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்.. 27
இப்படி ஆரம்பித்து, 40-வது பாடல்வரை ஒரே திட்டுதான்.
இப்படி ஆரம்பித்து, பத்து பாடல்களில் பெண்களை ஏன் விரும்பக்கூடாது என்று பின்னிப் பெடல் எடுக்கிறார்.
மலக்குடல் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.. 59
மேல் குறிப்பிட்ட பாடல்களை எழுதியவர்கள் எல்லாம் ஆண்கள். அவர்களை மிகவும் பாதித்த ஒன்றை, அவர்களது ஆன்மீக தேடலில் தடையாக வந்ததால் எழுதி சென்றுவிட்டார்கள்.
உண்மையில், நடந்தது என்ன?
அவர்களால் வெல்ல முடியாத சக்தியாக நின்றது பெண்மை. ஆணுக்கு சரி நிகரான இணை சக்தி.
அணுவினுள் உள்ள புரோட்டான் எனும் நேர் விசைக்கு எதிர் விசையாக நிற்கும் எலக்ட்ரான் போன்றது.
மூலாதாரத்தில், ஓம் எனும் நாதத்தில், மகார நாதமாக விளங்குவது.
மானிட நிலையில், சக்தியை உணர்ந்து ஏற்று,. அறிந்து நீரோட்டம் போல் ஆணும் பெண்ணும் இருந்தால் இவர்கள் இப்படி பாடி செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு, மூன்று காரணங்கள் கணக்கிடலாம்:
1. கடின பயிற்சியினால், விந்துற்பனம் மூலம் உடலில் செய்து கொண்ட மாற்றங்கள்.
2. உடலில் ஐம்புலன்களை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்காதது.
3. பெண்களை கவர முடியாத உடல் அல்லது போகத்திற்கு பெண்கள் கிடைக்காத சூழ்நிலை.
திருமந்திரம்-180
விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே.
அழகிய இளம் கன்னியருக்கு நான், அடிக்கரும்பில் பிழிந்தெடுத்த சாறுபோல் இனித்த காலங்கள் உண்டு. என் இளமை நீங்கியபின், பெண்கள் என்னை மிகுந்த கசப்பு சுவை உடைய எட்டிக்காயைப் போல் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.
இளமை நீங்கிய நிலையில் பெண்களைத் தேடினால் எப்படி அது நடக்கும்?
உறவின் நிலையில் பெண்ணின் மேல் ஏற்படும் அன்பு உணர்வை அப்படியே தன்னுள் தக்க வைக்க கொள்ள முடிபவர்களுக்கு அதுவே இம்மை தரும் சிற்றின்பமும், மறுமை தரும் பேரின்பமும்.
சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்து செல்லும் கருவியாக இருக்கும் பெண்ணே ஆன்மீகத்தில் நோயும், மருந்தும்.
ஊர்வசிகள் நடனமாடினால், விஷ்வாமித்திரர்கள் எல்லாம் 'க்ளீன் பௌல்ட்'.
உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம் உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்
பெண் கிடைக்கவில்லை என்றால்,
பந்தலில் தொங்கிக்கொண்டிருக்கும் திராட்சை பழத்தை கவ்வி பிடிக்க, பல முறை குதித்து முயன்று, தோல்வியில் முடிந்த நரி, சொல்லிக்கொண்டே ஓடியது -
பஞ்சு பஞ்சாக வரணும் பணியாரம் வெள்ளி நூலாக வரணும் இடியாப்பம்
கோதுமை அல்வா நன்றாக திரண்டு, நெய் மணத்தோடு நல்ல நிறத்தோடு வந்திருப்பதை பார்த்து திருப்தி அடைந்த வெங்கடேச ஐயர், இதுவரை கிண்டி வைத்திருந்த அல்வாவை எடுத்து பெரிய தட்டில் ஊற்றினார்.
'டேய் சோமு, செத்தே பாத்துக்கோ. இதோ வந்துர்றேன்' - பன்னிரண்டு வயது பையனிடம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு அல்வா கடையின் முன் பக்கம் சென்றார் ஐயர்.
வெங்கடேச ஐயர் தலை மறைந்ததும் அவசரமாக, சூடாக இருந்த அல்வாவை ஒரு கரண்டியில் எடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டான், சோமு.
அடுத்த வினாடியே, அவன் அலறிய அலறலில் மொத்த கடை ஊழியர்களும் அங்கு வந்துவிட, அவன் துடி துடித்து இறந்ததை பார்ப்பதை தவிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.
நிச்சயம் சோமு அதை சுவைக்கவில்லை. அது இனிப்பான அல்வா என்று தெரிந்த ஒரே காரணத்தினால் எடுத்து விழுங்கிவிட்டான்.
இதைத்தான் நாம் அனைவரும் தினம்தோறும் செய்து கொண்டிருக்கிறோம். எதையும் சுவைத்து, ரசித்து அனுபவிப்பதில்லை. சாப்பிட்டோம் என்ற திருப்தியில் நாட்களை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். அதற்கான சன்மானத்தை பல வகைகளில் பெற்று, வாழ்க்கையை துன்ப மயமாக்கிக்கொள்கிறோம்.
நம் உடல், அன்னமயகோஷம் என்று சொல்லப்படுகிற வண்ணம், உண்ணும் உணவினால் உண்டானது. உணவினாலேயே உடலில் உயிர் தங்கி உள்ளது.
உயிர் காக்கும் உணவை தினம் தினம் நமக்கு வழங்குபவர்களை நன்றியுடன் வாழ்த்த வேண்டாமா?
நாம் உண்ணும் உணவு, நம் உடலில் எப்படி செயல்படுகிறது என்று திருமூலர் சொல்வதை பார்ப்போம்.
திருமந்திரம்-1933
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம் பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத் திருந்தும் உடல் மனமாம் கூறுசேர்ந்திடு இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
உடலுடன் சேரும் சக்தி, உணவால் திருப்தியுறும் மனம் மற்றும் கழிவு என நாம் உண்ணும் உணவு மூன்று கூறாக உள்ளது. உடலும், மனமும் சேர்ந்தியங்குவதின் காரணம் நாம் முன்னர் உண்ட உணவின் சக்தியாலேதான்.
கொஞ்சம் சமையல் கலையும் கற்றுக்கொள்வோமே!
நமக்கு ஒரு ஃபில்டர் காபி போட தெரியாமல், இன்ஸ்டன்டில் திருப்தி பட்டுக்கொள்கிறோம். ஒரு challenge-ஆக எடுத்துக்கொண்டு முயற்சி செய்தால்.
உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
பார்க்கும்போது என்ன நிகழ்கிறது?
வேதியல் வினை.
கண்களில் ஒளி பட்டவுடன், வேதிவினை தூதுவர்கள் மூலம் மூளைக்கு செய்தி
செல்கிறது. மற்ற வேலைகளை பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகள் நடத்தி காட்டுகிறது.
இங்கே,
புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்..
சிவந்துதான் போகிறது.
நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும், பார்வைதான் சாட்சியாக விளங்குகிறது.
காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் நீரில் குதித்து , வீர விளையாட்டு புரியும் ஒருவன், நீரில் குதித்தவுடன் எப்படியும் கரை ஏறிவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் நீரில் குதிக்கிறான்.
நீரைப்பார்த்து, அதன் வேகத்தை கணித்து, குதிக்க வேண்டிய இடமும், கரை ஏற வேண்டிய இடமும் மனதுக்குள் தீர்மானித்து வெள்ளத்தில் பாய்கிறான்.
குறள்1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
கண் பார்க்க, வேதிவினை செய்தி ஒளி நரம்புகள் வழியாக மூளையை சென்றடைந்து, அங்கிருந்து பெரும் கட்டளைக்கேற்ப செயல்படுகிறான்.
நாளமில்லா சுரப்பியாகிய பினியல் சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன் நம்முடலை அனைத்து வகைகளிலும் சீராக வைத்திருக்கிறது.
புற உலகினை கண்டு, உடலினை சீராக்கும் இதே பினியல் சுரப்பிதான், சுழுமுனை, அகஉலகின் அடித்தளமாக உள்ளது.
இதனை மூன்றாம் கண் என்று ஆன்மிகம் சொல்லுகிறது. ஞான சித்தி பெற்றவர்கள் உறங்கும் இடமும் இதுவே.
தூங்கிக் கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக் கண்டார்நிலை சொல்வது எவ்வாறே.
- திருமந்திரம் 129
வாசி யோகம் அறிந்த சித்தர்கள் எப்பொழுதும் தியான உறக்கநிலையில் இருப்பார்கள். சிவலோகம், சிவயோகம் மற்றும் சிவபோகம் இவற்றை இவ்வுறக்க நிலையிலும் சுழு முனையில் உள்ள மூன்றாம் கண்ணால் கண்டு கொண்டிருப்பார்கள்.
சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ?
உடலின் ஒவ்வொரு அசைவிற்கும், உணர்வுக்கும் சாட்சியாக நிற்பது சந்திரன்.
விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும்
உயிர்ப்பித்திருப்பது சந்திரன்.
சந்திரன் என்பது புருவமத்தியில் உள்ள சுழுமுனை, அதாவது பினியல் சுரப்பி.
மனிதனின் அத்தனை அபிலாசைகளின் பிறப்பிடம். இங்கேதான் ஞானத்தேனும், தேவாமிர்தமாக சுரக்கிறது.
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடி உள்நின்ற பகைவரைக் கட்டுமே.
- திருமந்திரம் 661
மூலாதாரத்திலிருந்து பிராணனை மூச்சுப்பயிற்சி மூலம் சுழுமுனைக்கு கொண்டுசெல்ல வல்லவர்கள், பேரொளியை கண்டு, நாதத்தை கேட்டு, தேவாமிர்தமான ஞானத்தேனையும் உண்பார்கள். இம்முயற்சிக்கு பகையாக அங்கே உருவாகும் பற்றினையும் அகற்றி விடுவார்கள்.
ஆக்கினையில், சதாசிவத்துடன் நிலவொளியில் உறையும் மனோன்மணித்தாய், அனைத்து உணர்வு நிலைக்கும் ஆதாரமாக நிற்கிறாள்.
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயாஎன்று உபாயம் செய்தாளே.
- திருமந்திரம் 1107
அட்டாங்க யோகத்தில், சமாதி நிலையில் உறங்காமல் உறங்கி இருக்கும்போது, கை வளையல் ஒலியுடன், ஞான அமிர்தத்தை வாயில் ஊறச்செய்து, உறங்கும் நிலையை, உணர்வு நிலையாக மனோன்மணித்தாய் மாற்றி நின்றாள்.
அட்டாங்க யோகப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் சுழுமுனையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் உள்நாக்கு வழியாக தேன் போன்ற சுவையுடன் இறங்கும். இந்நிலை எய்தப்பெற்றவர்கள் அடையும் பேரின்பம், இருவர் கூடி அடையும் இன்பத்தை விட பல கோடி மடங்கு அதிகமாகும்.
புரசு என்பதும் அரச மரத்தை போன்ற ஒரு பிள்ளை வரம் தரும் மரமே!
'அரச மரத்தை சுற்றி வந்து, அடி வயிற்றை தொட்டு பாத்தாளாம்'
அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை வரம் கிடைக்குமா?
என்னவொரு முட்டாள்தனம்.. பத்தாம் பசலித்தனம்.. பகுத்தறிவற்ற காட்டுமிராண்டித்தனம்.
பேசாமல் செயற்கை கரு ஊட்டும் மருத்துவரிடம் சென்று, சொத்தை எழுதி வைக்க வேண்டியதுதானே புத்திசாலித்தனம். பிள்ளை வரம் கிடைக்காமலா போகும்.
பதினெண் சித்தர் காலத்தில், இந்த நவீன மருத்துவ முறை இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இயற்கையை சார்ந்து வாழ சொல்லி விட்டு போய் விட்டார்கள்.
இனி, அரச மரத்தின் சிறப்பை பார்க்கலாம், வாங்க.
காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை தானுண்டு, அதிக அளவு பிராண வாயுவினை வெளிவிடும் தன்மை அரசுவிற்கு உண்டு.
பிராண வாயுவுடன், வியானன் வாயுவும் அதிகளவு இருந்திருக்க வேண்டும். அதுவும், காலை நேரங்களில் அதிகமான அளவு இருக்கும்.
நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து வகையான வாயுக்களின் தன்மை இருக்கிறது என்று சித்தர்கள் வழி காட்டி சென்றுள்ளார்கள்.
வியானன் வாயு தனஞ்சய வாயுவுடன் சேர்ந்து, பிள்ளைப்பேறு சம்பந்தமாக அனைத்து செயல்களையும் நம் உடலில் செய்கிறது, ஆரம்பம் முதல். அந்த வாயுவின் தன்மை பெற்றோர் உடலிலும் சார்ந்திருக்கும்.
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன் காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன் காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை காலின்கண் வந்த கலப்பு அறியாரே.
- திருமந்திரம் 1954
காலத்தை வென்றவன், உடலில் விந்துவை விதைத்திருப்பவன். வீணடித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிகின்றான். பெண்ணுடன் சேரும் காலங்களில், உடல்களுக்குள் சேரும் காற்றின் கலப்பினை யாரும் அறிவதில்லை. இந்தக் காற்றை, வீங்கற்காற்று என்று சொல்வார்கள்.
தனஞ்சயனும், வியானனும் சமமாக ஒத்து இயங்கினால் இன்பம்.
மூளையில் நிலக்கடலை அளவுள்ள ஹைபோதலமஸ் [hypothalamus] அமைப்புக்குள், கண்களில் இருந்து வரும் ஒளியை உணரும் ஆயிரக்கணக்கான சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஸ் [suprachiasmatic nucleus] உள்ளது. மூளைத்தண்டு, 'தூக்கம்', 'விழிப்பு' நிலைகளை தொடர்ந்து ஹைபோதலமஸ்க்கு அறிவித்தபடி இருக்கும்.
மூளைத்தண்டில் இருந்து சுரக்கும் பினியல் சுரப்பி [pineal gland] என்னும் மூன்றாம் கண்,தொடர்ந்து சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஷிடம் இருந்து கண்களில் இருந்து வரும் ஒளி செய்திகளை [melatonin] பெற்று 'தூக்கம்', 'விழிப்பு' செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்.
அறிவியல் உடலினை ஆய்வு செய்வதுடன் நின்று விடுகிறது.
தூக்கம், விழிப்பு இரண்டின் கிரியா ஊக்கியான உயிரின் தன்மையை ஆன்மீகத்தில் பார்ப்போம், வாருங்கள்.
தூக்கமும் ஆன்மீகமும்
காற்றை சுவாசிக்கும் வரையில்தான் உயிர், உடலில் இருப்பதை அறிகிறோம். பொதுவாக மூச்சுக்காற்றை பிராண வாயு என்று சொல்லி நிறுத்திக்கொள்கிறோம்.
ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றினில் பத்துவகை வாயுக்கள் உள்ளன.
பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் - 5
கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் - 5
இந்த பத்து வாயுக்களில், தனஞ்சயன் வாயு மட்டும், மற்ற ஒன்பது வாயுக்களுடன் எப்பொழுதும் தலைமையேற்று இணைந்து செயலாற்றும்.
ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன் ஒத்தஇவ் ஒன்பதில் ஒக்க இருந்திட ஒத்தஉடலும் உயிரும் இருந்ததே.
- திருமந்திரம் 653
கண்களுக்கான வாயு கூர்மன். தனஞ்சயன், கூர்மன் வாயுக்களே நம் தூக்கம், மற்றும் விழிப்பின் கிரியா ஊக்கிகள். தனஞ்சயன் மற்ற ஒன்பது வாயுக்களோடு ஒத்திராமல் இருக்குமானால், பலவகை நோய்கள் உடலில் உண்டாகும்.
கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன்
கண்ணில் இவ்வாணிகள் காசம் அவனல்லன்
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால்
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
- திருமந்திரம் 655
உன் கண்கள் ஒளி வீசுகிறதென்றால், அதற்கு தனஞ்சயனும், கூர்மனும் இணைந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பொருள்.
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
ஆடியவர்கள் - மனங்களை
ஆட்டுவித்தார்கள் - மக்களை
ஆண்டார்கள் - வரலாறாய்
ஆகிவிட்டார்கள்.
இது திருவிழாக்காலம்.
ஆடலும், பாடலும் இல்லாமலா?
நவராத்திரி என்றும் தசரா என்றும் பெண் தெய்வங்களை போற்றி வணங்கும் நேரம்.
துரியன் பழம்.
இந்தியாவில் அதிகம் பரிச்சயம் இல்லாத பழம். முதலில் பார்த்த போதும், சுவைத்த போதும் எனக்கு அதன் சுவையும், மணமும் உடன்பாடில்லை.
அதன் மருத்துவ குணங்கள், சுவை மற்றும் மணத்தின் தன்மையை தெரிந்து கொண்ட பின்னர், அதன் முட்களும், மணமும் என்னுடன் பயணிக்கவில்லை.
இப்பொழுது என்னால் துரியன் பழத்தை ரசித்து, சுவைத்து உண்ண முடியும்.
தமிழில் உள்ள பாடல்களும் அப்படித்தான். புத்தகத்தில், செய்யுள் பகுதி வந்தாலே வயிற்றை பிசையும். அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம். பாடல்களில் உள்ள சங்கதி, சொல்லித்தரும் ஆசிரியர்களின் திறனை மீறிய பொருட்கள். மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவு எங்கே சொல்லித்தருவது.
தமிழ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. அதுவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
தமிழையும் சரியாக புரிந்து கொள்ளாமல், மனு ஸ்ம்ருதி என்று வேற்று மொழியில் யாரோ எழுதியதை, யாரோ மொழி பெயர்த்ததை வைத்துக்கொண்டு இவர்கள் போடும் ஆட்டமும், பெண் தெய்வங்களை கொண்டாடும் திருவிழா நாட்களில் தேவைதானா?
கண்கள் காணும் காட்சிகளில், மாயையை போக்கும் குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாயையை போக்க முடியாதவர்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் காட்டும் மாயையில், அவர்களுடனே விழுந்து மறைந்து போகவேண்டியதுதான்.
இப்பேற்பட்ட குருவின் கருத்துக்களை எடுத்துக்கோளாக காட்டுவதனால், தனக்கு இயல்பாக இருக்கும் அறிவு நிலையும் போய்விடும். அரசியலுக்கு உன் நுண்ணறிவுதான் மூலதனம், அது அதிகம் செலவாகிவிடும், தேவையற்ற மிடுக்கான வாய் சவடால் பேச்சுக்களால்.
மூலதனம் அதிகம் செலவானால் என்னாகும் தெரியுமா?
ஆன முதலில் அதிகம் செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.