Saturday, October 24, 2020

திருவிழா

திருவிழா 

விழியே விழியே 
உனக்கென்ன வேலை 
விருந்துக்கு வரவா 
நாளைக்கு மாலை 



ஆடியவர்கள் - மனங்களை
ஆட்டுவித்தார்கள் - மக்களை  
ஆண்டார்கள் - வரலாறாய் 
ஆகிவிட்டார்கள்.

இது திருவிழாக்காலம். 

ஆடலும், பாடலும் இல்லாமலா?

நவராத்திரி என்றும் தசரா என்றும் பெண் தெய்வங்களை போற்றி வணங்கும் நேரம்.

துரியன் பழம். 

இந்தியாவில் அதிகம் பரிச்சயம் இல்லாத பழம். முதலில் பார்த்த போதும், சுவைத்த போதும் எனக்கு அதன் சுவையும், மணமும் உடன்பாடில்லை.

அதன் மருத்துவ குணங்கள், சுவை மற்றும் மணத்தின் தன்மையை தெரிந்து கொண்ட பின்னர்,  அதன் முட்களும், மணமும் என்னுடன் பயணிக்கவில்லை.

இப்பொழுது என்னால் துரியன் பழத்தை ரசித்து, சுவைத்து உண்ண முடியும்.

தமிழில் உள்ள பாடல்களும் அப்படித்தான். புத்தகத்தில், செய்யுள் பகுதி வந்தாலே வயிற்றை பிசையும். அப்படியே மனப்பாடம் செய்ய வேண்டிய கட்டாயம். பாடல்களில் உள்ள சங்கதி, சொல்லித்தரும் ஆசிரியர்களின் திறனை மீறிய பொருட்கள். மாணவர்கள் புரிந்து கொள்ளும் அளவு எங்கே சொல்லித்தருவது.

தமிழ் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது. அதுவே எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.

தமிழையும் சரியாக  புரிந்து கொள்ளாமல், மனு ஸ்ம்ருதி என்று வேற்று மொழியில் யாரோ எழுதியதை, யாரோ மொழி பெயர்த்ததை வைத்துக்கொண்டு  இவர்கள் போடும் ஆட்டமும், பெண் தெய்வங்களை கொண்டாடும் திருவிழா நாட்களில் தேவைதானா?

கண்கள் காணும் காட்சிகளில், மாயையை போக்கும் குருவினை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாயையை  போக்க முடியாதவர்களை குருவாக ஏற்றுக்கொண்டவர்கள், அவர்கள் காட்டும் மாயையில், அவர்களுடனே  விழுந்து மறைந்து போகவேண்டியதுதான்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் 
குருட்டினை  நீக்காக் குருவினைக் கொள்வர் 
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்  
குருடும் குருடும் குழி விழுமாறே.

                                                                                                           - திருமந்திரம் 1680

இப்பேற்பட்ட குருவின்  கருத்துக்களை எடுத்துக்கோளாக  காட்டுவதனால், தனக்கு இயல்பாக இருக்கும் அறிவு நிலையும் போய்விடும்.  அரசியலுக்கு உன் நுண்ணறிவுதான்  மூலதனம், அது  அதிகம் செலவாகிவிடும், தேவையற்ற மிடுக்கான வாய் சவடால் பேச்சுக்களால்.

மூலதனம் அதிகம் செலவானால் என்னாகும் தெரியுமா?

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.           

                                                                                                                                                   - நல்வழி 25

ஒளவைப்பாட்டியின் பேச்சுக்கு மறு  பேச்சுண்டோ?

  

 











No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...