Sunday, November 1, 2020

தூக்கம்

தூக்கம் 

தூக்கம் உன் கண்களை 
தழுவட்டுமே 
அமைதி உன் நெஞ்சில் 
நிலவட்டுமே 


                
                           
            
கண்களிலே.. கண்களிலே.. கண்களிலே..  
தூக்கத்தின் துவக்கம் கண்களிலே..

தூக்கமும் அறிவியலும் 

மூளையில் நிலக்கடலை அளவுள்ள ஹைபோதலமஸ் [hypothalamus] அமைப்புக்குள், கண்களில் இருந்து  வரும் ஒளியை உணரும்   ஆயிரக்கணக்கான சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஸ் [suprachiasmatic  nucleus] உள்ளது. மூளைத்தண்டு, 'தூக்கம்',  'விழிப்பு' நிலைகளை தொடர்ந்து ஹைபோதலமஸ்க்கு  அறிவித்தபடி இருக்கும். 

மூளைத்தண்டில் இருந்து சுரக்கும் பினியல் சுரப்பி [pineal gland] என்னும் மூன்றாம் கண்,தொடர்ந்து சுப்ரக்யஸ்மாட்டிக் நியூக்ளியஷிடம் இருந்து கண்களில் இருந்து வரும் ஒளி செய்திகளை [melatonin] பெற்று 'தூக்கம்', 'விழிப்பு' செயல்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும். 

அறிவியல் உடலினை ஆய்வு செய்வதுடன்  நின்று விடுகிறது. 

தூக்கம், விழிப்பு இரண்டின் கிரியா ஊக்கியான உயிரின் தன்மையை  ஆன்மீகத்தில் பார்ப்போம், வாருங்கள். 


தூக்கமும் ஆன்மீகமும் 

காற்றை சுவாசிக்கும் வரையில்தான் உயிர், உடலில் இருப்பதை அறிகிறோம். பொதுவாக மூச்சுக்காற்றை பிராண வாயு என்று சொல்லி நிறுத்திக்கொள்கிறோம்.

ஆனால், நாம் சுவாசிக்கும் காற்றினில்  பத்துவகை வாயுக்கள் உள்ளன.

பிராணன், அபானன், வியானன், உதானன் மற்றும் சமானன் - 5
கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன் மற்றும் தனஞ்சயன் - 5

இந்த பத்து வாயுக்களில், தனஞ்சயன் வாயு மட்டும், மற்ற ஒன்பது வாயுக்களுடன் எப்பொழுதும் தலைமையேற்று இணைந்து செயலாற்றும்.

ஒத்தஇவ் ஒன்பது வாயுவும் ஒத்தன 
ஒத்தஇவ் ஒன்பதின் மிக்க தனஞ்சயன் 
ஒத்தஇவ் ஒன்பதில் ஒக்க இருந்திட 
ஒத்தஉடலும் உயிரும் இருந்ததே.
                                                                                      - திருமந்திரம் 653

கண்களுக்கான வாயு கூர்மன். தனஞ்சயன், கூர்மன் வாயுக்களே நம் தூக்கம், மற்றும் விழிப்பின் கிரியா ஊக்கிகள். தனஞ்சயன் மற்ற ஒன்பது வாயுக்களோடு ஒத்திராமல் இருக்குமானால், பலவகை நோய்கள் உடலில் உண்டாகும்.

கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன் 
கண்ணில் இவ்வாணிகள்  காசம் அவனல்லன் 
கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் 
கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.
                                                                                         - திருமந்திரம் 655

உன் கண்கள் ஒளி வீசுகிறதென்றால், அதற்கு தனஞ்சயனும், கூர்மனும் இணைந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று பொருள்.



 


 

No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...