பிள்ளையார் பிள்ளை
அரசனை அல்ல.. அரசினை.. அரச மரத்தை!
புருஷனை அல்ல.. புரசினை..
புரசு என்பதும் அரச மரத்தை போன்ற ஒரு பிள்ளை வரம் தரும் மரமே!
'அரச மரத்தை சுற்றி வந்து, அடி வயிற்றை தொட்டு பாத்தாளாம்'
அரச மரத்தை சுற்றி வந்தால் பிள்ளை வரம் கிடைக்குமா?
என்னவொரு முட்டாள்தனம்.. பத்தாம் பசலித்தனம்.. பகுத்தறிவற்ற காட்டுமிராண்டித்தனம்.
பேசாமல் செயற்கை கரு ஊட்டும் மருத்துவரிடம் சென்று, சொத்தை எழுதி வைக்க வேண்டியதுதானே புத்திசாலித்தனம். பிள்ளை வரம் கிடைக்காமலா போகும்.
பதினெண் சித்தர் காலத்தில், இந்த நவீன மருத்துவ முறை இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இயற்கையை சார்ந்து வாழ சொல்லி விட்டு போய் விட்டார்கள்.
இனி, அரச மரத்தின் சிறப்பை பார்க்கலாம், வாங்க.
காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை தானுண்டு, அதிக அளவு பிராண வாயுவினை வெளிவிடும் தன்மை அரசுவிற்கு உண்டு.
பிராண வாயுவுடன், வியானன் வாயுவும் அதிகளவு இருந்திருக்க வேண்டும். அதுவும், காலை நேரங்களில் அதிகமான அளவு இருக்கும்.
நாம் சுவாசிக்கும் காற்றில் பத்து வகையான வாயுக்களின் தன்மை இருக்கிறது என்று சித்தர்கள் வழி காட்டி சென்றுள்ளார்கள்.
வியானன் வாயு தனஞ்சய வாயுவுடன் சேர்ந்து, பிள்ளைப்பேறு சம்பந்தமாக அனைத்து செயல்களையும் நம் உடலில் செய்கிறது, ஆரம்பம் முதல். அந்த வாயுவின் தன்மை பெற்றோர் உடலிலும் சார்ந்திருக்கும்.
காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன்
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை
காலின்கண் வந்த கலப்பு அறியாரே.
- திருமந்திரம் 1954
காலத்தை வென்றவன், உடலில் விந்துவை விதைத்திருப்பவன். வீணடித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிகின்றான். பெண்ணுடன் சேரும் காலங்களில், உடல்களுக்குள் சேரும் காற்றின் கலப்பினை யாரும் அறிவதில்லை. இந்தக் காற்றை, வீங்கற்காற்று என்று சொல்வார்கள்.
தனஞ்சயனும், வியானனும் சமமாக ஒத்து இயங்கினால் இன்பம்.
அரசமரத்துப் பிள்ளையாரும் பிள்ளை அருளுவார்.
No comments:
Post a Comment