தேவாமிர்தம்
சாட்சி சொன்ன
சந்திரனே
நீ போய் சேதி
சொல்ல மாட்டாயோ?
உடலின் ஒவ்வொரு அசைவிற்கும், உணர்வுக்கும்
சாட்சியாக நிற்பது சந்திரன்.
விழித்திருக்கும் நேரமும், உறங்கும் நேரமும்
உயிர்ப்பித்திருப்பது சந்திரன்.
சந்திரன் என்பது புருவமத்தியில் உள்ள சுழுமுனை, அதாவது பினியல் சுரப்பி.
மனிதனின் அத்தனை அபிலாசைகளின் பிறப்பிடம். இங்கேதான் ஞானத்தேனும், தேவாமிர்தமாக சுரக்கிறது.
ஓடிச் சென்றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியின் உள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடி உள்நின்ற பகைவரைக் கட்டுமே.
- திருமந்திரம் 661
மூலாதாரத்திலிருந்து பிராணனை மூச்சுப்பயிற்சி மூலம் சுழுமுனைக்கு கொண்டுசெல்ல வல்லவர்கள், பேரொளியை கண்டு, நாதத்தை கேட்டு, தேவாமிர்தமான ஞானத்தேனையும் உண்பார்கள். இம்முயற்சிக்கு பகையாக அங்கே உருவாகும் பற்றினையும் அகற்றி விடுவார்கள்.
ஆக்கினையில், சதாசிவத்துடன் நிலவொளியில் உறையும் மனோன்மணித்தாய், அனைத்து உணர்வு நிலைக்கும் ஆதாரமாக நிற்கிறாள்.
உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல் ஐயாஎன்று உபாயம் செய்தாளே.
- திருமந்திரம் 1107
அட்டாங்க யோகத்தில், சமாதி நிலையில் உறங்காமல் உறங்கி இருக்கும்போது, கை வளையல் ஒலியுடன், ஞான அமிர்தத்தை வாயில் ஊறச்செய்து, உறங்கும் நிலையை, உணர்வு நிலையாக மனோன்மணித்தாய் மாற்றி நின்றாள்.
அட்டாங்க யோகப்பயிற்சியில் தேர்ந்தவர்களின் சுழுமுனையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் ஹார்மோன் உள்நாக்கு வழியாக தேன் போன்ற சுவையுடன் இறங்கும். இந்நிலை எய்தப்பெற்றவர்கள் அடையும் பேரின்பம், இருவர் கூடி அடையும் இன்பத்தை விட பல கோடி மடங்கு அதிகமாகும்.
No comments:
Post a Comment