Wednesday, November 11, 2020

வேதியல் வினை

வேதியல் வினை  

உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே 
விண்ணை நான் பார்க்கும்போது 
என்னை நீ பார்க்கின்றாயே 




பார்க்கும்போது என்ன நிகழ்கிறது?

வேதியல் வினை.

கண்களில் ஒளி பட்டவுடன், வேதிவினை தூதுவர்கள் மூலம் மூளைக்கு செய்தி 
செல்கிறது. மற்ற வேலைகளை பிட்யூட்டரி மற்றும் பினியல் சுரப்பிகள் நடத்தி காட்டுகிறது.

இங்கே,
புன்னகை புரிந்தால் என்ன பூமுகம் சிவந்தா போகும்..

சிவந்துதான் போகிறது.

நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும், பார்வைதான் சாட்சியாக விளங்குகிறது.

காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடும் நீரில் குதித்து , வீர விளையாட்டு புரியும் ஒருவன், நீரில் குதித்தவுடன் எப்படியும் கரை ஏறிவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் நீரில் குதிக்கிறான்.

நீரைப்பார்த்து, அதன் வேகத்தை கணித்து, குதிக்க வேண்டிய இடமும், கரை ஏற  வேண்டிய இடமும் மனதுக்குள் தீர்மானித்து வெள்ளத்தில் பாய்கிறான். 

குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

கண் பார்க்க, வேதிவினை செய்தி ஒளி நரம்புகள் வழியாக மூளையை சென்றடைந்து, அங்கிருந்து பெரும் கட்டளைக்கேற்ப செயல்படுகிறான்.

நாளமில்லா சுரப்பியாகிய பினியல் சுரப்பியில் இருந்து சுரக்கும் ஹார்மோன் நம்முடலை அனைத்து வகைகளிலும் சீராக வைத்திருக்கிறது. 

புற உலகினை கண்டு, உடலினை சீராக்கும் இதே பினியல் சுரப்பிதான், சுழுமுனை, அகஉலகின் அடித்தளமாக உள்ளது.

இதனை மூன்றாம் கண் என்று ஆன்மிகம் சொல்லுகிறது. ஞான சித்தி பெற்றவர்கள் உறங்கும் இடமும் இதுவே.

தூங்கிக்  கண்டார் சிவலோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார் சிவயோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார் சிவபோகமும் தம்உள்ளே
தூங்கிக்  கண்டார்நிலை சொல்வது எவ்வாறே.
                                                                                              - திருமந்திரம் 129

வாசி யோகம் அறிந்த சித்தர்கள் எப்பொழுதும் தியான உறக்கநிலையில் இருப்பார்கள்.     சிவலோகம், சிவயோகம் மற்றும் சிவபோகம் இவற்றை இவ்வுறக்க நிலையிலும்  சுழு முனையில் உள்ள மூன்றாம் கண்ணால்   கண்டு கொண்டிருப்பார்கள்.





No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...