சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்
உப்பில்லாத பத்தியக்காரன்
ஊறுகாயைப் பாத்தானாம்
உதட்டாலே சப்புக் கொட்டி
ஓந்தி போல நின்னானாம்
விழித்திருக்கும் நேரம் எல்லாம் நினைத்திருக்கும் பெண்ணினம் தவிர ஆன்மீகத்திற்கு பெரிய தடை ஒன்றும் இல்லை, ஆண்களுக்கு.
பெண்ணாசையை விட்டொழி! அதுவே உனது ஆன்மீக தேடலின் முதல் வெற்றி.
திருமந்திரம்-1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
உன்மீது இச்சை கொண்டு அல்லது நீ பார்க்கின்ற பெண்ணைப் பார்க்காமல் விலகிப்போய்விடு. மூலாதாரத்தில் தியானித்து, ஆர்ப்பரித்து உள்ளத்தில் எழும் எண்ணங்களை எரித்து, கண்களால் உண்டான ஆசையை அழித்து விடு. இவ்வாறு செயல் படுத்தும் சிவயோகிகளைப்போல் செய்தால் நீயும் சிவயோகி ஆவாய்.
பட்டினத்தாரைப்பாருங்க.. போட்டுத் தாக்குகிறார் கச்சித் திரு அகவலில்..
திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்.. 27
வரும் ஏழ் பிறவியும் மானுடத் துதித்து
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகாது அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்.. 27
இப்படி ஆரம்பித்து, 40-வது பாடல்வரை ஒரே திட்டுதான்.
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!.. 40
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!.. 40
சிவன், மலைமகளின் கோமான், மணாளன்.
அவளும் பெண்தானே!
நம்ம பாம்பாட்டி சித்தர் என்ன சொல்றார் பாருங்க.
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதரழகை
விரும்பியே மேல்விழுந்து மேவும் மாந்தர்
ஒயில்கண்டே இலவுகாத் தோடுங் கிளிபோல்
உடல்போனால் ஓடுவாரென் றாடாய் பாம்பே.. 50
இப்படி ஆரம்பித்து, பத்து பாடல்களில் பெண்களை ஏன் விரும்பக்கூடாது என்று பின்னிப் பெடல் எடுக்கிறார்.
மலக்குடல் மீதினிலே மஞ்சள் பூச்சென்றும்
மல்கும்புழுக் கூட்டின்மேல் வண்ணத் தோலென்றும்
சலக்குழிக் குள்ளேநாற்றஞ் சார்ந்த சேறென்றும்
தானறிந்து தள்ளினோமென் றாடாய் பாம்பே.. 59
மேல் குறிப்பிட்ட பாடல்களை எழுதியவர்கள் எல்லாம் ஆண்கள். அவர்களை மிகவும் பாதித்த ஒன்றை, அவர்களது ஆன்மீக தேடலில் தடையாக வந்ததால் எழுதி சென்றுவிட்டார்கள்.
உண்மையில், நடந்தது என்ன?
அவர்களால் வெல்ல முடியாத சக்தியாக நின்றது பெண்மை. ஆணுக்கு சரி நிகரான இணை சக்தி.
அணுவினுள் உள்ள புரோட்டான் எனும் நேர் விசைக்கு எதிர் விசையாக நிற்கும் எலக்ட்ரான் போன்றது.
மூலாதாரத்தில், ஓம் எனும் நாதத்தில், மகார நாதமாக விளங்குவது.
மானிட நிலையில், சக்தியை உணர்ந்து ஏற்று,. அறிந்து நீரோட்டம் போல் ஆணும் பெண்ணும் இருந்தால் இவர்கள் இப்படி பாடி செல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
இவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு, மூன்று காரணங்கள் கணக்கிடலாம்:
1. கடின பயிற்சியினால், விந்துற்பனம் மூலம் உடலில் செய்து கொண்ட மாற்றங்கள்.
2. உடலில் ஐம்புலன்களை ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்காதது.
3. பெண்களை கவர முடியாத உடல் அல்லது போகத்திற்கு பெண்கள் கிடைக்காத சூழ்நிலை.
திருமந்திரம்-180
விரும்புவர் முன்என்னை மெல்லியல் மாதர்
கரும்பு தகர்த்துக் கடைக்கொண்ட நீர்போல்
அரும்பொத்த மென்முலை ஆயிழை யார்க்குக்
கரும்பொத்துக் காஞ்சிரம் காயும் ஒத்தேனே.
அழகிய இளம் கன்னியருக்கு நான், அடிக்கரும்பில் பிழிந்தெடுத்த சாறுபோல் இனித்த காலங்கள் உண்டு. என் இளமை நீங்கியபின், பெண்கள் என்னை மிகுந்த கசப்பு சுவை உடைய எட்டிக்காயைப் போல் ஒதுக்கித்தள்ளுகிறார்கள்.
இளமை நீங்கிய நிலையில் பெண்களைத் தேடினால் எப்படி அது நடக்கும்?
காஞ்சிரம் காய் இனிக்கவும், வற்றல் மரம் தளிர்க்கவும் உபாயம் சொல்கிறார், பரஸ்பரம் ஆணும் பெண்ணும் அன்பினை பரிமாறுவதன் வழியாக.
திருமந்திரம்-283
புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லார்க்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.
உறவின் நிலையில் பெண்ணின் மேல் ஏற்படும் அன்பு உணர்வை அப்படியே தன்னுள் தக்க வைக்க கொள்ள முடிபவர்களுக்கு அதுவே இம்மை தரும் சிற்றின்பமும், மறுமை தரும் பேரின்பமும்.
சிற்றின்பத்திலிருந்து பேரின்பத்திற்கு அழைத்து செல்லும் கருவியாக இருக்கும் பெண்ணே ஆன்மீகத்தில் நோயும், மருந்தும்.
ஊர்வசிகள் நடனமாடினால், விஷ்வாமித்திரர்கள் எல்லாம் 'க்ளீன் பௌல்ட்'.
உப்பில்லாத பத்தியக்காரன்
ஊறுகாயைப் பாத்தானாம்
உதட்டாலே சப்புக் கொட்டி
ஓந்தி போல நின்னானாம்
ஊறுகாயைப் பாத்தானாம்
உதட்டாலே சப்புக் கொட்டி
ஓந்தி போல நின்னானாம்
பெண் கிடைக்கவில்லை என்றால்,
பந்தலில் தொங்கிக்கொண்டிருக்கும் திராட்சை பழத்தை கவ்வி பிடிக்க, பல முறை குதித்து முயன்று, தோல்வியில் முடிந்த நரி, சொல்லிக்கொண்டே ஓடியது -
'சீ.. சீ.. இந்த பழம் புளிக்கும்'.
*** *** ***
No comments:
Post a Comment