Wednesday, April 24, 2019

சக்தி

சக்தி 

எங்கெங்குக்
காணினும்
சக்தியடா

பொருள்:

முதல் சிற்றறையில் அன்னை மரபு வழி, தந்தை மரபு வழி, உயிரின் மரபு வழி  என மூன்றும் இணைய  தேவையான பொருள் என்ன?

பற்று, ஆசை அல்லது காமம். இதுவே நம் உடல் மற்றும் உயிரின்  சக்தியாக மாறி நம் வாழ்வை எடுத்து செல்கிறது.

உடலையும் உயிரையும் இணைத்து  உருவாகிய பிரணவ  சக்தி, புலன்கள் மூலமாக புற உலகை அறிகிறது.

நாம் காணும் காட்சி, நம்மில் உள்ள சக்தியே! அன்னை பராசக்தியே!!

நம் உடலில் பிரணவ சக்தி குறைய குறைய, நம் பார்வையும் மாறும், காட்சிகளும் மாறும்.

காலம் மாறினால்
காட்சிகள் மாறுமே!

https://www.youtube.com/watch?v=jT_ckDSbf9Q














Sunday, April 21, 2019

மனநோய்

மனநோய்

புல்லாங்குழலில் 
காற்று நுழைந்தால் 
புதுப் புது இசையாகும் 

பொருள்:

'பக்தி நிலை' என்பது ஒருவகை மனநோய் என்று மனநோய் நீக்கும்  வல்லுநர்களின்  கருத்தை படித்தபோது  கோபமும், ஆற்றாமையும் ஏற்பட்டது. தீவிரமாக அதை சிந்தித்த பொது ஆயாசமாக இருந்தது, உண்மையோ என்று. நம் முன்னோர்கள், மனித இன மேன்மைக்காக  விட்டு சென்ற பொக்கிஷங்கள்  இதற்குள் அடங்கினால், நாம் எல்லோருமே மனநோயாளிகளோ என்ற அச்சமும் தொற்றிக்கொண்டது.

'ஒன்றி'ன் மீது ஏற்படும் ஈர்ப்பு என்பது, புறச்சூழல்களால் புலன் வழி செய்திகளை  மனம் அறிந்து,  அந்த 'ஒன்றி'ன் மீது தொடரும் எண்ணங்களால் ஏற்படுகிறது.

இந்த ஈர்ப்பு என்பது புலன்களும், மனமும் பின்னும் மாய வலை. எண்ணங்களே இதன் தேவ தூதர்கள். இதன் அடிப்படை, ஜீவ சக்தி எனப்படும் இறை நிலை.

இனி என் வாழ்க்கையில் உணர்ந்ததை, நடந்ததை நடந்தபடி  சொல்கிறேன்:

பத்து வயதில், வெள்ளியங்கிரி மலை ஏறும்பொழுது எல்லாம் விளையாட்டாக இருந்தது. ஏழாவது மலை ஏற ஆரம்பிக்கும்போது விடிகாலை, சித்ரா  பௌர்ணமி நிலா விடை பெற்று விட்டாள். கருக்கல் என்னும் காரிருளில், செங்குத்தான மலையில்  தவழ்ந்து ஏறியது இன்னும் நினைவில் இருக்கிறது. மனமென்னும் புல்லாங்குழலில் காற்று நுழைந்தது அன்று தெரியவில்லை.

வாழ்க்கை, அடுத்த நாற்பது வருடங்களை சுழன்றடித்த போது, ஆணவம் தலைக்கேறி இருந்தது. முறுக்கோடு மலை ஏறிய நான், இறங்கும்போது வாழ்வின் இறுதி நாள் இதுவோ என்றுணரும் வண்ணம் கொடும் வெயிலில், சுடும் வெயிலில் விழுந்த புழுவாய் துடித்து, தப்பித்து மலை இறங்கினேன்.

விட்டதா புல்லாங்குழலில் நுழைந்த காற்று. அடுத்த ஐந்து வருடத்தில், தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கோரிய வண்ணம் மீண்டும் மலைப்பயணம். மன 'அமைதி' அல்லது 'சாந்தி' என்பதை மலை உச்சியில், சூர்யோதயத்தில், அவன் காலடியில் உணர்ந்து கொண்டேன்.

உட்புகுந்த காற்று, புல்லாங்குழலில் இருந்து வெளியில்  வந்தால்தானே இசை.  கடந்து விட்ட இன்னொரு ஐந்து வருடங்களில் எவ்வளவோ மாற்றங்கள், எல்லாம் வாழ்க்கைப் பாடங்கள். 

இந்த முறை, முழு வைராக்கியம். முப்பத்து மூன்று வயதிற்குள், ஏழு குழந்தைகளை பெற்று, கணவன் விலகி, எந்த பொருளாதார பின்புலம் இல்லாத பெண்ணால், குழந்தைகளை நன்மக்களாக்க முடியுமென்றால், இது ஒரு பொருட்டே அல்ல என்ற வைராக்கியம். அவளின் ஓராண்டு நினைவு தினத்தில் அவளுக்கு தரும் ஆன்ம மரியாதையாக செய்கிறேன் என்ற அர்ப்பணிப்புடன், தனி ஒருவனாக, மலை ஏறினேன்.

காட்டி விட்டான் நெற்றிக்கண்களில் 'ஒளி', அதிகாலை 3 15 மணிக்கு, அவன் சன்னிதானத்தில். புல்லாங்குழலில் நுழைந்த காற்று இசையாக வெளிவருவது இயல்புதானே.

இனி, நானும் ஒரு 'மனநோயாளி'யாய் இருந்துவிட்டு போகிறேன்.











Wednesday, April 17, 2019

17 ஏப்ரல் 2019

17 ஏப்ரல் 2019

ஒப்புவமையற்றோன் தாள் சேர்ந்து
ஒப்புவமையேற்றாய் அம்மா!

விளக்கம்:

பிறந்த நொடியில், தாய் மடி தேடிடும் உயிர்கள் இறைமையின் உந்துதலால்.
இறை இல்லையென்று மறுப்போரும், மறுக்க முடியுமா இந்த உயிரின் தேடுதலை.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
                                                                             -திருக்குறள் 

சக்தியை அம்மாவாக்கி, பெண்மைக்கே பெரும்பொருள் தந்தான் அந்த பரம்பொருள்.

அம்மாவின் மறைவு ஓராண்டு நிறைவு நினைவாக..

தனது முப்பத்து மூன்றாவது வயதில், ஏழு பிள்ளைகளுக்கு தாயாகி, கைப்பிடித்தவன் விலகி தனி மரமாகி, எந்த பொருளாதார பின்புலமில்லாமல் இறை ஏங்கி.. வாழ்ந்து எங்களை காத்து வளர்த்தவள்  எங்கள் அம்மா. 

இன்று, உன் குழந்தைகள் உலகம் முழுக்க பயணிக்கிறார்கள் அன்று நீ பசித்து, எங்களுக்கு  தந்த நீராகாரத்தால். 

கண்ணீரால் உன்னை ஆராதிக்கிறேன் அம்மா..

எப்பிறப்பும் உன் மடியில் 
தப்பாமல் நான் பிறக்க 
அருள் புரிவாய்  அம்மா!

Tuesday, April 16, 2019

புலனறிவு

புலனறிவு 

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
புலனறிவை வென்றுவிட்டால்
உயிரறிய தடையுமென்ன

பொருள்:

உணர் மனம் புலன்கள் தரும் உணர்வுகளை, புலனறிவு செய்திகளாக்கி, அடி மனதில் சேமிக்கின்றது. நாளடைவில் அதுவே 'நான்' என்ற அடையாளத்தோடு  வாழ்க்கையை அனுபவிக்கிறது. ஆழ் மனம் இதை அறிந்தாலும் அக்கறை கொள்வதில்லை.

இந்த புலனறிவு என்ற மாயையை விலக்கி பார்க்கும் தெளிவை  நாம் அடைந்து விட்டால், நம் ஆழ் மனதின் ஜீவ ஒளி, நம்முடைய பிறவியின்  கடமையை அறிய செய்து விடும்.

பிறவிக்கடனை செய்து முடிப்போம்..

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
                                                  - திருக்குறள் 

அப்புறமென்ன..  நீந்திர வேண்டியதுதான்.

நம்மை இந்த உலகிற்கு என்ன காரணத்திற்காக இறைவன் படைத்திருக்கிறானோ, அந்த காரணமே கடமையாகிறது. அதுவே பிறவிக்கடன் என்று அறியப்படுகிறது.

Sunday, April 14, 2019

மனம்

மனம் 

இரண்டு மனம் வேண்டும்
உறவில்  வாழவொன்று
உயிரில்  வாழவொன்று


பொருள்:

ஐம்புலன்கள் தொடர்ந்து வெளிப்புற நடப்புகளை
உயிருணர்விற்கு அனுப்பிக்கொண்டே உள்ளது.
மனம் இந்த செய்திகளால் ஆட்கொள்ளப்பட்டு,
மயங்கி, அதற்கேற்ற செயல்களை ஓய்வின்றி
அரங்கேற்றிக்கொண்டே  உள்ளது. சமயங்களில்,
கிடைக்கும் செய்திகளை தவறாக அறிந்து, இன்னும்
மீளாத்துயரமாக வாழ்வில்  உறவை  வடிவமைத்துக்கொள்கிறது.

ஐம்புலன்களின் அனுபவமே வாழ்க்கை என்ற மயக்கத்தில்
வாழ்வதால், நாம் காணும் யாவும் மாயை என்று கூறினர்,
உயிர் வழி அறிந்தோர்.

உயிரில் இருந்து அறியக்கூடிய செய்திகளை மனம்
உணரும் வாய்ப்பே இல்லாமல், இடைவெளி இன்றி, உறக்கத்திலும்  நடந்துகொண்டே உள்ளது.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு 
எழுமையும் ஏமாப் புடைத்து.
                                            -திருக்குறள் 

பல பிறவிகளில் நாம் பெற்ற அறிவு அறியப்படாமலே
வீணாகிறது. உயிருணர்வின் அனுபவத்தை மனம்  பெற்றால், நம் உண்மை அறிவு வெளிப்படும். நுண்ணிய நூல் பல கற்பதின் பொருள் விளங்கும், மானிட வாழ்வும் சிறக்கும்.


ஹேய் விகாரியே
உன் குட்டி பேபி நான்..
ப்ளெஷ்  மி.. ப்ளெஷ்  மி..

பொருள்:

'ஒய் திஸ் கொலவெறி' தமிழ்ப்பாடலை தண்டி வெற்றி பெற்ற 'ஹேய் கோலி சோடாவே' எழுதிய தமிழ் புலவன் எழுதிய தமிழ் புத்தாண்டு வாழ்த்து.

இன்றைய நிலையில், தமிழ் மக்களிடம் விரைவாக சென்றடையும் வழி இது. இதுதான் தமிழ் என்று திரைப்படப்  பாடல்கள் உலகிற்கு அறியப்படுத்துவதை கண்டித்தே இந்தப்பதிவு.



சரியான புரிதல். அந்த NO MIND-ஐ  அறிந்து கொள்ளவே, நம் முன்னோர்கள் அரிய பொக்கிஷமாக அறிவு நூல்களை கொடுத்து சென்றுள்ளார்கள். அதை இந்த பிறவியில் பெற்ற அனுபவ அறிவை மட்டும் கொண்டு புரிந்து நடப்பது  கடினம்; பல பிறவிகளில் நாம் பெற்ற அறிவின் துணையும் வேண்டும் என்பதே என் கருத்து.




Saturday, April 13, 2019

விதி

விதி 

விதி 
விக்ரமாதித்தன் 
சுமக்கும் 
வேதாளம் 

பொருள்: 
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதால், 'தேரா மன்னா!  செப்புவது உடையேன்' என்று சூழுரைத்த மங்கை கண்ணகி, கோவலன், நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி என காவு வாங்கியது.

ஊழ்வினை எனப்படும் விதி, உயிர் ஒரே ஒரு சிற்றறையாக, கருவறையில் [Atomic Nucleus] உருவெடுக்கும்போதே, தாய், தந்தை மரபணுக்களோடு இணைந்து குடிகொள்கிறது.

விதியை மதியால் வென்று திரும்பி பார்த்தால், 'இதுதான் உன்விதி' - என்ற  விக்கிரமாதித்தனின் சரியான பதிலால் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறி கெக்கலிக்கும்.

தேரா மன்னா! செப்புவது உடையேன்;
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப,
புள் உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும்,
வாயில் கடை மணி நடு நா நடுங்க,
ஆவின் கடை மணி உகு நீர் நெஞ்சு சுட, தான் தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும் பெயர்ப் புகார் என் பதியே; அவ் ஊர்,
ஏசாச் சிறப்பின், இசை விளங்கு பெருங்கொடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி,
வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப,
சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து, இங்கு
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி;
கண்ணகி என்பது என் பெயரே’ என-
                                      - சிலப்பதிகாரத்தில் கண்ணகி 

நாம்  வாழும் வாழ்க்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.  அது என்னவென்று தெரியாததுதான் வாழ்க்கையின்  சுவாரஷ்யமே! எல்லாம் விதி..

Thursday, April 11, 2019

தாய் மொழி

தாய் மொழி 

அறிந்திருந்ததால்
அவனுக்கும்
தாய் மொழி
தமிழ்

பொருள்:
அமிழ்தம் மூன்று நிலைகளில், அறிகிறோம்:

1.  பாற்கடலில் திரண்டது
2.  வானின்று பொழிவது
3.  தமிழென்று வாழ்வது

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
                                                           -பாரதி தாசன் 

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...