Tuesday, October 20, 2026

பயணமே மாயை

 பயணமே மாயை

உன்னைப் பற்றிய உண்மைகளை அறிய நினைத்தால் உன்னை ஆளும் தொண்ணூற்றாறு காரணிகளை நீ அறிய வேண்டும்.

அதில் முப்பத்தாறு காரணிகள், பிரதம காரணிகள், உன் உயிரைப்பற்றியது. அறுபது காரணிகள் சார்பு காரணிகள்; பிரதம காரணிகளைப்பற்றி வருவது. இதன் வழியாக உன் குணம் என்னவென்று நீயே அறிந்து கொள்ளலாம்.

பிரதம காரணிகளில் இருபத்து நான்கு, குறிப்பாக மாயையுடனான உயிரின் தொடர்பை விளக்குவது. இதை ஆன்ம தத்துவங்கள் என்பார்கள்.

அதில் நான்கு காரணிகள், அந்தக்கரணங்கள்,  உயிரின் கருவிகளாக உள்ளத்தை சொல்வது. மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி என்பதே அந்த நான்கு காரணிகள்.

அகத்தியரின் சௌமிய சாகரம் 32

கேளப்பா புலத்தியமா ரிஷியேஐயா
கிருபையுள்ள கரணம் அந்தக்கரணந் தன்னை
கோளடா  இல்லாத மனம் தானொன்று
கூர்மையுடன் நின்றிலங்கும் புத்தி ஒன்று
தேரடா ஆங்காரம் ஆனதொன்று
சிவ சிவா சுத்த மென்ற சித்தமொன்று
ஆளடா கரணமென்ற கரணம் நான்கும்
அப்பனே அறிந்துகொண்டு வாற்றுமம் பாரே.
 பயணமே மாயை

மின்சார இரயிலுதுவா?  மெட்ரோ இரயிலுதுவா? 
மனிதன் போகும்  காலத்தின் இரயிலுதுவே!    

ஆயிரமாயிரம் வருவார்கள் போவார்கள் 
நிற்குமிடம் ஏறுவார்கள் இறங்குவார்கள்
தொடர்ந்து பயணிப்பார் யாருமில்லை  

போராடி இடம் பிடிப்பார்
என்னைப்போல் யார் என்பார் 
ஏறுமிடம் அறிவார் சேருமிடம் அறியார் 
பயணமே மாயையென்று அறியாமல்  
ஆணவத்தில் ஆடிடுவார் 

[உயிருக்கு உருவம் கிடையாது - உண்மையில்  
உயிருக்கு அறிவும் கிடையாது] 
உயிருக்கு உடலைத் தந்தவனேதான்  
மனதுக்கு அறிவும் தந்தான் - இறைவன் 
மனதுக்கு அறிவும் தந்தான்

உடலே  அறிவென மயக்கம் கொண்டது - அங்கே
அறிவுக்கு அஹங்காரம் தடையாய் வந்தது 
தடையைக் கடந்தால் ஆனந்தம் - அதுவே 
தன்னிகரில்லா இன்பப் பேரானந்தம்
தன்னிகரில்லா சச்சிதானந்தம்  

[மின்சார இரயிலுதுவா  மெட்ரோ இரயிலுதுவா 
மனிதன் போகும்  காலத்தின் இரயிலுதுவே    

ஆயிரமாயிரம் வருவார்கள் போவார்கள் 
நிற்குமிடம் ஏறுவார்கள் இறங்குவார்கள்
தொடர்ந்து பயணிப்பார் யாருமில்லை]    


*** *** *** *** ***
                                        

96 தத்துவங்கள் 

36 பிரதம தத்துவங்கள் 

60 சார்பு தத்துவங்கள் 

24 ஆன்ம தத்துவங்கள்

4 தத்துவங்கள் அந்தக்கரணங்கள்  

வீரா.. 201026

No comments:

Post a Comment

பயணமே மாயை

 பயணமே மாயை உன்னைப் பற்றிய உண்மைகளை அறிய நினைத்தால் உன்னை ஆளும் தொண்ணூற்றாறு காரணிகளை நீ அறிய வேண்டும். அதில் முப்பத்தாறு காரணிகள், பிரதம கா...