Saturday, October 17, 2026

உனக்குள் ஒரு பேரொளி

உனக்குள் ஒரு பேரொளி 


மேகங்கள் ஓடி வரும் 
மின்னல் உண்டு 
தேகங்கள் ஆடி வரும் 
தெய்வம் உண்டு

உப்பிருக்கு கடலிலே 
இனிப்பிருக்கு தேனிலே
தெளிவிருக்கும்  மனதிலே 
பிரித்துப் பார்க்கும்  எளிதிலே 

இல்லையென்று சொல்லலாம் 
சுவைத்துப் பார்த்தால் தெளியலாம் 
உருவமில்லா பேரொளியை 
உனக்குள்  தவத்தால் அறியலாம்

உன்னை  நான் பார்க்கும்போது 
ஒளியைத்தான் பார்க்கிறேன் 
ஒளியில்லா உலகமெனில் 
ஒன்றுமில்லா அவனி அது    

மேகங்கள் ஓடி வரும் 
மின்னல் உண்டு 
தேகங்கள் ஆடி வரும் 
தெய்வம் உண்டு


திருமந்திரம் 1797

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

மனம் தன்னை உணர்ந்த நாளில் இருந்தே இருப்பவன் இறைவன். அவன் புருவ நெற்றியில் இருக்கிறான் என்று தெரியும். ஆனால், அவனைப்  பார்க்க முடியாத  மயக்க நிலையில் இருக்கிறார்கள். உடலுக்குள்ளே பேரொளியாய் உறைபவன் இறைவன். உயிராய் இறைவன் உனக்குள் இருக்கிறான் என்பதை நீ அறியாமல் யாரால் அறிய முடியும்?

தவத்தின் வலிமையால் இறைவனை, உனக்குள்ளே பேரொளியாய்க் காணலாம்.

*** *** *** *** *** 

வீரா.. 171026

No comments:

Post a Comment

உனக்குள் ஒரு பேரொளி

உனக்குள் ஒரு பேரொளி  மேகங்கள் ஓடி வரும்  மின்னல் உண்டு  தேகங்கள் ஆடி வரும்  தெய்வம் உண்டு உப்பிருக்கு கடலிலே  இனிப்பிருக்கு தேனிலே தெளிவிருக...