Thursday, October 22, 2026

நிலவோடு ஓர் பயணம்

நிலவோடு ஓர் பயணம் 


நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா
காலமெல்லாம் காத்திருப்பது  காதலாகுமா 
பருவத்தில் கனியாதது நியதியாகுமா 

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா

படிப்பதனால் பலகலைகள் வந்து சேரும் 
அறிந்ததனால் கைகூடி வித்தைகளாகும்  
கைகோர்த்து நடந்து சென்று  சொர்கம் காண்போம்  
இரவு பகல் நேரமெல்லாம் இன்பம் காண்போம்  

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா

ஆசைகளை அள்ளி தின்னும் பருவம் நமக்கு
அத்தனையும் மாயையாகும் காலம் மறந்தால்  
உடலின்பம் மாயையென்று சொல்பவரெல்லாம் 
உயிரை ஏய்த்து பிறவிச்சுழலில் தவிப்பவராவார்    

நீரோடும் பாதையிலே போகலாம் வா 
நிலவோடும் மலரோடும் பாடலாம் வா
காலமெல்லாம் காத்திருப்பது  காதலாகுமா 
பருவத்தில் கனியாதது நியதியாகுமா 

வித்தியா தத்துவம் 

முப்பத்தாறு தத்துவங்கள் பிரதம தத்துவங்கள் என்று வகைப்படுத்தியது  மூன்று பிரிவுகளாக உள்ளன.

ஆன்ம தத்துவங்கள் - 24
வித்தியா தத்துவங்கள் - 7
சிவ தத்துவங்கள் - 5

இன்றைக்கு நாம் ஏழு வித்தியா தத்துவங்களைப் பார்ப்போம்.

காலம்                                                                                                                                             ஆன்ம நுகர்ச்சியின் எல்லை, இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்  

நியதி                                                                                                                              நுகர்ச்சியின் எல்லைக்கு ஏற்ப நுகர்வன நுகர்தல், மற்றவை மறுத்தல் 

கலை                                                                                                                             அறியாமையில் உள்ள ஆன்மாவைக்கலைத்து அறிவு, கிரியா சக்தி  ஊட்டுதல் 

வித்தை                                                                                                                        கலைகளினால் பெற்ற அறிவை ஞான சக்தியாக மாற்றுதல் 

அராகம்                                                                                                                                         ஞான சக்தியை புறந்தள்ளி, உலக நுகர்ச்சிகளில் ஈடுபடுத்திக்கொள்ளல் 

மாயை                                                                                                                                            மேலே சொன்ன ஐந்து காரணிகளும் மாயையாக ஆன்மா கொள்ளுதல் 

புருடன்                                                                                                                                              ஆறு காரணிகளையும்  அனைத்தையும் அனுபவிக்கும் மனிதன்   


உண்மை விளக்கம் - 18

வித்தியா தத்துவம் 

காலம் நியதி கருதும் கலைவித்தை 
ஏலஅரா கம்புருட னேமாயை - மாலறவேழ் 
சொன்னோம் அடைவாகச் சொன்னஇவை தம்முண்மை
உன்னி உரைக்கும்நாம் உற்று. 


வீரா.. 221026



 

No comments:

Post a Comment

நிலவோடு ஓர் பயணம்

நிலவோடு ஓர் பயணம்  நீரோடும் பாதையிலே போகலாம் வா  நிலவோடும் மலரோடும் பாடலாம் வா காலமெல்லாம் காத்திருப்பது  காதலாகுமா  பருவத்தில் கனியாதது நிய...