Sunday, September 27, 2026

கருங்குழி

கருங்குழி 

எத்தனை மூட்டை அரிசி உனக்குள் 
எவ்வளவு லிட்டர் நீரும் பாலும் 
எண்ணிப்பார் கோழியும் ஆடும் மீனும் 
அத்தனையும் போனதெங்கே? மீண்டும் 
அடுத்த வேளைக்கு போவதெங்கே?

திருமந்திரம் - 211

கற்குழி தூரக் கனகமும் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது
அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின்
அக்குழி தூரும் அழுக்கற்ற வாறே.

தூர்க்க முடியாத குழி ஒன்று உண்டென்றால் அது வயிறுதான். வயிற்றை நிரப்ப உண்ணும் பண்டங்களை தேடுவீர்கள். உணவுப் பண்டங்களை தொடர்ந்து வாங்க தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பீர்கள். இனிமேல் வயிற்றை நிரப்ப வேண்டிய அவசியமில்லை, தேவையான அளவு நிரப்பியாயிற்று என்று சும்மா இருக்க யாராலும் முடியாது.

ஆனால், அக்குழியை நிரப்பும் வழி ஒன்று உண்டு. இறைவனை தொடர்ந்து துதிக்கும்போது, முழு மனதோடு ஆராதிக்கும்போது மும்மலங்கள் என்னும் அழுக்கு நீங்கும். அப்பொழுது, நிரப்பவே முடியாத கற்குழி என்னும் வயிறும் நிரம்பி விடும்.

*** *** *** *** ***



No comments:

Post a Comment

கருங்குழி

கருங்குழி  எத்தனை மூட்டை அரிசி உனக்குள்  எவ்வளவு லிட்டர் நீரும் பாலும்  எண்ணிப்பார் கோழியும் ஆடும் மீனும்  அத்தனையும் போனதெங்கே? மீண்டும்  அ...