Tuesday, September 29, 2026

உணவே பிரம்மம்

உணவே பிரம்மம்


சொல்லப் போனா..
        பசி ஒண்ணுதான் நிரந்தரம் 
        யாருக்கும் இல்ல சுதந்திரம் 
சொல்லி முடிச்சா..
        பொறந்ததுமே தொறக்குதம்மா வாயி 
        இறக்கும்வரை மூட்றதில்ல தாயி  


பசி ஏன் உண்டாகிறது?

பசி என்பது ஒரு நோய். உண்ணும் உணவே பசி நோய்க்கு மருந்து.

பசி இல்லையென்றால் என்னாகும்? உடல் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டி வரும். இயங்கிக்கொண்டே இருக்கும் உடலுக்கு சக்தி தேவை. சக்திக்கான எரிபொருளே உணவு. ஜீரணிக்கப்பட்ட உணவிலிருந்து கிடைக்கும் ஏழு தாதுக்களில் ஒன்றாகும்  இரதம். இரதமே சக்தியாக மாறி உடலை இயங்க வைக்கிறது.

அது சரி,  உண்ணும் உணவிலிருந்து எவ்வாறு இரதம் பிரித்தெடுக்கப்படுகிறது? அறிவியல் சொல்லும், வயிற்றில் சுரக்கும் அமினோ அமிலங்கள் உணவை ஜீரணிக்க வைத்து சத்தினை பிரித்து தருகிறது என்று. அப்படியானால், ஒரு குடுவையில் உணவையும், அமினோ அமிலங்களையும் சேர்த்தால் ஏழு வகை தாதுக்களும் பிரிந்து வரவேண்டும் தானே. அது சாத்தியமா என்றால் சாத்தியம் இல்லை என்ற பதில்தான் வரும்.

உணவை பிரித்து, தாதுக்களை வழங்க இரண்டு காரணிகள் செயல்படுகின்றன. ஒன்று, உடலில் முன்னர் உள்ள சத்து. இரண்டாவது மூலாதாரத்தில் இருந்து எழும் கனல். இந்தக்  கனலே உண்ணும் உணவை ஜீரணிக்க வைத்து, உடலுக்கு தேவையான தாதுக்களாக பிரித்து வழங்குகிறது.

அதாவது, உயிரோடு இருப்பவரால் மட்டுமே உணவை உண்டு ஜீரணிக்க முடியும் என்று பொருள்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு, பசியை உண்டாக்கி, உணவை உடலுக்கு தேவையான ஊட்ட சக்தி மற்றும் உயிர் சக்தியாக மாற்றி தருகிறது.

திருமந்திரம் - 250

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் 
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின் 
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் 
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

உணவை எல்லோருக்கும் வழங்குங்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்று பாரபட்சம் பார்க்க வேண்டாம். உண்ணும்போது விருந்தினர்களோ, வழிப்போக்கர்களோ வருகிறார்களா என்று பார்த்து அவர்களுக்கும் கொடுத்து உண்ணுங்கள். சமைத்த பொருட்களை, சேமித்து வைத்து பின்னர் உண்ணலாம் என்று பாதுகாக்காதீர்கள். உணவின் சுவையால் உந்தப்பட்டு, ஆசையுடன் அவசரமாக உண்ணாதீர்கள். அது தீராத தொல்லையைத் தரும். காகங்களை பார்த்து, அவற்றைப்போல்  உறவினர்களுடன் சேர்ந்து உண்ண பழகுங்கள். பசித்தபின், உண்ணும் நேரத்தை அறிந்து உண்ணுங்கள்.

புறநானூறு 

நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.

*** *** *** *** ***

வீரா..

290926




No comments:

Post a Comment

உணவே பிரம்மம்

உணவே பிரம்மம் சொல்லப் போனா..         பசி ஒண்ணுதான் நிரந்தரம்          யாருக்கும் இல்ல சுதந்திரம்  சொல்லி முடிச்சா..         பொறந்ததுமே தொறக்...