/உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக/
Monday, August 11, 2025
உனக்காக எல்லாம் உனக்காக
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்
'கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்..'
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
கொட்டி கொட்டி மூட்டை.. கொட்டி கொட்டி..
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்
கொட்டி கொட்டி மூட்டை.. கொட்டி கொட்டி..
பேச்சினில் என்றுமே இனிமையில்லை
சொல்லும் வார்த்தையில் உறுதி இல்லை.
பேச்சினில் என்றுமே இனிமையில்லை
சொல்லும் வார்த்தையில் உறுதி இல்லை.
கொண்ட கொள்கை எல்லாம் காற்றினில் பறக்க
பொய்யும் புரட்டுமாய் உரக்கவே பேசிடுவார்.
கோட்டைக்குள் சென்று கொடிதனை நாட்டியென் மக்களுக்காக நிதி திரட்டிடுவேன்..
சபாஷ்..
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
எழுதி தந்ததை உளறிடுவார்
சொல்ல நினைத்ததை மறந்திடுவார்
எழுதி தந்ததை உளறிடுவார்
சொந்த மக்கள் எல்லாம் கால்விரல் பார்க்க
தற்குறியாகவே பேசி முடிப்பார்.
ஆட்டு மந்தை கூட்டம் சேர்த்து ஆடிப்பாடி நடித்திடுவேன்..
சபாஷ்..
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
கொட்டி கொட்டி மூட்டை.. கொட்டி கொட்டி..
சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை
சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை
சட்டையை கிழித்து ஊருக்கெல்லாம் காட்டி
சட்டசபையை விட்டு ஓடிடுவார்.
பணத்துக்காக கலங்க மாட்டேன் காசை கொடுத்து வெற்றி காண்பேன்
சபாஷ்
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
கொட்டி கொட்டி மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே இடம் பிடிப்பார்.
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.'
ஆண்டவன் படைத்தது மனிதன் என்றாலும் மதங்களைப் படைக்கவில்லை.
மதங்களை படைத்தது மனிதன் என்றாலும் மனிதத்தைப் படைக்கவில்லை.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்து நீ வாழ்ந்திருந்தால் மண்ணுலகம் மதித்திடும் - தெளிந்து
நீ வழி நடந்தால் பொன்னுலகம் பிறந்திடும்.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்து நீ வாழ்ந்திருந்தால் மண்ணுலகம் மதித்திடும் - தெளிந்து
நீ வழி நடந்தால் பொன்னுலகம் பிறந்திடும்.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
வானத்தில் கருந்துளைகள் சவாலாகலாம் அதை
எண்ணத்தில் வைத்திருந்தால் அறிவாகுமா?
வானத்தில் கருந்துளைகள் சவாலாகலாம் அதை
எண்ணத்தில் வைத்திருந்தால் அறிவாகுமா?
நதிவெள்ளம் கடல் நோக்கிப் பாய்ந்தோடுமே
நதிவெள்ளம் கடல் நோக்கிப் பாய்ந்தோடுமே அதை
விதியென்று ஊர் சொல்லி வழி மாற்றுமா?
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்து நீ வாழ்ந்திருந்தால் மண்ணுலகம் மதித்திடும் - தெளிந்து
நீ வழி நடந்தால் பொன்னுலகம் பிறந்திடும்.
மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன்
இனம்காக்க உறவாடி உயிர் போக்குமே
மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன்
இனம்காக்க உறவாடி உயிர் போக்குமே
தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும்
தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் தன்
மனம்மகிழ பகிர்ந்துண்டால் பசி தீருமே.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
மேகங்கள் வான்சென்று மழை பெய்திடும்
தேகத்தில் உயிர்ப்பூ க்கள் அமிழ்தாகிடும்
மேகங்கள் வான்சென்று மழை பெய்திடும்
தேகத்தில் உயிர்ப்பூ க்கள் அமிழ்தாகிடும்
காலம்தான் உனக்கென்று காத்திருக்குமா
காலம்தான் உனக்கென்று காத்திருக்குமா உடல்
கோலம் தான் இழந்தபின் எழில் கூடுமா?
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்து நீ வாழ்ந்திருந்தால் மண்ணுலகம் மதித்திடும் - தெளிந்து
நீ வழி நடந்தால் பொன்னுலகம் பிறந்திடும்.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்து நீ வாழ்ந்திருந்தால் மண்ணுலகம் மதித்திடும் - தெளிந்து
நீ வழி நடந்தால் பொன்னுலகம் பிறந்திடும்.
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..
Sunday, June 22, 2025
உதிரப்பிறந்த பிஞ்சுகள்
உதிரப்பிறந்த பிஞ்சுகள்
எது நடக்கக்கூடாது என்று உலகம் எதிர்பார்த்ததோ, அது நடந்து விட்டது.
ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமெரிக்கர்களால் தகர்ப்பு. கொக்கரிக்கும் டிரம்ப்.
இதனால் ஈரான் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகள் அனைத்தும் நேரடி பாதிப்பில். அவர்களால் எண்ணெய் மட்டும் எடுக்க முடியும். குடி நீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர்தான் ஆதாரம். கடல் நீர் அணுக்கதிர்களால் மாசுபடும் நிலை இப்போது.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் குடி நீருக்கு சமமாகிவிடும்.
போர் ஒழிக!
போர் வேண்டாம். பேரழிவைத்தரும் போர் வேண்டாம்.
இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். மண்ணில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.
இறைவன் சந்நிதியில் சிறப்பு அனுமதி யாருக்கும் இல்லை. யாருக்கும் யாரையும் கொல்லும் உரிமை இல்லை, குறிப்பாக பொது மக்களை.
'காமெனியை கொன்றிடுவோம். அவன் இருப்பிடம் தெரியும்.' - கொக்கரிக்கிறான் டிரம்ப். இவன் போருக்கு சம்மந்தமில்லாத அமெரிக்கன். சீனாவோ உளவுக்கப்பல்களை போரின் எல்லைக்குள் நிறுத்தி வைக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக. ஈரான் - இஸ்ரேல் போரினால் உலகமே இரண்டுபட்டு நிற்கிறது.
ஏவுகணைகள் ஏற்படுத்தும் அழிவுத்திறனை எதிர் அணிகள் பெருமையாக பேசி, வேடிக்கை பார்க்கிறார்கள். போரினால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களில், குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடில்லை.
பசித்து அழும் குழந்தைக்கு பால் தர முடியவில்லை என்றால், தன் பசியை பொறுத்துக்கொள்ளும் அன்னையால் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமா? எண்ணற்ற பிஞ்சுக்குழந்தைகளின் பசிக்குரல் யாருக்கும் கவலையை தராதா?
இது மிகவும் கொடுமையானது. அனைத்து தர்மங்களையும் மீறியது. இவர்களுக்கு அறமே எமனாக அமையும்.
திருமந்திரம் - 198
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றால் கட்டிச்
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.
கொல்லு. குத்து என்று சொல்பவர்கள் மனிதர்களல்ல மிருகங்கள். இவர்களை எம தூதர்கள் தங்களது பாசக்கயிற்றால் கட்டி ஓட்டி சென்று நெருப்பின் வாயிலில் நிற்கவைத்து, நரகத்தை காட்டுவார்கள்.
*** *** ***
Friday, June 20, 2025
பொட்டு வைத்த முகம்
பொட்டு வைத்த முகம்
'எடுத்துக்கோ..' - கைகட்டி நின்றிருந்த சிறுவனிடம் தலைமை ஆசிரியர் சொன்னார்.
இரண்டு வெள்ளை சாக்பீஸை எடுத்த குமாரின் கண்களில் பக்கத்தில் இருந்த கலர் சாக்பீஸ் கண்ணில் பட்டது. கண்கள் விரிய ஆச்சர்யமாக அதை பார்த்தான்.
'சார், சாக்பீஸ்' - என்று சொல்லியபடியே, சாக்பீஸ் வாங்கி வர சொன்ன வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.
'டேய்.. ஹெட்மாஸ்டர் கிட்ட கலர் கலரா சாக்பீஸ் இருக்குடா..' - என்று தான் பார்த்ததை பக்கத்தில் அமர்ந்திருந்த செல்வாவிடம் சொன்னான்.
'லக்குடா உனக்கு. நாளைக்கு நான் போய் எடுத்துட்டு வருவேன். நானும் பார்ப்பேன்.' - செல்வா பொறாமையோடு சொன்னான்.
'சாக்பீஸ் செஞ்சு பாக்கலாமா? எங்கம்மா வீட்டுக்கு வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல் வேக வச்சிருக்காங்க.' - என்றான் குமார்.
'எங்க வீட்லயும் சுண்ணாம்பு இருக்கு. இன்னிக்கு செய்யலாம்.' - சந்தோசமாக சொன்னான் செல்வா.
இவர்களுக்கு வெள்ளையாக இருப்பதெல்லாம் சுண்ணாம்புதான்.
*** *** ***
'பெல்லடிச்சிட்டாங்க, வாடா போலாம்' - என்ற செல்வாவின் முகத்தை பார்த்தான் குமார்.
'ஐயோ.. நான் விபூதி வெக்கலடா.' - திருநீறணிந்த செல்வாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கத்தினான் குமார்.
'போச்சு. சார், உன்ன வச்சு வெளுக்கப்போறார்.' - மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திருநீறணியாமல் யாரும் வகுப்புக்கு வரக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார்.
ஹிஜாப், தொப்பி, சிலுவை அணிந்த சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த விதி பொருந்தும். விதி எல்லாருக்கும் பொதுவானது. அந்த ஆசிரியர் வகுப்பில் மட்டும் எல்லோரும் திருநீறணிந்திருப்பார்கள்.
என்ன செய்வதென்று திகைத்து நின்ற குமார், வேகமாக சென்று பள்ளி சுவற்றில் அடித்திருந்த சுண்ணாம்பை விரல்களில் தேய்த்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.
'அப்பாடா.. இன்னிக்கு தப்பிச்சேன்டா..'
*** *** ***
'பொட்டு வைத்திருந்தால் அது இந்தியப்பெண். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தால் அது வடஇந்தியப்பெண். கொஞ்சம் சந்தனம் வைத்திருந்தால் நம்ம கேரளம். பொட்டுடன் திருநீறு வைத்திருந்தால் அது நம்ம தமிழ்ப்பெண்.' - வெஸ்ட்மீடில் இரயிலில் ஏறிய திருநீறணிந்த பெண்ணைப்பார்த்ததும், குமாரின் சிந்தனை இப்படியாக ஓடியது.
'நம் இனமடா..' - என்ற எண்ணம் சட்டென்று ஒட்டிக்கொண்டது.
பளிச்சென்ற ஒரு தெய்வீக அம்சம் இந்தியப்பெண்களின் முகத்தில் ஒளிர்வதாக தெரிவது, தனக்கு மட்டும்தானா என்ற சந்தேகம் எப்போதும் குமாருக்கு உண்டு.
இந்தியப் பெண்கள் சேலை கட்டுவதும், பூ வைத்து பொட்டு வைப்பதும் தீராத ஆவலைத்தூண்டுகிறது ஆஸ்திரேலியாவில் வாழும் பெண்களுக்கு. அரசியல் பெண் தலைவர்கள் இந்திய விழாக்களில் சேலை மற்றும் பொட்டுடன் கலந்து கொள்வார்கள்.வெட்கம் அவர்கள் அறியாத ஒன்று. ஆனால், இந்த சமயங்களில் அவர்கள் முகத்தில் இழையோடும் வெட்கம் அபரிமிதமான அழகு.
மூன்றாம் வகுப்பில் தன்னை அறியாமல், ஆசிரியரின் கட்டுப்பாட்டில், நிகழ்ந்த ஒரு சின்ன படிப்பினை, இன்று உலகளாவிய நிலையில் நிலைத்திருப்பதை எண்ணி உள்ளூர சந்தோஷமாக இருந்தது குமாருக்கு.
*** *** ***
'சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்தான்' - என்று புராணக்கதைகள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
மூன்றாவது கண் இருக்குமிடம் நெற்றி. இதையே ஆக்ஞா என்றும் சுழு முனை என்றும் சொல்வார்கள். இங்குதான் பிட்யூட்டரியில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்க்கான ஹார்மோன்கள் வெளிப்படுவதற்கான இடம். அதாவது, காம உணர்வுகளைத்தூண்டும் எண்ணங்கள் இங்குதான் உருவாகிறது.
நம்முடைய உணவு பழக்கம், சுற்றுப்புற சூழல்களால் காம உணர்வுகள் இல்லாத நேரமே இல்லை என்னும் வண்ணம் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. காமத்தை ஏதோ ஒரு வழியில் முறைப்படுத்த வேண்டும்.
மன்மதனை எரித்த சிவன் எதை பூசிக்கொண்டு எரித்தானோ, அதையே நாமும் செய்ய வேண்டுமானால் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் பூசிக்கொள்ள வேண்டும். ஆனால், அது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் சித்தர்கள் நமக்கு திருநீற்றை வழங்கி சென்றிருக்கிறார்கள்.
திருநீறை அணிவதால் காம உணர்வுகள் முறைப்படுத்தப்படும். இன்னும் ஒரு நிலை மேலே சென்று, நமக்கு காம உணர்வால் வெளிப்படும் ஆசையை பாழ்படுத்தும் முறையை காண்பிக்கிறார் திருமூலர்.
திருமந்திரம் - 1937
பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.
உள்ளம் உருக அனலை மூட்டுகின்ற இடமே புருவ மத்தியான சுழு முனை.
அங்கே திருநீறை அணியுங்கள். காமன் உங்கள் வசப்படுவான், காலமும் உங்களை தாலாட்டும்.
*** *** ***
இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலினுள் திருநீறணிந்து, இஸ்லாமியர்கள் ஓட்டுக்காக திருநீரைத் துறக்கும் சுண்ணாம்புகளை இனங்கண்டு ஒதுக்கித்தள்ளுங்கள்.
தர்காக்களில் வழங்கும் திருநீறும் புனிதமானதே. துஷ்ட ஆவிகளை தூர நிறுத்தும் ஆற்றலைக் கொண்டது.
*** *** ***
Tuesday, January 21, 2025
கதிரொளியில் உயிரலைகள்
கதிரொளியில் உயிரலைகள்
அணுவினுள் ஆற்றலாய் நின்றியங்கும்
அணுவினும் நுண்ணிய பருப்பொருளே
உயிரினை உடலுடன் ஒன்றிணைக்கும்
உயரழுத்த மின்காந்த அலைகள்
அணு, அறிவியல் கண்டறிந்த மிகச்சிறிய பருப்பொருள். அணுவை பகுத்தறிய முடியும் என்ற அறிவியலாளர்களின் ஆய்வுகள், அணுவைப்பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர ஆர்வத்தை தூண்டியது. அணுவினுக்குள் நியூக்ளியஸ் என்னும் கருப்பொருளும், அதனை சுற்றிக்கொண்டிருக்கும் எலக்ட்ரான் என்னும் சார்பொருளும் இருப்பதை கண்டறிந்தார்கள். இதையே நாம், சூரியனை நியூக்ளியசாக கொண்டு சுற்றும் கிரகங்களை எலெக்ட்ரான்கள் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
இத்தோடு அறிவியல் ஆய்வு நிற்கவில்லை. எலெக்ட்ரானின் சுழற்சியை ஆராய முற்பட்டார்கள். சுழற்சிக்கு தேவையான ஆற்றலை குவாண்டம் என்று பெயரிட்டு மேலும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். குவாண்டம் என்றால் ஆற்றலின் ஒரு அளவுகோல். எலெக்ட்ரானின் சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்ததில் இரண்டு உண்மைகள் தெரிய வந்தது.
வரைமுறைப் படுத்தமுடியாத வேகத்தில் நியூக்ளியசை சுற்றும் எலக்ட்ரான்கள், ஒரு நிலையில் பருப்பொருளாகவும், மற்றொரு நிலையில் அலைகளாகவும் செயல்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள்.
அதாவது, எலெக்ட்ரான்கள் மின்காந்த அலைகளாக நியூக்ளியசை சுற்றிக்கொண்டிருக்கிறது. இங்கே குவாண்டம் என்னும் இறை ஆற்றல் நியூக்ளியசையும், எலெக்ட்ரானையும் இணைக்கும் ஆற்றலாய் விளங்குகிறது.
இனி, நம் உடலுக்கு வருவோம். உடலுடன் உயிர் இணைந்தே செயல்படுகிறது, நியூக்ளியசும் எலெக்ட்ரானும் போல. இங்கே குவாண்டமாக செயல்படும் ஆற்றல் இறை ஆற்றல். மின்காந்த அலைகளாக உடல் முழுவதும் உயிருடன் இணைந்து செயல்படுகிறது.
அதாவது, உடலை உயிருடன் கட்டி இருக்கும் மின்காந்த அலைகளே இறைவன்.
ஒவ்வொருவர் உடலிலும் இவ்வாறாக இறைநிலை செயல்படுவதை திருமூலர் மிகத்தெளிவாக நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சொல்லி சென்றிருக்கிறார்.
திருமந்திரம் - 2002
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.
நீர் நிறைந்த குடங்களை சூரிய ஒளியில் வைத்தால், அனைத்து குடங்களிலும் சூரியனின் பிம்பம் தெரியும். குடத்தில் மூடி வைத்துக்கொள்ளலாம் என்றால் சூரியனை குடத்தில் அடக்க முடியாது.
விஷத்தை உண்ட இறைவனும் அனைத்து உயிர்களின் உடலில் தோன்றி இருப்பதும், நீர் நிறைந்த குடத்தில் தோன்றிடும் சூரியன் போலத்தான்.
மின்னலைகளாக, ஒப்பற்ற ஆனந்த ஒளிக்கற்றை ஆற்றலாக, நம் உடலில் இருப்பது இறைவன்.
*** *** *** *** ***
இறைநிலை தியானம்
மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம்.
அகத்தை திறக்கும் திறவுகோல் உள்ளம். உள்ளமே நம்முடலையும், உடலுடன் உயிர் இணைந்து இருப்பதையும் உணர்கிறது.
உடல் நிலத்தின் பண்புகளால் ஆனது. நிலத்தில் கிடைக்கும் உணவினைக்கொண்டே தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.
உயிர் உருவான நாளிலிருந்து உடலுடன் இணைந்து செயல்படுகிறது. உயிரை காற்றிலுள்ள பிராண வாயு பாதுகாக்கிறது. உயிர், உடலின் ஒவ்வொரு சிற்றறையிலும் உடல் இயக்கத்துடன் இயைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உடலும், உயிரும் இணைந்து செயல்பட்டாலும், இணைப்பு ஆற்றலைப்பற்றி அறியாமல் இருக்கிறது மனம். குவாண்டம் அறிவியல் மூலம், இரண்டையும் இணைப்பது இறை நிலையிலுள்ள மின்காந்த அலைகள் என்று அறிந்து கொண்டோம்.
மனதை புருவ மத்தியில் நிறுத்தி, திரிவேணி சங்கமமாக உடல், உயிர் மற்றும் இறை ஒன்று கூடுவதை கவனிப்போம்.
முதலில் உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உண்மைகளை ஒவ்வொன்றாக கவனத்தில் கொள்வோம்.
பஞ்சபூதங்கள் - 5:
உடலைப் பெற்றுத்தந்தது நிலம். உடலில் நீரோட்டமாக உள்ளது சக்தி பரிமாற்றம். வெப்பமே அனைத்து உடல் காரியங்களுக்கும் அடிப்படை காரணியாக இருக்கிறது. காற்று உயிரை நிலை நிறுத்தும் பணியை செய்கிறது. ஆகாயம் உடலின் சிற்றறைகளில் உள்ள உயிரை இணைக்கும் அலை வரிசையாக உள்ளது. இவ்வாறாக பஞ்சபூதங்களின் செயல் தொடர்ந்து நம் உடலில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஞானேந்திரியங்கள் - 5:
உடல் இயக்கத்திற்கு தேவையான அவசியங்களை கண், காது, மூக்கு, வாய் மற்றும் மெய் உண்டாக்கித்தருகிறது.
கர்மேந்திரியங்கள் - 5:
ஐம்புலன்கள் உண்டாக்கும் அவசியங்களை நடத்தி தருவது, கால், கை, வாய், கருவாய் மற்றும் எருவாய் எனப்படும் கர்மேந்திரியங்கள்.
தன்மாத்திரைகள் - 5:
ஐம்புலன்களால் உண்டாகும் பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல் மற்றும் நுகர்தல் போன்ற உலக அனுபவங்களை உணரச்செய்கிறது.
மேலே குறிப்பிட்டவை எல்லாம் உடலுடன், உயிர் அனுபவிக்கும் உண்மைகள்.
அந்தக்கரணங்கள் - 4:
உலக வாழ்வின் அனுபவத்தை உடலுக்கும், உயிருக்கும் கொடுப்பது அந்தக்கரணங்கள் எனப்படும் மனம், புத்தி, அஹங்காரம் மற்றும் சித்தி.
இந்த 24 உண்மைகளும் ஆன்ம தத்துவங்கள் என்றும் அறியலாம். இதில் முக்கியமாக மனம். மனமே அனைத்துக் காரியங்களுக்கும் முன்னிலை வகிக்கிறது.
மனதை புருவ நெற்றியில் நிலைப்படுத்தி, மின்காந்த அலைகளான இறை ஆற்றலை பெறுவதாக தியானம் செய்வோம்.
முதலில், புருவ நெற்றியில் உங்களுக்கு பிடித்த தெய்வத்தின் உருவத்தை தியானிக்க ஆரம்பியுங்கள். அந்த பரு உருவம் மறைந்து மின்னலைகளாக மாறும் வரை தொடர்ந்து தியானம் செய்து வாருங்கள்.
*** *** *** *** ***
கொஞ்ச நாட்களில் இந்த தியானத்தின் பலன்களை நீங்களே மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பித்து விடுவீர்கள்.
இறைநிலை தியானம் உங்களுக்கு சீராக அமைய வாழ்த்துகள்.
*** *** *** *** **
Friday, November 22, 2024
கல்லிலே கலைவண்ணம்
கல்லிலே கலைவண்ணம்
எனக்கு தீப ஆராதனை.
இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்கள், நீர் என மாற்றி மாற்றி ஊற்றி அபிஷேகம் நடந்தது.
பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆலயப்பணியாளர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தி வேகமாக அவர்களை வெளியேற்றி, வரிசையில் வந்த அனைவரும் என்னை தரிசிக்க வசதி செய்து கொண்டிருந்தார்கள்.
'முருகா.. முருகா.. வெற்றி வேல்.. வீர வேல்..' - வெளியே கூட்டம் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.
தரிசனம் முடித்தவர்கள் திண்ணையில் என் மீது அமர்ந்து கொண்டு ஊர்க்கதை பேசிக்கொண்டிருந்தார்கள். பஞ்சாமிர்தத்தை விட அதுதான் சுவையாக இருக்கும் போல.
சின்னஞ்சிறு குழந்தைகளும் என்மீது படிக்கட்டுகளில் தவழ்ந்து ஏறிக்கொண்டிருந்தார்கள். வெயில் பட்டு படிக்கட்டுகள் சூடாவதால் அதன்மீது தென்னை நார்ப்பாய்கள் போட்டிருந்தார்கள்.
எனக்கே மலைப்பாக இருக்கிறது. எண்ணற்ற காலம் நீரிலும், நிலத்திலும் பெரிய பாறையாக இருந்த நான் இன்று கருவறைத் தெய்வமாகவும், அமர்வதற்கு திண்ணையாகவும் மற்றும் படிக்கட்டுகளாகவும் மாறி இருக்கிறேன்.
'ஹரஹர ஹரஹர.. வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா..'
பார்த்தவர்களுக்கெல்லாம் பாறையாய் தெரிந்த நான் ஒரே ஒரு ஜோடி கண்களுக்கு மட்டும் தெய்வமாய் தெரிந்திருக்கிறேன். அந்தப்பார்வையில் மட்டும் நான் மூலவராகவும், திண்ணைக்கற்களாகவும், படிக்கட்டுகளாகவும் தெரிந்திருக்கிறேன்.
சிற்பியின் கலைக்கண்கள்.
இன்று, என்னை வணங்குபவர்களின் கண்கள், பக்திக்கண்கள். அவர்களுக்கு நான் தெரியவில்லை; மாறாக அவர்கள் பக்தி சிரத்தையுடன் வணங்கும் அந்த தண்டாயுதபாணியே தெரிகிறார்.
தந்தைக்கு மகளாக இருக்கும் ஒரு பெண், கணவருக்கு மனைவி, குழந்தைகளுக்கு அம்மா. இன்னும் எத்தனையோ உறவுகள் அந்த பெண்ணை சுற்றி.
பெண்ணை பெண்ணாக மட்டும் பார்க்க முடியுமா என்ன?
திருமந்திரம் - 2290
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.
மரத்தால் செதுக்கப்பட்ட யானையை பார்க்கும்போது அங்கே மரம் தெரியவில்லை. அது மரம்தான் என்றுணரும்போது அங்கே யானை மறைந்து மரமாகி விடுகிறது. பஞ்ச பூதங்களில் முதலான வானம், எங்கும் பரந்துள்ள பரம்பொருளை உள்ளடக்கி மறைத்து நிற்கிறது. பரம்பொருள்தான் அனைத்தும் என்னும்போது, வானம் மறைந்து விடுகிறது.
*** *** *** *** *** ***
ஒளிக்கதிர்
ஒளிக்கதிர் உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...
-
சாமியார் ஆவது எப்படி? பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக்கூடாது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை. ஞானம் பிறந்து விட்டது எனக்கு. காப்பி குடிச்ச...
-
தவறும் தப்பும் தவறு என்பது தவறிச் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்தப்பார்க்கணும் தப்பு செய்தவன் வருந்தியாகணு...
-
தேவாமிர்தம் சாட்சி சொன்ன சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ? உடலின் ஒவ்வொரு அசைவிற்கும், உணர்வுக்கும் சாட்சியாக நிற்பது சந்திரன். வி...