திருக்குறள்
மின்னலில் மையெடுத்து
தமிழில் எழுத்தெடுத்து
வந்ததிந்த மந்திரம்
பொருள்:
இறையருள் தந்த மாபெரும் வெகுமதி, நாம் இம்மண்ணில் மனிதப்பிறவி பெற்றது. நம்மோடு பல்லுயிர்களையம் படைத்து அவைகளுக்கும் வாழ்விடமாக இறைவன் பூமியை அளித்தார்.
ஆறறிவு படைத்த மனிதனின் தலையாய கடமை, இறைவன் அளித்ததை அனைத்து உயிர்களுக்கும் பொதுவில் வைத்து, இயற்கையோடு இணைந்து வாழ்வது.
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
- திருக்குறள்
அனைத்து உயிர்களுக்கும் இயற்கையோடிணைந்த தற்சார்ந்த, இனம் சார்ந்த வாழ்வாதாரத்தை மனிதன் உறுதி செய்ய வேண்டும். அவைகளின் வாழ்விடத்தை கவர்வது, ஊறு செய்வது போன்றவற்றை நிறுத்துவதோடல்லாமல், அவைகளுக்கு இடர் நேரும்போதெல்லாம் முன்னின்று உதவ வேண்டும்.
[இதை நான் சொல்லவில்லை. நம்ம தெய்வப்புலவர் சொன்னதின் பொருளாக நான் விளங்கிக்கொண்டது]
--------------*-------------
உட்பொருள்: கோபம்
பொருள்: சமுதாய நல்லிணக்கம்
நிகழ்வு: மதம் சார்ந்த தீவிரவாதம்
ஆய்வு: அமைதி, நல்லிணக்கம்
உணர்வு: ஐம்புலன்கள்
'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்; தெய்வம் உண்டென்று தானுணர்தல் வேணடும்' - பாரதியார்.
குறள் 373:
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
குறள் 50:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
குறள் 77:
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
குறள் 80:
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
குறள் 90:
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
குறள் 140:
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
தெளிவான சிந்தனை ஓட்டம். எண்ணங்களை வென்றெடுத்து, கவலையை வேரறுக்க அருமையான சூத்திரம்.