உணவு
காய்கறிகளும் பிரமாதம்
பொருள்:
'டாட்.. டோன்ட் யூஸ் பிங்கர்ஸ்' - அப்பாவுக்கு உத்தரவு போட்டாள், ஒரு வாரமாக பிளே ஸ்கூல் போகும், ஷிவானி. பள்ளியில் ஆசிரியை சொல்லிக்கொடுத்ததை அப்பாவுக்கு சொல்லிக்கொடுக்கிறாள் மகள், கையில் எடுத்து சாப்பிடுவது, சுகாதாரக்கேடு என்று.
'மாப்ளே.. பிரியாணிய கூட ஸ்பூன்ல சாப்பிடுறாண்டா. உப்புமான்னா கூட பரவாயில்ல, கருமத்த வாயில வெக்க முடியாது. பாரின் போயிட்டு வந்து இவன் பண்ற அலப்பறை தாங்க முடியலடா.'
ஒரு பொருள் உண்ணத்தக்கதா அல்லது தவிர்க்க வேண்டியதா என்பதை கண்டறிய மனிதன் என்ன உத்தியை கையாண்டான்? விலங்குகள் உண்ட கனிகள், கிழங்குகள் மற்றும் பறவைகள் உண்ட தானியங்களை தானும் உண்ண ஆரம்பித்தான்.
எப்பொழுது உணவை வியாபாரப்பொருளாக மாற்றினானோ, அன்றைக்கு மாறியது உணவே விஷமாக. முதலில் விளைச்சலை அதிகரிக்க, ஹைபிரிட் முறையை ஆரம்பித்தான். மண்ணையும், விளைச்சலையும் ரசாயன உரங்களாலும், உயிர்கொல்லி தெளிப்பான்களாலும் நிறைத்து, சத்தற்ற மகத்தான விளைச்சலை கண்டுபிடித்தான். ஆசை அதனினும் பெருக, மரபணு மாற்று விளைச்சலை கொண்டு வந்து சுத்தமாக உண்ணும் உணவையே விஷமாக மாற்றிவிட்டான்.
மனிதன் உண்ணும் உணவை, புழு, பூச்சிகளே கூட உண்பதில்லை. உடலில் உள்ள நல்ல நோயெதிர்ப்பு பாக்டீரியாக்கள் அழிவதால், புற்று நோய், புற்றீசலாய் பரவி நிற்கிறது.
நாம் உட்கொள்ளும் உணவு, எப்படி உடலுக்கும், மனதுக்கும் உறுதுணையாய் உள்ளது என்பதை திருமூலர் சொல்வதை கேட்போம்:
அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்னத்
திருந்தும் உடல் மனமாம் கூறு சேர்ந்திடு
இருந்தன முன்னாள் இரதம் அதாகுமே.
- திருமந்திரம்
மறை பொருள்:
நாம் உண்ணும் உணவு, மூன்று பகுதியாகும். அவை, உயிரிருக்கும் உடல், உடலிருக்கும் மனம், வெளியேறும் கழிவு என மூன்று பகுதி. திருத்தமுள்ள மனமும், உடலும் ஆகிய இரண்டும் இருக்கும் தன்மை அவை முன் உண்ட உணவின் சத்தினாலேயே ஆகும்.
கல்யாண சமையல் சாதம்