கடவுள் - ஏழும்பர்ச் சென்றனன்
என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கும் உறக்கம் இல்லை
'சார், உங்களுக்கு ஒரு கவர் வந்திருக்கு. ட்யூ அம்பது பைசா' - என்று சொன்ன போஸ்ட்மேனிடம், காசைக்கொடுத்து வாங்கிப் பார்த்தேன்.
தபால் கார்டு பத்து பைசா, இன்லேண்ட் லெட்டர் பதினைந்து பைசா மற்றும் கவர் இருபத்தைந்து பைசா ஸ்டாம்ப் ஒட்டினால் போதும்.
எனக்கு வந்த தபால் கவர் ஸ்டாம்ப் ஒட்டாததால், ஒட்டியிருக்க வேண்டிய ஸ்டாம்ப் இருபத்தைந்து பைசா மற்றும் பெனால்டி இருபத்தைந்து பைசா ஆக ஐம்பது பைசா ட்யூ.
ஆனால், மூணு பத்து பைசா ஸ்டாம்ப் ஒட்டி இருக்கே!
'சார், போஸ்டல் ஸ்டாம்புக்கு பதிலா ரெவின்யு ஸ்டாம்ப் ஒட்டி இருக்காங்க'
அது ஒரு தீபாவளி வாழ்த்து அட்டை. அனுப்பியவர் பெயர் இல்லை. சுவாரசியமே இங்குதான் ஆரம்பிக்கிறது.
அனுப்பியவரை துப்பறிந்து, மனம் பரிமாறிய நேரத்தில் அவள் வாழ்வில் தந்தையை இழந்த துக்கம்.
தொடர்ந்த இன்னொரு துக்கம், அவளுக்கு திருமணம்.
'எங்கிருந்தாலும் வாழ்க' - என்று அவள் திருமணத்தில் பாடி விட்டு பேசாமல் இருக்க முடியவில்லை.
சோகம்.. சோகம்.. சோகம்..
MGR-க்கே காதல் தோல்வியா, என்னும் அளவுக்கு சோகம்.
'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது'- என்று தாடி விடாத விஜயகாந்தாய் நாட்களை ஓட்டினேன்.
ஐம்புலன்கள் தரும் இன்பத்தை அறியும் மனம், அவை ஒன்றுமே வாழ்வில் முக்கியம் இல்லை என வாடி நின்றது.
ஐம்புலன்களை அறிந்து, மாயையை கடந்து, தவ நிலையில் துரியத்தை அடைய, துறவை ஏற்கும் அளவிற்கு வாழ்க்கையில் பிடிப்பற்ற வெறுப்பு.
துறவற தவ வாழ்வில், கடவுளின் ஏழாம் குணமான துரியம் என்னும் பேரொளி, பேருறக்கத்தில் மனிதன் அடைய முடியும் என்றால், இல்லற வாழ்விலும் இது ஒரு மார்க்கமோ என்ற மயக்கம் மனதினில் ஆடியது.
சத்தி சிவன் விளையாட்டால் உயிராகி
ஒத்த இருமாயா கூட்டத்து இடைஊட்டிச்
சுத்தம் அதுஆகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.
- திருமந்திரம் 1771
சக்தி, சிவன் இருவரின் விளையாட்டான உலகும், உலகத்தில் தோன்றி உள்ள உயிர்க்கூட்டமும். மாயா மலம், கன்ம மலம் என்னும் இரு மாய நிலையிலிருந்து பிரிந்து, அறிவுடன் கூடி சித்தி நிலையில் பேருறக்கம் கொள்ளும். இவ்விடத்தில், உயிர் சிவ நிலையை அடையும்.
அதீதத் துரியத்து அறிவனாம் ஆன்மா
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
- திருமந்திரம் 2199
தவ நிலையில் ஆறு ஆதாரங்களை கடந்து, அதீதத் துரியமாகிய பேருறக்க நிலையில், உயிர் மாயையிலிருந்து விடுபட்டு, அறிவுடையதாயிருக்கும். இப்படியே உறுதியாக அறிவோடு பொருந்தி பேருறக்க நிலையிலே நிற்க இயலுமானால், சுடர்விட்டெழும் ஆருயிரின் அறிவுச்சுடர் ஞானக்கனல் எனப்படும் நிலை அடையும். இதுவே சீவாக்கினியில் சீவன் அடங்கும் பேருறக்கம்.
சித்தர்களே தங்கள் சித்தத்தில் துரிய நிலை எய்தியவர்கள் என்பதால் இவர்கள் சித்தர்கள் என அறியப்படுகிறார்கள்.
நல்ல ஆரோக்கியமான உடலில் மட்டுமே ஐம்புலன்களும் சிறப்பாக செயல்படும். இல்லறத்தார் ஐம்புலன்களின் இன்பத்தை அனுபவித்து, அவ்வழியில் இறை நிலை எய்த, உடலின் மேம்பாட்டிற்காக மூன்று வழிகளை பாடல்களின் மூலம் அறிவித்து சென்றிருக்கிறார்கள்.
1. மந்திரம்
ஐம்பத்தொரு அக்ஷரங்களை உடலின் ஒலியாக பிரித்து, உயிரோடும், மனதோடும் உறுதியாக ஒன்றி நிற்க மந்திரங்கள். ஓம், நமக்ஷிவய மற்றும் பல.
2. யோகம்
பிராணாயாமம் என்னும் மூச்சு பயிற்சியின் மூலம், உடலினை இயக்கும் பத்து வகையான வாயுக்களை சீராக வைத்திருத்தல், இன்னும் பல யோக முறைகள்.
3. மருந்து
உட்கொள்ளும் உணவு, ஒவ்வாமையினாலோ, வேறு காரணங்களினால் விஷத்தன்மை பெற்று உடலில் தங்கி நோய் உண்டாக்கினால், அதனை நீக்கி உடல் புத்துணர்வு பெற இயற்கை சித்த மருந்து வகைகள்.

மாயையை விட்டு விலகி நிற்கும் ஆற்றலே, இறைவனின் ஏழாம் குணமாக திகழ்கிறது.
No comments:
Post a Comment