Thursday, January 9, 2020

கடவுள் - ஆறு விரிந்தனன்

கடவுள் - ஆறு விரிந்தனன்









ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு



'நீ பேசும் வார்த்தையில் இருந்து வரும்  ஒலியை பிரித்து, ஒலியை வரி வடிவமாக கொண்டுவருவது எழுத்து' - கபிலர்,  'எழுத்து என்றால் என்ன?' என்று கேட்ட பறம்பு மலைத் தலைவன் வேள் பாரியின் தளபதிகளில் ஒருவனான நீலனுக்கு விளக்கினார்.

'ஒலி என்றால் என்ன?'
'ஒலி எப்படி உருவானது, எங்கிருந்து வருகிறது?'

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரையதன்  பால்திகழ் நாதமே.
                                                                  - திருமந்திரம் 381


பராபரம்  - சிவன்.    பராபரை - சக்தி.

சிவனுடன் [ஒளியுடன்], சக்தி இணைந்த நிலையில், பிறந்தது நாதம் என்னும் ஒலி. ஒளி/ஒலியில் தோன்றியதே  அணுக்களும் சகல உயிர்களும். அணுக்களின் கூட்டே, மனிதன் வாழும் அண்டமும், பேரண்டமும். எனவே, இந்த விதிக்கு  மனித உடல்  விலக்கல்ல.

உடலின்  உள்ளியக்கம் ஒலியினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஐம்பொறிகளில் ஒன்றான, காது  உணரக்கூடிய ஒலியினை, வரி வடிவமாக்கி எழுத்து என வகைப்படுத்தி அறிந்து உள்ளோம்.

உடலினுள்  இயங்கக்கூடிய ஒலியினை,  எழுத்துக்கள் வடிவில், அக்ஷரம் என்று வகைப்படுத்தி உள்ளனர் நம் முன்னோர்கள். அதனை  கிரந்த எழுத்துக்கள் என்றும், ஆதி தமிழ்  எழுத்துக்கள் என்றும் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஐம்பத்தி ஒன்று என்ற எண்ணிக்கையை கொண்ட இந்த அக்ஷரங்கள், மூலாதாரத்திலிருந்து, ஆக்கினை வரை, ஆறு ஆதாரங்களின்  அடித்தளமாக அமைந்துள்ளது.

ஆறு ஆதாரங்களும், ஐம்பத்தியொரு அக்ஷரங்களும்:

1 மூலாதாரம்  -  [வ, ச, ஷ, ஸ] - 4 
2 சுவாதிட்டானம்  - [ப3, ப4, ம, ய, ர, ல] - 6
3 மணிபூரகம் - [ட3, ட4, ண, த, த2, த3. த4, ந, ப, ப2] - 10
4 அனாகதம் - [க, க2, க3, க4, ங, ச, ச2, ஜ, ஜ2, ஞ, ட, ட2] - 12
5 விசுத்தி - [அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ரு, ரூ, லு, லூ, ஏ, ஐ, ஓ, ஒள, அம், அஹ] - 16
6 ஆக்கினை - [ஹ, ள] - 2
                                                                                                                         - போகர் 7000

ஒவ்வொரு அக்ஷரமும் ஒவ்வொரு தாமரை மலர் இதழ்களாக, ஆறு ஆதார சக்கரம்தோறும்  உவமைப்படுத்தப்பட்டுள்ளது. ஐம்பத்தியோராவது அக்ஷரமாக 'க்ஷி' தலையின்  உச்சியில் நிற்கிறது.

மேல்என்று கீழ்என்று இரண்டறக் காணுங்கால்
தான்என்றும் நான்என்றும் தன்மைகள் ஓராறும்
பார்எங்கும் ஆகிப் பரந்த பராபரம்
கார்ஒன்று கற்பகம் ஆகி நின்றானே.
                                                                                 - திருமந்திரம் 1706


'தான்' என்று ஒளி உடலுடன் தன்மயமாகும் நிலையும், 'நான்' என்று திட உடலாய் மனிதன்  உணரும் தன்மையும் ஆறு ஆதாரங்களின் குணத்தினால் உண்டானது. ஆறு ஆதாரங்களையும் ஒன்றாக காணும் பரம்பொருள், பேரண்டமாக நிலைத்து நிற்கிறான்.

ஆறு அந்தமும் கூடிஆகும் உடம்பினில்
கூறிய ஆதாரம் மற்றும் குறிக்கொள்மின்
ஆரிய அக்கரம் ஐம்பதின் மேலாக
ஊறிய ஆதாரத்துஓர் எழுத்து ஆமே.
                                                                                  - திருமந்திரம் 1709


ஆறு ஆதாரங்களுடன் அமைந்த இவ்வுடல், ஐம்பத்தியொரு அக்ஷரங்களை கொண்டிருந்தாலும், அவற்றின் அடித்தளம், 'ஓம்' என்னும் பிரணவத்தை  ஆதாரமாய் ஏற்று நிற்கிறது.

இதுவே இறைவனின் ஆறாம் குணமாகும்.

*** ***



8 comments:

  1. கோடி நன்றிகள்

    ReplyDelete
  2. உங்களை தொடர்பு கொள்ளும் வழி என்ன என்று தயைகூர்ந்து சொல்லுங்கள்

    என் எண் 0044-7958586491
    லண்டனில் வசிக்கிறேன்

    ReplyDelete
  3. தங்களை கருத்துக்களையே க்ஷிவஞானபீடம் எனும் Youtube கார்த்திகேயன் என ஒருவர் பேசுகிறார்

    தங்கள் இருவருக்கும் குரு ஒருவரா?

    கேள்வி தவறென்றால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      மன்னிக்கவும், காலம் தாழ்த்தி பதில் தருவதற்கு.
      சீரடி சாயிபாபா மட்டுமே என்னுடைய மானசீக குரு.
      கோவை ஷிவஞானபீடம், திரு கார்த்திகேயன் அவர்களின் புத்தகங்கள், காணொளிகளை காண்பதுண்டு. அவர் ஒரு வகையில், திருமந்திரம் கற்க எனக்கு தூண்டு கோலாய் இருந்தார் என கொள்ளலாம்.
      மற்றபடி, தமிழில் உள்ள ஆர்வமே திருமந்திரம் கற்க, எழுத தூண்டுகோல்.
      Australia: +61 433 818 844 India: +91 98438 25814
      email: veeranagaraj@yahoo.com

      At present in Coimbatore.

      Delete
    2. நன்றி ஐயா

      தங்கள் பதிவுகளில் பெரிய முதிர்ச்சி தெரிகிறது
      சிவஞானபீடம் கார்த்திகேயன் தங்களிடம் கற்றிருப்பாரோ என எண்ண வைத்து விட்டது ஆழ்ந்த தேடலுடைய அறிவார்ந்த தங்கள் பதிவுகள்

      Delete
  4. எண்ணங்கள் இல்லா நிலையில் நாம் கேட்கும் நாதம் தான் இந்த அக்ஷரங்களா?


    மணிபூரகத்தில் 11அக்ஷரங்களா என்பதையும் தெளிவுபடுத்துங்கள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. அக்ஷரங்களை பொறுத்த மட்டில் 51 என்பது தெளிவு. இந்த பதிவில், அக்ஷரங்களை ஆறு ஆதாரங்களுடன் இணைத்து நான் போட்டிருப்பது, போகர் - 7000 பாடல் தொகுப்பில் கிடைத்த செய்தி.

      மற்றபடி, இன்னும் நிறைய பதில் அறிய வேண்டிய கேள்விகள், உங்களைப்போல் எனக்குள்ளும் உண்டு.

      Delete
  5. நன்றி ஐயா
    இந்த அக்ஷரங்களை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்கள் தியானத்தில்
    ஆட்சேபனை இல்லையெனில் தங்கள் அனுபவத்தை பகிர வேண்டுகிறேன்

    ReplyDelete

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...