Wednesday, March 13, 2019

காற்று

காற்று

காற்று வாங்கப்போனேன்
ஒரு கவிதை
வாங்கி வந்தேன்





உன்னத வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள் 

சுவாசிக்கும் காற்றில் உள்ள தனிமங்களை வகைப்படுத்தினால் அதில் உன்னத வாயுக்கள் அல்லது மந்த வாயுக்கள்  [Noble Gases or Inert Gases] என்றழைக்கப்படும் ஏழு தனிமங்களை கொண்ட  ஒரு குழு உண்டு. இந்த வாயுக்கள் முழுமை பெற்ற அணு அமைப்பை உடையதால் எந்த இரசாயன மாற்றங்களுக்கு உட்படாது, தன்னிலை மாறாமல் இருக்கும். நாம் சுவாசிக்கும்போது, நம் உடலில் பல நன்மைகளை செய்யும் தன்மை இந்த உன்னத வாயுக்களுக்கு உண்டு.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4386981/

- இது அறிவியல் சொல்வது.

உடலின் வாயுக்கள்

நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்று ஐந்து வாயுக்களுடன் நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன் , தனஞ்செயன் என்ற ஐந்து வாயுக்களும் சேர்ந்து தச வாயுக்கள் எனப்படும் பத்து வாயுக்கள் உள்ளன. இவைகளே ஞானேந்திரியங்கள் எனப்படும் கண், காது, மூக்கு, வாய், மெய் இயங்குவதற்கும், கர்மேந்திரியங்கள் எனப்படும் கால், கை, வாய், கருவாய், எருவாய் இயங்குவதற்கும் தேவையான வாயுக்களாக அமைகின்றன.

உள்ளே, வெளியேவென சென்று பரவி நிற்கும்  மூச்சுக்காற்றானது உடலின் அனைத்து அங்கங்களின் இயக்கத்திற்கும் காரணியாக அமைகிறது. சீருடன் பிராணாயாமப் பயிற்சி செய்து தேவையான வாயுக்களை உள்ளே நிறுத்தப்பழகினால், உடல் உறுப்புகள் நல்ல தேஜஸ் பெறும். தலை முடி கருத்திருக்கும். உடலின் உள்ளே ஜீவனாய் அமர்ந்திருக்கும் இறைவன் உடலை விட்டு நீங்கமாட்டான்.

திருமந்திரம்-568 
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே       

Sunday, March 10, 2019

அலைகள்

அலைகள் 

காற்றினில் கலந்துள
வானலை 'அவன்'
உயிரினுலுறைந்த மனவலை

பொருள்

தொலைக்காட்சி அல்லது வானொலி அலைவரிசையை சரியாக அமைப்பதன் மூலம் காற்றில் வரும் அலைகளை காட்சிகளாகவும், ஒலிகளாகவும் அறியலாம்.

ஆகாறு [பொறாமை], அவா [பேராசை], வெகுளி [வெகுண்டெழுதல்], இன்னாச்சொல் [பிறரை வேதனைப்படுத்தும் சொற்கள்] போன்றவற்றை நீக்கி மனவலைகளை சரியான நிலையில் வைத்தால், உன்  உயிரினில் வாழ்பவர் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.

சூரியன்

சூரியன் 

இரவுமில்லை
சூரியனுக்கு
உறக்கமுமில்லை

பொருள்:
பன்னிரண்டு மணி நேரத்தில் மாறி மாறி வரும் இரவு-பகலில், நிமிடத்திற்கு குறைந்தது பன்னிரண்டு முறை சுவாசிக்கும் காற்றின் உயிர் நிலை அறிந்து கொண்டால் இரவும் பகலும் ஒன்றுதான். விழிப்பும் உறக்கமும் ஒன்றுதான்.


திருமந்திரம்-577 
பன்னிரண் டானைக்குப்  பகல்இர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே
நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்று பன்னிரண்டு அங்குலம் உள்ளே சென்று திரும்புகிறது. 
பகல் என்பது வலது நாசி வழியாக, அதாவது சூரிய நாடி வழியாக சுவாசிப்பது. இரவு என்பது 
இடது நாசி வழியாக , அதாவது சந்திர நாடி வழியாக சுவாசிப்பது. இதை காற்றை சுவாசிக்கும் 
நாம் அறிந்திருக்கவில்லை. சுவாசிக்கும் காற்றின் செயலை அறிந்து, காற்றை அக்னி நாடியான 
சுழுமுனை நாடி வழியாக செலுத்த வல்லவர்களுக்கு, சுவாசத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் புருவ நெற்றியில் 
இருக்கும் சுழுமுனையில் இறைநிலையில் கலந்துவிடும். 

Saturday, March 9, 2019

தெளிவு

தெளிவு  

பேரின்பம்
ஒளிரும் 'குரு'
அரவணைத்தால்


பொருள்: 
அறிவு நிலை மிஞ்சிய நடப்புகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. நல்ல உறுதுணை இருந்தால் மட்டுமே 'அவன்' உறையும்  பாதை அறிந்து கொண்டு பேரின்ப நிலை அடையலாம். குரு ஒருவரே நம்மை வழி நடத்த வல்லவர்.

திருமந்திரம்-139

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
    
                                                  

நம் அறிவு நிலையில் தெளிவு பிறக்க வேண்டுமானால் முதலில் நமக்கு வீடு பேரடைய  நல் வழி காட்டக்கூடிய குரு தேவை.

நல்லதொரு குரு கிடைத்த பின்னர், அவருடைய திருமேனியை தினம் தோறும் தரிசிக்க வேண்டும். அவருடைய பெயரை மந்திரமாய் உச்சரிக்க வேண்டும். அவருடைய அருளுரைகளை கேட்க வேண்டும். எப்பொழுதும் அவருடைய திரு உருவத்தை சிந்தித்திருத்தல் வேண்டும்.

*** *** ***

Wednesday, March 6, 2019

இரசவாதம்


இரசவாதம் 

இறை நிலை
விவாதம்
இரசவாதம்







இரசவாதம் செய்யும் ஆற்றல் இருந்தால் செம்பை பொன்னாக்கலாம்; இறவா நிலை பெறலாம் என்ற ஆராய்ச்சி நீண்ட காலம் இருந்திருக்கிறது. சித்தர்களுக்கு இரசவாதம் சாத்தியமே என்று படித்திருக்கிறோம்.

திருமந்திரம்-2054

பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.

இரசவாதம் தொட்டதெல்லாம் போன். குரு தொட்டவரெல்லாம், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நீங்கி சிவனடி சேர்வார்கள்.

அணுப்பிளவு, அணுத்தரிப்பு நிகழ்வுகளில் ஒரு தனிமம் வேறு வேறு  தனிமங்களாக மாறுவதை அறிந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, யுரேனியம்-235  தனிமம் அணுப்பிளவின் போது பேரியம்-141 மற்றும் க்ரிப்டன்-92  தனிமங்களாக மாறுகிறது. ஆயினும் செம்பை பொன்னாக்கும் கலை அறிவியலில் இன்னும் அறியப்படவில்லை.

தனிமத்தின் உட்பொருளாம், பேராற்றலின் கருவே  இறை நிலை. இந்த பரம அணுவும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை

*** *** ***

Saturday, March 2, 2019

காலம்

காலம்

யுகங்கள் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் என்ற கருத்தை தொடர்ந்து செல்வதுதான்  என்னுடைய நோக்கம். [நட்புக்கரம் நீட்டுபவர்களுக்கு என் வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறேன்.]

4 யுகங்கள் 

1. சத்ய அல்லது கிருதா
2. திரேதா
3. துவாபர
4. கலி

ஒவ்வொரு யுகமும் வாழ்நாள் கொண்டவை. இவை தேவ ஆண்டுகளில் கணக்கிடப்படுகிறது.

360 மனித ஆண்டுகள் = 1 தேவ ஆண்டு

புரிதலுக்காக: ராமாயணம், திரேதா யுகத்தில் கடந்து சென்றது. மகா பாரதம் துவாபர யுகத்தின் இறுதியில் முடிந்து விட்டது. கண்ணனின் மறைவில், 18 02 3102 [BC], நாம் வாழ்ந்து கொண்டிருக்கும், கலி யுகம் பிறக்கிறது.

துவாபர யுகம் - 2400 தேவ ஆண்டுகள். அதாவது, 864,000 மனித ஆண்டுகள்.

அதாவது, ராமாயணத்துக்கும் மகா பாரதத்துக்கும் இடையில் தோராயமாக 864,000 மனித ஆண்டுகள் உள்ளது.

ராமாயணம் 7323 [BC] காலகட்டமெனவும், குருக்ஷேத்திர போர் 3137 [BC] நடந்ததெனவும் நாம் படித்துக்கொண்டிருக்கிறோம், மனித ஆண்டு கணக்கீடுகளில்.

யாராவது விளக்க முடியுமா?

Omnipresence:

https://physics-astronomyblog.blogspot.com/2019/01/a-new-theory-on-time-indicates-present.html?fbclid=IwAR0GnuU06Zd5t8nvKthwv5kR5otCk1g2vOC_LON9yfyt6zQVFilZglsfYak

Time Reversal:

https://physics-astronomyblog.blogspot.com/2019/03/breaking-scientists-have-reversed-time.html

https://physics-astronomyblog.blogspot.com/2019/03/physicists-send-particles-of-light-into.html

Monday, February 25, 2019

அணுத்துகள்

அணுத்துகள் 

நானசைந்தால் 
அசையும் 
அகிலமெல்லாமே 




' நீ பாத்தே.. '

'சாமிய நான் பாக்கல. ஆனா, ஒரு பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாதுங்கற அறிவியல் உண்மைய நீ நம்பித்தானே ஆகணும்.'

The law of conservation of mass states that mass in an isolated system is neither created nor destroyed by chemical reactions or physical transformations. According to the law of conservation of mass, the mass of the products in a chemical reaction must equal the mass of the reactants.

'ஒரு பொருளை இன்னொன்றாக மாற்றலாமே தவிர, எதையும் ஆக்கவும், அழிக்கவும் நம்மால் முடியாதுன்னா, ஆக்கியது யார், முழு முதற்பொருள் என்ன?'

'அணு'

அணுவுள் அவனும் அவன்உள் அணுவும் 
கணுவற நின்ற கலப்பது உணரார் 
இணைஇலி   ஈசன் அவன் எங்குமாகித் 
தணிவர நின்றான் சராசரந் தானே.
                                                                - திருமந்திரம் 2010

அசையும், அசையாப் பொருட்களென எங்கும் நீக்கமற  திகழும் இணையற்ற இறைவன், அணுவுக்குள் அவனும், அவனுக்குள் அணுவுமாய்  நிற்கிறான்.

அணுவின் ஆற்றலை சொல்லவும் வேண்டுமோ. இன்று உலகையே அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பது  அணு குண்டு என்பது நிதர்சனமான உண்மை. 

யுரேனியம் என்னும் தனிமத்தின் அணுவில் உள்ள ஆற்றல் தான் அணு குண்டாகவும், அணுமின் உற்பத்திக்கு  எரிபொருளாகவும் உள்ளது.

எங்கும், எதிலும் 'அவன்'  என்றால்.. 'நான்' யார்  என்ற கேள்வி வருகிறதல்லவா?

'உனக்குள் ஜீவனாய் உறைபவனும் அவனே!' 

அணுவினுக்குள் அணுவான  உன்னுள் உறையும் அந்த ஜீவனின் அளவை அறுதியிட்டு சொல்கிறார் திருமூலர்.

மேவிய சீவன் வடிவது சொல்லிடில் 
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு  
மேவிய கூறது ஆயிரம் ஆயினால் 
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.
                                                                   - திருமந்திரம் 2011

பசுவின் உரோமம் ஒன்றினை ஒரு லட்சம் பாகமாக கூறிட்டால், லட்சத்தில் ஒரு பாகம் ஜீவனின் அளவாகும்.

'நீ உயிருடன் உள்ளவரை ஜீவனுள்ளவன்; உன்னுள் உறைபவன் இறைவன்.'

'இனிமேலும், 'நீ பாத்தே'-ன்னு கேப்பே?'








கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...