காமமும் நாணும் உயிர் காவும்?
5 ஏப்ரல் 2023 செய்தி:
பெண்கள் கிளாமராக உடை அணிந்தால்.. சீண்டி விடுவீர்களா? பெயில் வழக்கில் விளாசிய கேரளா ஹைகோர்ட்!
அன்று முதல் இன்றுவரை இதே கதை.காமம்.
இது தீராத நோய். இந்த தீராத நோய் பிறப்பிலிருந்தே வருகிறது. பன்னிரண்டு வயது வரை இல்லாத நோய், மெதுவாக வளர்பிறை போல் வளர்ந்து, வயதான காலத்தில் தேய்கிறது. சிலருக்கு மனதின் எச்சங்களால் இறுதி மூச்சு வரை இந்நோய் தொடர்கிறது.
'ஒரு நெல் உமியை தூக்கும் வலிமை இருந்தால், அதனை பெண்ணை சுகிப்பதில்தான் ஆணின் எண்ணம் இருக்கும்'. இது படைப்பின் அதிசயம் அல்லது ரகசியம். மஹாபாரதத்தில் பாண்டுவின் கதையை அறிந்திருப்பீர்கள். 'பெண்ணுடன் கலவியில் ஈடுபட்டால் தலை வெடித்து உயிர் போய்விடும்' - என்ற சாபம் இருப்பது தெரிந்தும் கலவியில் கலந்து இறந்தான் பாண்டு.
மேலே குறிப்பிட்ட இன்றைய செய்தியின் சீண்டல் நாயகனுக்கு வயது 74. அதிலும் ஒரு பெண் தலித் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பெண் என்ற ஒரு தகுதிதான் முக்கியமே தவிர அது தலித் பெண்ணா, பருவம் அடையா சிறு பெண்ணா, கீழ் சாதியா, மேல் சாதியா என்றெல்லாம் பேதம் பார்ப்பது கிடையாது ஆண்கள்.
ஆன்மீக ரீதியாக இதனை கொஞ்சம் ஆய்வு செய்து பார்ப்போம்.
காமம் என்பது தாயின் வயிற்றில் உயிர் உருவாகிய கணமே உடலுக்கு கிடைத்து விடுகிறது.
இறைவன் உயிரை படைக்கையில்,
'விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு' வருகிறார்.
ஆகாயத்திலிருந்து வந்ததால் முதலில் வானத்தின் ஐந்து பண்புகளான,
காமம், குரோதம், லோபம், மதம் மற்றும் மாச்சரியம் புது உடலுக்கு கிடைத்துவிடுகிறது.
காமம் இரு பாலாருக்கும் சமம். ஆனால், சிலருக்கு மட்டும் ஏன் காமம் நிலை தடுமாற வைக்கிறது?
இங்கே நாம் இறைவன் ஆதியில் உலகில் தோன்றியதை அறிய வேண்டியது அவசியமாகிறது.
'ஒன்றவன் தானே' என்று முதலில் ஒன்றாக தோன்றும்போது நாத வடிவாக தோன்றுகிறான். நாதத்தின் ஒலி ஓம் எனும் ஓங்காரம். இந்த ஓங்காரம் ஞானத்தை குறிக்கிறது.
'இரண்டவன் இன்னருள்' எனும்போது நாதத்தினுள்ளே, சக்தியாக ஒளி தோன்றுகிறது. இந்த ஒளி கிரியா சக்தியான விந்துவை குறிக்கிறது.
'நின்றனன் மூன்றினுள்' - நாதமும் ஒளியாக நிற்கும் பெருஞ்ஜோதியில், இச்சா சக்தி என்னும் மாயையும் கலந்து நிற்கிறது.
இறையின் அம்சமே மானிடம் என்னும்போது, அவனிடம் இம்மூன்று குணங்களும் இயல்பாகவே அமைந்துவிடுகிறது.
காமத்தின் வீரியத்தை விந்துவும், இச்சா சக்தியுமே தீர்மானிக்கிறது. உடல் இனப்பெருக்கத்திற்கான பருவ நிலை எய்தியவுடன் வித்தினை விளைவிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து உற்பத்தி ஆகும் வித்து தானாக கழிவதும் உண்டு; இச்சா சக்தியின் உந்துதலால் தன்முனைப்பில் விரையமாவதும் உண்டு; தகுந்த எதிர் பாலினம் கிடைக்கும் போது இனப்பெருக்கம் நடப்பதும் உண்டு.
திருமந்திரம் 1954
காலம் கடந்தான் காண்விந்து செற்றவன்
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன்
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை
காலின் கண் வந்த கலப்பறியாரே.
விந்துவை வென்றவன் காலத்தை வென்று நீண்ட காலம் வாழலாம். விந்து வென்றால் விரைவில் அழிவு வந்து சேரும். விந்து வென்று பெண்ணின் இன்பம் அடைவோர், அவளிடம் இருந்து வரும் காம வாயுவானது, தன்னுடைய உயிர் வாயுவில் கலந்து அழிவு நிகழ்வதை அறிந்திருக்க மாட்டார்கள்.
காமத்தின் சமன நிலை தடுமாறும்போதுதான் ஆகாயத்தின் மற்ற நான்கு குணங்களான குரோதம், லோபம், மதம், மாச்சரியம் முன் நிற்கின்றன.
விந்து மற்றும் இச்சா சக்தியின் உந்துதலால் அவன் அவளைத்தொட, விருப்பமற்ற அவள் குரோதத்துடன் கேரளா ஹைகோர்ட் வாசலில் நியாயம் தேடுகிறாள்.
திருக்குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
நோனா உடம்பின் அகத்து.
உடலின் உள்ளே காமமும், நாணமும் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு என் உயிரை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது.
இனியும் இதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்.
பொறுத்துக்கொள்ள முடியலன்னா போ. ஏதாவது செய். எங்கேயாவது கை வை. கோர்ட், கேசுன்னு அலை. யார் வேண்டாம்னு சொன்னாங்க?
*** *** ***
No comments:
Post a Comment