ஆஸ்திரேலியா பட்ஜெட் 2020
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா - அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத கேட்டேளா
'அய்ய.. பண்டிகை.. பண்டிகை..' - சுண்டு விரல் குதித்தது.
'பண்டிகைக்கு என்ன பண்றது' - மோதிர விரல் கேட்டது.
'இனிப்பு செய்யணும்' - நடு விரல் சொன்னது.
'பணத்துக்கு எங்கே போறது? - ஆள்காட்டி விரல் சோகமாய் கேட்டது.
'நானிருக்கிறேன், எஜமானப்பன்' - கட்டை விரல் தம்ஸப் காட்டியது.
இரண்டாம் உலகப்போரிற்கு பின் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சரிவை சரி கட்டும், பற்றாக்குறை பட்ஜெட் 2020 இது. ஆனால், பொருளாதாரத்தை நிமிர்த்தும் எல்லா அம்சங்களும் அதில் அடக்கம்.
JOBKEEPER, JOBSEEKER என்று மக்களிடம் பணப்புழக்கம் இருப்பதை உறுதி செய்த அதே அரசு, பட்ஜெட்டில் மீண்டும் சலுகைகள் வழங்கி உள்ளது:
வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டி,
1. தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழிலாளர்கள் எடுக்க ஊக்கத்தொகை.
2. வருமான வரி கணிசமான அளவில் குறைப்பு, அதுவும் நடப்பாண்டில் இருந்தே.
இத்தோடு நிற்காமல்,
நிறுவனம் கடந்த ஆண்டுகளில் நஷ்டத்தில் இயங்குகிறதா? அதற்கு முந்தைய ஆண்டுகளில் வரி செலுத்தி இருந்தால், நஷ்டத்தை கணக்கில் கொண்டு, முன்னர் கட்டிய வட்டியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்.
நான் நினைத்துக்கூட பார்க்காத கோணம் இது, பல வருடங்களுக்கு முன்னர் கட்டிய வரியை திரும்ப பெறுவது, கடலில் கரைத்த உப்பு, மீண்டும் அதே உப்பாக, மக்கள் கைகளில்.
ஆஸ்திரேலியா - எஜமானப்பன்!
நம்மூர்ல என்னடான்னா, மாநிலங்களுக்கு தர வேண்டிய GST நிலுவைத்தொகையே, மத்திய அரசிடம் இழுவைத்தொகையாக உள்ளது.
இருபது லட்சம் கோடி அறிவிப்பு, பொருளாதாரத்தை நிமிர்த்த. எங்கே போச்சுன்னு, யாருக்கும் தெரியாது, நிதிமந்திரி உட்பட.
அரசாட்சி செய்பவர்கள் மக்களை காப்பது நல்லது. மக்களும் அரசன் வழி நிற்பர். அத்தன்மையில்லாமல், தானே அனைத்துலக செல்வங்களையும் பிறரிடம் இருந்து பறித்து, தன்னகப்படுத்த போராடுவது, இலக்கில்லாமல் பாயும் புலியின் செயலைப் போன்றதே.
வேந்தன் உலகை மிகநன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்
பேர்ந்திவ் வுலகைப் பிறர்கொள்ளத் தாம்கொள்ளப்
பாய்ந்த புலியன்ன பாவகத் தானே.
- திருமந்திரம் 245
No comments:
Post a Comment