Saturday, May 9, 2020

காதல் செய்வீர்

காதல் செய்வீர்


கண்ணிலே மின்னும் காதலே 
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே







'இவ்வளவு கேவலமானவனா இருப்பேன்னு எனக்கு தெரியாமப்போயிருச்சு. இனிமே என்னப்பாக்க இந்தப்பக்கம் வராதே' - என்று தன்னுடைய தோழி அவனைப்பார்த்து புன்னகைத்ததற்காக ஊடிக்கொண்டே,  இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்தாள் காவ்யா.

பெண்களின் வார்த்தைகளின்   அர்த்தமும்  வேறுதான்,  அகராதியும் வேறுதான்.

புறத்தில் தோன்றும் காட்சிகளால், உள்ளத்தில்  தோன்றும்  அன்பின் வெளிப்பாடே, நட்பாகவும், பந்தமாகவும், பாசமாகவும், கருணையாகவும், காதலாகவும்  பரிணமிக்கிறது.

அந்த அன்பே  அகத்தில் தவத்தின் வெளிப்பாடாக தோன்றும்போது, பக்தியாகி, சக்தி நிலை தூண்டப்பெற்று பேரின்பத்தையம், சித்திகளையும்  தருகிறது.


உறங்கும்            அளவின்            மனோன்மணி வந்து
கறங்கு                 வளைக்கைக்  கழுத்தாரப்        புல்லிப்
பிறங்கொளித்  தம்பலம்            வாயில்                 உமிழ்ந்திட்டு
உறங்கல்             ஐயாஎன்று        உபாயம்              செய்தாளே.
                                                                                                         - திருமந்திரம் 1107

சீரிய தவ உறக்கத்தில், ஆக்கிணை சக்கரத்தில் வீற்றிருக்கும் அன்னை பராசக்தி, வளைக்கர  நாதத்தோடு கழுத்தினை  இறுக்கி அணைத்து, உள்நாக்கின்  மேலண்ணத்தில் சக்தியின் ஆதாரமான அமிழ்தம் ஊறச்செய்து, தொடர்ந்து தவ உறக்கத்தில் இருக்கும் வழிதனை  காட்டி நின்றாள். 

2 comments:

  1. இத்திருமந்திரம் இவ்வாறு சிந்திக்க தூண்டியது

    அம்பாளை நாம் தாயாக தெய்வமாக பழகி விட்டோம்
    ஆனால் நம் பிராணனை இயங்கும் மாபெரும் சக்தியை காதலியா உணர்வதே மாபெரும் புரட்சியா இருக்கு.

    அதுவும் இறைவனை இறைவியாய் கணவன் மனைவியாய் உருவகப்படுத்தி வணங்கி விட்ட நமக்கு

    நம் ஆன்மாவில் அணுவுக்கணுவாய் உள்ளவனை மனதால் கொள்ளவும் தயக்கமாய் ஒரு நெருடல்

    இராமகிருஷ்ண பரமஹம்சரால் விட முடியாத உருவ வழிபாடுகளை சாமான்யனால் உதறுவது...

    சாத்தியமே சத்தியம்

    ReplyDelete
    Replies
    1. எண்ணங்களற்ற நிலையில் மனமும், உடலும் ஓய்வு நிலை கொள்வது தவ உறக்கம். இந்த நிலையில், விழிப்புறும் சக்தி நிலை, வாயில் அமிழ்தம் ஊற செய்கிறது.

      இறைவன், இறைவி இவர்களின் உறவு நிலை என்பதெல்லாம் நம் புரிதலுக்கான அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டால், மனதில் தோன்றும் மயக்க நிலை மாறிவிடும்.

      Delete

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...