நிசப்தம்
அமைதியான
நதியினிலே
ஓடம்
பொருள்:
நிசப்தம்...
கிரிக்கெட் உலகக்கோப்பையின் கடைசிப்பந்து.

பௌலரின் கையிலிருந்து 120 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டு, பிட்ச்சில் பட்டு எழுகிறது.
கடைசி பந்தில், தேவை மூன்று ஓட்டங்கள், வெற்றி பெற.
அதே பந்தில், மட்டை ஆட்டக்காரர் ஆட்டமிழந்தால் ஃபீல்டிங் அணிக்கு வெற்றி.
சுமார், 25,000 பார்வையாளர்கள் கொண்ட அரங்கு நிறைந்த விளையாட்டரங்கத்தில், ஒருவரின் இதய ஒலியை அடுத்தவர் கேட்கும் அளவிற்கு நிசப்தம்.

*** ***
சுற்றிலும், கண்களை சுழற்றி ஒருமுறை பார்த்துக்கொண்டாள், செல்வி. மனத்தின் படபடப்பு கொஞ்சமும் குறைந்த பாடில்லை. பக்கத்தில் நின்றிருந்த, சிவாவை பரிதாபமாக பார்த்தாள்.
'நடுவில் என்னை சோதித்து விட மாட்டாயே'- அவள் விரிந்த விழிகளில் கேள்வி இருந்தது.
'போர்டிங் கால் இது.. எந்திரி போகலாம்'- சிவா அன்பாக சொன்னது கூட, எரிச்சலாக பேசுவது போல் இருந்தது அவளுக்கு.
எவ்வளவோ நாட்கள் ஆசைப்பட்டு, அதற்கான பிளான் போட்டு, சிவாவை வற்புறுத்தி இந்த விமான பயணத்திற்கு அச்சாரம் போட்ட போது, இருந்த வேகம் தொலைந்து போயிருந்தது செல்விக்கு.
உணர்வுகள் தீவிரமாக ஒரு செயலை செய்ய எண்ணும்போதே அந்த செயலின் பலனை அனுபவித்து விடும். உடல் உணரும் முன்பே, உள்ளம் உணர்வுகள் மூலமாக அனுபவத்தை தந்து விடும். தேவையில்லாத பயமும், பதட்டம் மட்டுமே மிஞ்சும் செயலில்.
வாழ்க்கையே ஒரு பொம்மலாட்டம் தானே!

கோடான கோடி மக்கள், வைத்த கண் வாங்காமல், சீறி எழுந்த பந்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்வதை விட, மூச்சு விட மறந்திருந்தார்கள்.
ஆண்டவன் மட்டும் அனிச்சை செயல்களை படைக்காமல் விட்டிருந்தால், எத்தனை பேர் பிழைத்திருப்போமோ?
நேராக நடு ஸ்டம்ப்பை வீழ்த்தி சென்றது, பந்து.
ஆரவாரம் ஒரு பக்கம்; ஆற்றாமை ஒரு பக்கம்.

கைகள் கோர்த்திருந்தது. பேச்சை மறந்திருந்தார்கள்.
'எவ்வளவோ பேச நெனச்சிருந்தேன். ஒண்ணுமே பேச தோணல'- செல்வியின் பேச்சை கண்கள் மூடி ரசித்துக்கொண்டிருந்தான் சிவா.
வாய் பேச நினைத்ததெல்லாம், மனம் பேசிக்கொண்டிருக்குமோ?
பஞ்சு மெத்தை விரித்த மேகத்தின் மேல் மிதந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து, கிழக்கே உதிக்கும் சூரியன் செஞ்சுடர் வீசி, ஆரஞ்சு பந்தாய் எழுந்து கொண்டிருந்தது.
ஆனந்தம் ஒரு பக்கம்; இந்த கணம் நிலைக்கணுமே என்ற எண்ணம் ஒரு பக்கம்.

அத்தனை ஆரவாரமும், ஆற்றாமையும் ஒரு சேர, 'நோ பால்' சொன்ன நடுவரின் பக்கம் திரும்பியது. மூன்றாம் கண்ணை திறந்து, பௌலர் எல்லை கோட்டை தாண்டி பந்து வீசியது, 'ஸ்லோ மோஷன்' ஒளி பரப்பில் சென்று கொண்டிருந்தது.

மீண்டும் நிசப்தம்.
ஆட்டத்தின் உச்சம் உணர்வு பூர்வமாக முடிந்து விட்டது. இனி வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான்.

இருவரின் மனதிலும், உடலிலும் இனம் தெரியாத பரவசம். வாழ்வினில் இனி சேர நேர்ந்தாலும், சேரா விட்டாலும் நம் நட்பு மாறுவதற்கில்லை என்ற அன்பில் நிறைந்து நின்றார்கள்.

அமைதி அவர்களை முழுமையாக ஆட்கொண்டது.
உணர்வு பூர்வமாக அவர்கள் வாழ்ந்து விட்டார்கள்.
*** ***
ஆதியும், அந்தமுமாய் உள்ள இறை நிலை என்றும் நிசப்தத்தில்தான் உறைந்திருக்கிறது. அந்த நிசப்த நிலையைத்தான், 'ஆதியுள் அந்தம்' என திருமூலர் விளக்குகிறார்.
விளங்கு நிவிர்த்தாதி மேவும் அகராதி
வளங்கொள் உகார மகாரத்துள் விந்து
களங்கம்இல் நாதாந்தம் கண்ணின்உள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.

- திருமந்திரம்
பொதுப்பொருள் சொல்வதானால், ஓம் எனும் பிரணவ மந்திரமே நிசப்தத்தின் ஆணிவேர். உடலும், மனமும் ஒருங்கிணைந்து தவ நிலை கொள்ளும் நிசப்தத்தில் ஓங்கி ஒலித்திடும் இம்மந்திரம்.
அகாரம், உகாரம், மகாரம் இவற்றுள் ஆதியாய் நிற்பது அகாரம். இம்மூன்றுமே விந்துவில் அடங்கி நிற்கிறது. ஒலியும், ஒளியுமாக மூலாதாரத்தில் விளங்கும் (அ+உ+ம்) ஓம் எனும் பிரணவ மந்திரத்தை கண்களின் உட்புறமாக மனதால் பார்த்து, ஒலிக்கக்கேட்பீர்களானால், அதுவே ஆதியுள் அந்தம் ஆகும்.

No comments:
Post a Comment