எதிர்துருவங்கள்
காமம் என்பது பிறக்கும்போதே, உடலுக்குள் பொதிந்திருக்கும் நெருப்பு. மனிதப் பிறவி எடுத்த அனைவருக்கும் இது பொருந்தும்.
சமுதாய ஒழுக்க நெறிகளுக்கு கட்டுப்பட்டதல்ல, காமம். இதுதான் அடிப்படை, இதுதான் நிதர்சனமான உண்மை. எத்தனை வாத, விவாதம் செய்தாலும் இறுதியில் வாதம் செய்தவனும், எதிர்வாதம் செய்தவனும் சங்கமித்து ஒன்றிணைவது காமத்தில்தான்.
பஞ்சபூதங்களில் முதன்மையானது வானம். விண்ணிலிருந்து இறங்கி வரும் இறைவன், வானத்தில் தவழ்ந்திருக்கும் உயிருக்கு அதன் கர்ம வினைக்கேற்ப உடலைத் தருகிறான்.
வானத்தின் தன்மைகளாக உடல் பெறுவது, ஐந்து குணங்கள்:
காமம் - ஒன்றை அடையத் துடிக்கும் ஆசை
குரோதம் - பிடிக்காதவற்றை பழிவாங்குதல்
லோபம் - தன்னுடையது என்று இருகப்பற்றுதல்
மதம் - தன் கொள்கையில் தீவிரம்
மாச்சரியம் - மற்றவர்களின் மேல் பொறாமை
அகத்தியர் வானத்தின் தன்மைகளாக சொல்வதைக்கேளுங்கள்.
சௌமிய சாகரம் - 41
கூறாக ஆகாசக் கூறு தன்னை
குறியுடனே சொல்லுகிறேன் குணமாய்க் கேளு
நேராகக் குரோதமொடு லோபம் மோகம்
நிசமான வாச்சரிய மதமு மைந்து
ஊரான ஆதாரந் தன்னைப் பார்த்து
உத்தமனே தானாவாய் நின்றா யானால்
தேராக வாசியது தேறும் தேறும்
சிவபூதம் ஐந்து தொழிலிருத்தல் ஐந்து.
இவ்வைந்து தன்மையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பொதிந்திருக்கிறது.
உயிரணுவில் உறையும் காமமென்னும் பெருநெருப்பு, காந்த சக்தி கொண்டது. எதிர் காந்தத்தை எந்நேரமும், எந்த வயதிலும் கவரத் தவிக்கும் காரணம் இதுதான்.
இந்த கவர்ச்சியே எதிர்ப்பாலினத்தை என்ன விலை கொடுத்தாவது சேரத்துடிப்பது.
இது இயற்கை, மனித உடலுக்கு விதித்த விதி.
பண்பாடு, கலாச்சாரம் என்ற பெயரில் விதி மீறல்களுக்கு அதிகம் இரை ஆவது பெண்களே. மஹாபாரதமோ, இராமாயணமோ நடந்து முடிந்த சரித்திரப் புகழ் வாய்ந்த போர்களோ, இறுதியில் பெண்களே பலியாடுகளாக, காமத்தின் வடிகாலாக இருந்திருக்கிறார்கள்.
எனினும், பெண்ணின் உணர்வுகள், அவள் உடலின் தேவைகள் காலம் காலமாக புறம் தள்ளப்பட்டிருப்பது வரலாறு காட்டும் உண்மை.
ராமன், ராவணனைவிடக் கீழானவனாகிறான், கருவுற்ற சீதையை காட்டிற்கு அனுப்பியபோது.
புத்தனும் தன் அறிவில் மழுங்கிப்போகிறான், தன் இளம் மனைவியை தவிக்க விட்டு சென்றபோது.
தனக்கு சேவை செய்ய வந்த இளம் பெண்ணை, சுகம் தர இயலாத போதும், மணந்த ஈ.வெ.ரா.வும் பெண்ணுரிமைப் போரில் புறமுதுகிட்டு விடுகிறான்.
நடிகர் நெப்போலியனின் தந்தைப்பாசமும், அந்த திருதராஷ்ட்ரனின் தந்தைப் பாசத்திற்கு குறைந்தது அல்ல என்றாலும், நடந்ததென்னவோ ஒரு பெண்ணுக்கிழைத்த அநீதியே.
ஓஷோ:
"காமம் என்பது இயல்பானது என்பதினை மனதில் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவன் நிச்சயமாக காமத்தினை கடந்து செல்லமுடியும். ஆனால், அதனை அடக்குவதால் நிச்சயமாக கடக்க முடியாது. இப்படி அடக்கினால் அது வேறொரு வழியில் வெளிப்பட காத்துக்கொண்டிருக்கும். அப்படி அடக்குவது ஒன்று சமூகத்திற்கு மாறான ஒழுக்க கேட்டினை உருவாக்கும், அல்லது அதன் மீதான அதீத பைத்தியத்தினை உருவாக்கும். (இது எவ்வளவு பெரிய பேருண்மை இன்று கற்பழிப்புகள் அதிகரிப்பதற்கும், காமம் சார் திரைப்படங்களுக்கான வரவேற்பும் இந்த காரணத்தின் அடிப்படையில் அமைந்ததுதான்). நீங்கள் அதனைக்கடந்து செல்ல வேண்டும் என்றால் இயல்பாக அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுவே அதற்கான முதற் தகுதி!"
"அடிப்படையில் காமம் இறைவனால் கொடுக்கப்பட்ட புனிதமான ஒன்று, அதனை நாம் உயர்ந்த சக்தியாக மாற்றிக்கொள்ளவேண்டியது எமது கடமை. கடவுளால் கொடுக்கப்பட்ட அனைத்தும் புனிதமானவையே, இங்கு கடவுள் எனும் போது அது குறித்த ஒரு நபரினையோ, மத நம்பிக்கையினையோ குறிப்பதல்ல! இந்த பிரபஞ்சத்தின் முழு இருப்பையும் குறிக்கும்.காமத்தினை வெல்லவேண்டுமாயின்
காமத்தின் மீதான வெறுப்பினை இல்லாததாக்குங்கள்!"
To Read Full Blog :
*** *** *** *** ***
No comments:
Post a Comment