Tuesday, February 22, 2022

தமிழும்தான் காலி

 தமிழும்தான்  காலி 

காலி காலி 
மொத்தத்துல 
அவனும்தான் காலி


அப்படியே  தமிழும்தான்  காலி 

 


அரபிக்  குத்து 

எப்படியாவது இந்த பாடலை  புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னைத்  தொற்றிக்கொண்டது.

தமிழ் பாட்டுதானே! 

திருக்குறள், திருமந்திரம், போகர் பாடல்கள், பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சௌமிய சாகரம் படித்து  ஓரளவிற்கு என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தமிழை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். அப்பப்ப புறநானூறு கூட படிக்கிறேன், ஆனால் LKG, UKG  அளவுகூட புரிதல் இல்லை.

திரும்ப திரும்ப இந்த பாடலின் வரிகளை படித்த பின்புதான் தெரிந்தது. இது கற்காலத்திற்கு முற்பட்ட தமிழ் என்று. ஒருவேளை, குமரிக்கண்டம் கடலில் மூழ்காமல் போயிருந்தால் இந்த பாடலுக்கான அகராதி கிடைத்திருக்கலாம்.

அதுக்கு முந்தினதாம் இது:

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!

புறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE!
சங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி!

நன்றி: puliththiral blog 

அரபி, ஆங்கிலம், நவீன தமிழ் மற்றும் இவைகளின் கலவை. கூடவே வட நாட்டின் ஹோலி பண்டிகை வேறு.  

ஹலமிதி அபி வந்தாளே - அரபி + தமிழ் 

ஹோலி ஹோலி பக்கத்துல சிரிக்கும் ரங்கோலி - ஹிந்தி + தமிழ் 

ஓ க்யூட்டி நீ ஸ்வீட்டி  உன் பியூட்டி  அதில் மாட்டி  - ஆங்கிலம் + தமிழ் 

தமிழைத்தேடினேன்.

என் வயசுக்குள்ளே முதல் மழையா ஃபீல வச்சானே.

ரொம்பவுமே ஃபீல் ஆயிட்டேன், இந்த வரிகளை படிச்சதும். என்னமா எழுதி இருக்காங்க.

கவியரசு கண்ணதாசன், வாலி, பட்டுக்கோட்டையார் கோட்டை விட்டதை புடிச்சிட்டாங்க.

தமிழில் உள்ள 51 சிறப்பெழுத்துக்களை தவிர்த்து சுத்த தமிழில் எழுதுவோம் என்று தமிழில் எழுதும்போது நாம் எடுக்கும் முயற்சி என்ன? இப்படிப்பட்ட தமிழ் - ஆங்கிலம் - அரபி கலவையில் தமிழுக்கு சிறப்பு செய்யும் கூட்டம் என்ன?

இந்த சிறப்பெழுத்துக்கள் தமிழ் அல்ல என்று சொல்பவர்களால், இன்றைய தமிழக முதல்வரின் பெயரை தமிழில் எழுத முடியுமா, உச்சரிப்பு மாறாமல்.

முடியாது.

இந்த 51 தமிழின் சிறப்பெழுத்துக்கள் நம் உடலில் உள்ள ஆறு ஆதார சக்கரங்களில், தாமரை இதழ்களாக இருக்கிறது.

ஆறந்த முங்கூடி யாகும் உடம்பினிற்
கூறிய வாதார மற்றுங் குறிக்கொண்மின்
ஆறிய அக்கரம் ஐம்பதின் மேலாக
ஊறிய வாதாரத் தோரெழுத் தாமே.

                                                                                                - திருமந்திரம் 1680



Wednesday, February 9, 2022

ஒன்றும் ஒன்றும் ஒன்று

ஒன்றும் ஒன்றும் ஒன்று 

நீ தருவாயோ நான் தருவேனோ 
யார் தந்த போதும் 
நீயும் நானும் வேறல்ல..

    


கலப்பினத்தமிழ் 

கலப்பின மாடுகள் அதிக பால் தருமே தவிர, நாட்டு பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்ட சத்துகள் இருக்காது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நாம் அனைவரும் பகிர்ந்து கொண்ட செய்தி இது.

இதே வழியில்,  படிப்படியாக நம் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வந்து, தமிழர்களை வட்டாரத்தமிழ்வாசிகளாக்கி விட்டார்கள்.

கோவைத்தமிழ், மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், சென்னைத்தமிழ் மற்றும் வெளி நாடுகளைப்பொறுத்த மட்டில் நாட்டுக்கொரு வட்டார வழக்கு.

இதில் சென்னைத்தமிழ் அந்த மண்வாசனை உள்ளவர்களுக்கு மட்டும் எளிது.

'சார்.. தியாகராஜ பாகவதர் காலத்திய படங்களில் பேசுற தமிழ் சுத்தமா புரியாது'

'மனோகரா படத்தில் கண்ணாம்பா சூப்பரா வசனம் பேசுவாங்க. ஆனா, எனக்குதான் ஒண்ணுமே புரியாது'

' எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்கள் ஓரளவு புரியுது. எல்லாம் பாட்டுக்காக பாப்போம்'

'அப்பா.. பாட்ட மாத்துங்க. ஒரே அழுகை அழுகையா வருது, இந்த பாட்ட கேட்டா' - இது புதிய தலைமுறை.

இப்ப எல்லாம்,  'ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா' -  இதுதான் தமிழில் டாப் டக்கர் பாட்டு.

வழக்குத்தமிழில் பேசும்போது  பாதிக்குமேல் ஆங்கிலத்தில் பேசினாலோ அல்லது எழுதும்போது ஆங்கிலம் கலந்து எழுதினாலோ மட்டுமே சொல்ல வந்த  கருத்தை எளிதில் சொல்ல  முடிகிறது.

ரொம்ப காலமா இதே சிந்தனை. எங்கே, நம்மை கலப்பினத்தமிழுக்கு மாற்றினார்கள் என்று.

எனக்கு மூன்றாம் வகுப்பில்தான் ஆங்கிலம் அறிமுகம், அதாவது ஒன்பதாவது வயதில். இது அரை நூற்றாண்டிற்கு முந்தைய நிலை. இன்றைக்கு, கருவில் உள்ள குழந்தைக்கு, பள்ளியில் முதல் மாணவனாக வர பயிற்சி. சொல்லவே வேண்டாம், இவர்கள்தான்,  தமிழுக்கு ஆதரவு தந்து தமிழில் படிக்க வைப்பார்கள் என்று.

எனக்கு இலக்கணம், செய்யுள் பாடங்கள் சொல்லி தந்தார்கள். உரை நடையிலும், செய்யுள்களிலும் வரும் இலக்கண மரபுகளை அறிமுகப்படுத்தி இருந்தார்கள். தமிழ் கற்பதற்கான ஆர்வம் ஏற்பட வழி இருந்தது.

இரண்டாம் வகுப்பு செல்லும்போது, என்னால் 'கன்னித்தீவு' படிக்க முடிந்தது.

என்னுடைய இந்த எழுத்துக்கள் எல்லாம் அன்றைக்கு எனக்கு கிடைத்த தமிழ் ஆசிரியர்களின் ஆசீர்வாதமே. எழுத்துப்பிழைகளை தவிர்க்க முடிவதும் எனக்கு கிடைத்த வரமே.

நான் பெற்ற பெரும்பாக்கியம், திருமந்திரம் போன்ற தெய்வத்திருமறைதனை, என் அறிவுநிலைக்கு ஏற்ப புரிந்து எழுத முடிவது.

திருமந்திரம் என்பது ஒவ்வொருவரின் அறிவு நிலைக்கு ஏற்ப பொருள் கொடுக்கும் அற்புதமான தமிழ்ப்புதையல். இதனை படிக்கவோ, புரிந்து கொள்ள எண்ணுவதோ, புரிந்து மற்றவர்களுக்கு சொல்வதோ அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியமே.

இதோ ஒரு எடுத்துக்காட்டு:

'நான் யார்?' என்று எண்ணும்போது, உடல் மற்றும் உயிர் என்பது நான் என்னும் இரண்டான உண்மை. உடலோடு உயிரும், உயிரோடு உடலும் ஒன்றி இருப்பதைக்கண்டு, இவை இரண்டும் ஒன்றுதான் என்று அறிகிறேன். நான் உடல்  என்ற நினைவில் உள்ள மனதினை, மலராக உயிருக்கு சமர்ப்பித்தால், உடலும், உயிரும் ஒன்றென்று ஆகிவிடும்.

தான்என்று  அவன்என்று இரண்டாகும் தத்துவம் 
தான்என்று  அவன்என்று இரண்டும் தனிற்கண்டு 
தான்என்று  பூவை அவன்அடி சாத்தினால் 
நான்என்ற  அவன்என்கை நல்லது ஒன்றன்றே.  

                                                                                       - திருமந்திரம் 1607

இப்ப பாருங்க ஒன்றும், ஒன்றும் ஒன்றாகிவிட்டது.

கவியரசர் கண்ணதாசன் எதை எண்ணி இந்த திரைப்பாடலை எழுதினாரோ தெரியாது. உடலுக்கும், உயிருக்குமான பாடலாக  பார்த்தால் அப்படியே ஒன்றுடன் ஒன்றாகி ஒன்றிவிட்டது. 

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல.

மேலும் படிக்க..

Thursday, February 3, 2022

காலத்தை வென்றவன்

காலத்தை வென்றவன் 
நீ.. 
காவியமானவன் 
நீ..


'டாக்டர், எப்படி சொல்றீங்க நான் உயிருடன் இல்லை என்று?' - ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வந்த டாக்டரை கேட்கிறேன்.

'இதோ உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். பேசுகிறேன். உங்களை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்'

டாக்டர் என் இருக்கையை  பார்த்துக்கொண்டிருந்தார், பேசவில்லை. அவர் பேசியதாக நினைத்துக்கொண்டு, அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

நான் உயிருடன் இருப்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும். விபத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் அமர்ந்திருக்கும் இருக்கையில், என் மீதே யாரோ அமர்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. மெதுவாக வெளியே வருகிறேன்.

ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே வரும் என் உடலைப்பார்க்கிறேன்.

யார் யாரோ,  என் உடலைப்பார்த்து அழுகிறார்கள். எல்லாரும் பனிமூட்டத்தின் இடையில்  இருப்பது போல் தோன்றுகிறார்கள்.

செத்துத்தான் போய்விட்டேன் போலிருக்கிறது.

அப்படியானால், இப்பொழுது நான் யார்?

உயிர் - வெறும் ஆன்மா.

உடலில் இருக்கும்வரை என்னால் உணர முடியாத ஆன்மா.

இந்நாள் வரைக்கும், ஏன் என்னால் உயிர் இருப்பதை அறிந்து அதன் தன்மையை உணர்ந்து  கொள்ள முடியவில்லை. 

அது எல்லோருக்கும் சாத்தியமில்லை.

ஏன் சாத்தியமில்லை?

உயிர் உடலில் இருக்கும்வரை அதனை மூன்று வகையான  இருள் சூழ்ந்திருக்கிறது.

பரிந்துபார் முதற்பாழில் பூதபூதம் புரியாதவன்தான் வாதியாவான் 
எரிந்துபாரண்டன்பாழ்தேதிட்டாக்க லெட்டெட்டு மறுபத்துநாலாஞ் சித்தன்
முரிந்துபார் மூணாம்பாழ்   புக்கினாக்கால் மூச்சான வாதுபது பிரந்ததானம் 
கரிந்துபார் நால்பரிஞ்ச போகுவிடங்கண்டால் எமனடுங்கிப்போவான் இடம்காட்டிடாமே.

                                                                                                                           - 142 போகர் 7000

1. பஞ்ச பூதங்கள் என சொல்லப்படும், நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் இவற்றால் ஆன உடலில் உள்ள ஐம்புலன்களின் தன்மைதான்  முதல் இருட்டு.

- இதனை புரிந்து கொள்ள இயலாதவர்கள் கண்டதைப்பேசித் திரிவார்கள்.

2. அறிவு நிலை. கற்று, கேட்டு, அறிந்து, உணர்ந்து, விவாதித்து பெற்ற  அறிவு நிலை இரண்டாம் இருள் நிலை. அறிவே இருளாக மாறிவிட்டது ஆன்மீகத்தில்.

- 64 கலைகள் கற்றிருந்தாலும் அவற்றை எரித்துவிட்டால் சித்தர் நிலை எய்தலாம்.

3. காற்று. சுவாசத்தின் போது உள்ளிழுக்கும் காற்றானது பத்து வகைகளாக பிரிக்கப்பட்டு, உடலில் உள்ள அனைத்து சிற்றறைகளுக்கும் சீராக சென்றிருப்பது  மூன்றாம் பாழ். 

- காற்று  உடலில் சமனத்தன்மை அற்றிருப்பதே அனைத்து உடல் உபாதைகளுக்கும் பிரதான காரணம். 

இம்மூன்று இருட்டினையும் உடலில் உயிர் உள்ளபோதே கடக்க முடிந்தால், அதுவே உயிர் இருக்கும் நிலையை அறிய செய்துவிடும். எமனையும் வெல்ல முடியும்.

முதல் இரண்டு இருட்டு நிலையை நாம் தியானத்தின் மூலம் கடக்க முடியும் என்றால், காற்றான  மூன்றாம் இருளை பிராணாயாமப் பயிற்சியினால் வெல்ல முடியும்.

காற்று என்றால் என்னவென்று பார்ப்போம்.

கால் - காற்று 

பாம்பறியுமாம் பாம்பின் கால். 

பாம்புக்கு காது என்று தனியாக அங்கம் இல்லை. கண்ணே காதாக செயல்படுகிறது. அதனால் பாம்பிற்கு  இன்னொரு பெயர் கட்செவி.  

ஒரு பாம்பின் சீறும் மூச்சுக்காற்றை மற்றொரு பாம்பு அறிந்து கொள்ளும் என்பதே பாம்பறியுமாம் பாம்பின் கால்.

காலன்  - காற்றை ஆள்பவன், எமன்.

மனிதனுக்கு அளவிடப்பட்ட காற்றின் அளவு முடிந்தவுடன், உடலில் இருந்து உயிரை எடுத்துக்கொள்பவன்.

கால காலன் - காற்றினுள் காற்றாய் இருப்பவன், இறைவன்.

மனித மூச்சினில் பிராணனாய் இருந்து உயிர்களுக்கு அருள்பவன்.

உள்நின்று ஒளிரும் உளவாய் பிராணனும் 
விண்நின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும் 
மண்நின்று இயங்கும் வாயுவுமாய் நிற்கும் 
கண்நின்று இயங்கும் கருத்தவன் தானே.

                                                                                                                    - திருமந்திரம் 3040

மண்ணிலே காற்றாய் நிற்பவன் இறைவன். அவ்விறைவனே கதிரவனாகவும், உடலுக்குள் இயங்கும் பிராணனாகவும் இருக்கிறான்.

காலம் - காற்றினை மூச்சாய் கொண்டு உயிர் மண்ணில் வாழும் நாட்கள்.

முப்பாழையும் ஒருவனால் தாண்டி சமாதி நிலைக்கு செல்ல முடியுமானால், அவனே  காலத்தை வென்றவன் ஆவான்.



கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...