Friday, January 7, 2022

ஒளி நினைவுகள்

என் நினைவுகள் 

எல்லாம் ஒளியாக 




 'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..'  - இருபத்தி நான்கு வயது இந்துவின் குரல் கெஞ்சியது.

'சார்.. ப்ளீஸ், என்னை விட்ருங்க.. கொல்லாதீங்க..' - தூக்கத்தில் அலறிக்கொண்டெழுந்தாள் ஒன்பது வயது பிருந்தா.

பக்கத்தில் படுத்திருந்த அம்மாவுக்கு தூக்கிவாரிப்போட்டது. 

மறுபடியுமா?

'எத்தனையோ சிகிச்சைகள், மாந்த்ரீகம் செய்தும், மகளின் வேதனை தீரவில்லையே ஆண்டவா.. மகளைக்காப்பாற்று..' என்று  வேண்டுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை அம்மாவிற்கு.

காலையில் முதல் வேலையாக மகளை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு சென்றவளுக்கு, அங்கேயும் ஒரு சோதனை.

சந்தோசமாக கோயில் மணியை அடித்த பிருந்தாவின் பின்மண்டையை இடித்து சென்றது வெண்கல மணி.

மயங்கி விழுந்தவளை, தண்ணீர் தெளித்து எழுப்பியபோதுதான் அந்த அதிர்ச்சிகரமான கேள்வி வந்தது பிருந்தாவிடமிருந்து.

'நீங்கள் யார்? நான் எங்கிருக்கிறேன்?' 

'விளையாடாதே, பிருந்தா.. நான் அம்மா.. நாம் கோயிலுக்கு வந்திருக்கிறோம்'

'இல்லை, நான் பிருந்தா இல்லை. என் பெயர் இந்து'

'உங்களை எல்லாம் நான் பார்த்ததே கிடையாது' - பிருந்தாவின் கண்களில் இருந்த மிரட்சி அவள் பொய் சொல்லவில்லை என்று சொல்லியது.

இரவு நல்ல தூக்கம் இல்லாததால் குழந்தை ஏதோ கனவில் வந்ததை உளறுகிறது, என்றெண்ணியவாறே வீட்டுக்கு அழைத்து வந்தாள்  அம்மா.

முன்பின் பழக்கமற்ற மூன்றாவது மனிதர்களிடம் பழகுவதுபோல் இருந்த பிருந்தா, தன்னுடைய நினைவுகளை சொல்ல ஆரம்பித்தாள், பெற்றோரிடம்.

'என் பெயர் பிருந்தா. எனக்கு இருபத்தி நான்கு வயசு. ரொம்ப அழகாக இருப்பேன். ஹைதராபாதில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன்.' - தொடர்ந்தாள் பிருந்தா.

'மேனேஜர் விக்ரம் சார், எப்பொழுதும் என்னையே சுற்றிக்கொண்டிருப்பார்'

'ஒரு முறை, ஒரு பைலை எடுத்துக்கிட்டு அவருடைய வீட்டுக்கு வர சொன்னார். நானும் கொண்டு போனேன். அங்கேதான், என் கழுத்தை நெரித்து கொன்று விட்டார்' - விக்கி விக்கி அழுதாள் பிருந்தா.

இதற்கு மேலும் பொறுக்காத பெற்றோர்கள், பிருந்தா அடையாளம் காட்டிய, இந்துவின் உடல் புதைக்கப்பட்டிருந்த இடத்தை காட்டி, விக்ரமை சட்டத்தின் வளையத்துக்குள் கொண்டு வந்தார்கள்.

மேலே சொன்னது கதையல்ல நிஜம், சென்ற வாரம் ஆந்திராவில் நடந்தது. செய்திகளில் பெண்ணின் படத்துடன் பரபரப்புடன் பேசப்பட்டது.

இனி நம் சிந்தனைக்கு..

இந்து கொல்லப்பட்டவுடன், உயிர் அவள் உடலைப் பிரிந்துவிட்டது.

புதைத்த இடத்தை உயிர் பார்த்தது எப்படி? புலன்வழி உணர்வுகள் உடலோடு முடிந்து விட்டதே!

உயிர் காற்றில் கலந்திருக்கும் என்பது நாம் அறிந்த உண்மை. உயிரை சுற்றி ஒளி வடிவில் நினைவிருக்கும் என்பது நம்புவதற்கு கஷ்டமான உண்மை.

என் நினைவுகள்                                                                                                                                                     எல்லாம் ஒளியாக..

                                                                          - கவியரசு கண்ணதாசன்  

எடுத்த  அத்தனை ஜென்மங்களின்  நினைவுகளின்  சேமிப்பு, ஒலியும்  ஒளியுமாக  உள்ள உயிராக,  நம்முடன் தொடர்கிறது.

உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன்
வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி
விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி
வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே.

                                                                                                - திருமந்திரம் 2641

உள்ளத்தின் ஒளியாக உடலின் உள்ளே இருப்பது உயிர். உள்ளம்தானே  நினைவுகளின் சேமிப்பு பெட்டகம்.

உள்ளத்துக்குள்ளே ஓளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா 

                                                                                 - கவியரசு கண்ணதாசன் 





No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...