அர்த்தநாரி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப்போல் பாவை
தெரியுதடி
'அர்த்தநாரி அல்லது மாதொருபாகன் என்றால்தான் என்ன?'
'ஹரத என்றால் பாதி. நாரி என்றால் பெண். இறைவன் பாதிப்பெண்ணானால் அர்த்தநாரி. மாதினை உடலின் ஒரு பாகமாக கொண்டால் மாதொருபாகன்.
'ஆண் பாதி, பெண் பாதியாக உள்ள ஓருடலாய் இறைவனை உருவகப்படுத்துவது சரியா?'
'எதனை எடுத்துரைக்க இந்த அவதாரம்?'
நம்முடைய உடலினை, அதன் ஆரம்பத்திலிருந்து பார்ப்போம்.
மனித உடலின் ஆதிக்கு செல்வோம். அங்கே ஆதியாய் ஆரம்பித்தது ஒரு செல், அதாவது ஒரு சிற்றறை. அந்த சிற்றறைக்குள் என்ன இருந்தது என்று பார்ப்போம், இப்போது.
ஓர்எழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈர்எழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
'மூ'எழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாஎழுத் தாலே மயக்கமே உற்றதே.
- திருமந்திரம் 885
ஓர் எழுத்து என்பது 'அ'காரம். சிவன் அகாரத்தால் உலகமுழுதும் [சிற்றறை] தானாகி, 'உ'காரத்தால் உடம்பினுள் [சிற்றறைக்குள்] கலந்து, மூவெழுத்தாகிய 'ம'காரத்தால் சக்தியுடன் [சிற்றறைக்கு சக்தி] இணைந்து, ஒளிப்பிழம்பாகவும், நாத மயமாகவும் விளங்குகிறான்.
அகாரம் + உகாரம் + மகாரம் = ஓம்
பிரணவ மந்திரம், 'ஓம்', நம் உடலில் பிரபஞ்ச நாதம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அர்த்தநாரி அல்லது மாதொருபாகன்.
முதல் சிற்றறை தொடங்கி, அதன் அம்சமாக கோடி கோடியான சிற்றறைகளாக, நம் உடல் இப்போது.
'பார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிவது இதனால்தான்'
அறிவியலும் இந்த சிற்றறை சித்தாந்தத்தில் அடங்கி போவதையும் பார்ப்போம்:
ஒரு காலத்தில், இதற்குமேல் பிரிக்க முடியாத சிறிய பகுதியாக அறியப்பட்டது அணுத்துகள். அதனை, பிரித்து பார்த்தபோது கிடைத்தது, மூன்று பொருள்கள்.
1. நியூட்ரான் 2. புரோட்டான் 3. எலக்ட்ரான்
நியூட்ரானும், புரோட்டானும் கரு மையமாக நின்றிருக்க, எலெக்ட்ரான் கரு மையத்தை சுற்றிவரும்.
புரோட்டானில் உள்ள நேர்மறை சக்தி எண்ணிக்கைக்கு சமமான எதிர்மறை சக்தி எண்ணிக்கை எலெக்ட்ரானில் இருக்கும்.
அதாவது,
நீ பாதி - நான் பாதி கண்ணே!
No comments:
Post a Comment