கண்ணழகு
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு கண்களில் தெரியும்
கண்களின் அழகு விழிகளில் தெரியும்
விழிகளில் அழகு உயிராய் தெரியும்.
'அவள் கவிஞனாக்கினாள் என்னை'
மலரின் நறுமணம் தன்னை காட்டி நிற்கும். செய்யும் செயலே உண்மையை அறியச் செய்துவிடும். உள்ளத்தில் பொதிந்த எண்ணத்தை மனம் சொல்லுமுன்னர் முகமே சொல்லிவிடும்.
நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம்
முகம்போல முன்னுரைப்ப தில்.
- நான்மணிக்கடிகை 48
முகத்தையும் முந்திவிடும் கண்கள். பேசக்கூட செய்யும் என்கிறார் வள்ளுவர்.
இரண்டு ஜோடி காதல் கண்கள் காணும்போது பேச்சுக்கு அங்கே வேலை இல்லையாம்!
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
என்ன பயனும் இல.
- திருக்குறள் 1100
மலரோடு மணம் பொருந்தி இருப்பதைப் போன்றே பெண்ணுடன் உருவத்தில் இறைவன் பொருந்தி இருப்பதை உணர மாட்டார்கள். காதலில் கரு உயிர்க்க பெண்ணுடன் கலக்கின்றபோது, அங்கே பெருஞ்சோதியாக இறைவன் விளங்கி நிற்கின்றான்.
மருவொத்த மங்கையுந் தானும் உடனே
உருவொத்து நின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின் றபோது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
- திருமந்திரம் 1137
No comments:
Post a Comment